புண்ணாக்கு தழை மருத்துவம்
உடலில் எந்த பாகத்தில் சுளுக்கு ஏற்பட்டு வலி தாங்க முடியாமல் இருந்தால் இந்த வைத்தியம் மிக உபயோகமாக இருக்கும்.
நம் வீட்டைச் சுற்றிலும் மற்றும் வாய்க்கால் வரப்பு தரிசு நிலங்களில் எங்கும் காணக்கிடைப்பது "புண்ணாக்கு தழை" என்றும் "பிண்ணாக்கு தழை" என்றும் அழைக்கப்படக்கூடிய செடியாகும்.
இந்த செடியின் இலைகளை ஒரு கைப்பிடி அல்லது தேவையான அளவு பறித்துக் கொண்டு வந்து அதை அம்மியிலிட்டு மைய அரைத்து (விழுதாக அரைத்து) உடலின் எந்த பாகத்தில் சுளுக்கு அல்லது இரத்தக்கட்டு இருக்கிறதோ... அந்த இடத்தில் பூச வேண்டும்.
அரைமணி நேரம் கழித்து பூசப்பட்ட பகுதியை தண்ணீரில் மூழ்கும்வரை 10 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.
அப்பொழுது இரத்தக்கட்டு உள்ள நரம்பு பகுதிகளில் இரத்தக்கட்டு இருப்பதை நாம் காணலாம். சிறிது நேரத்தில் அந்த இரத்தக்கட்டு தண்ணீரில் கரைந்து வெளியெறுவதை காணலாம்.
முழுவதுமாக இரத்தக்கட்டு நீங்கும் வரை காத்திருந்து பின்பு வெளியே எடுங்கள். இப்போது சுளுக்கு நீங்கியிருப்பதையும், வலி முழுவதும் குறைந்திருப்பதையும், இரத்தக்கட்டு மறைந்திருப்பதையும் காணலாம்.
இது எனது அனுபவபவர்வமான கட்டுரை. பலருக்கும் பயன் தரும் என்பதால் அநேகருடைய நன்மையைக் கருதி வெளியிடுகிறேன்.