அக்டோபர் 26, 2015

பரிட்சை எழுதும் மாணவர்களுக்கான ஜெபம்

Image result for பரிட்சை எழுதும் மாணவர்கள்

பரிட்சைக்கு ஆயத்தப்படும்போது செய்ய வேண்டிய ஜெபம்


அன்புள்ள பரலோக தகப்பனே,

நீர் மிகுந்த இரக்கமுள்ளவர் என்பதையும், உம்மைத்தேடி வருகிற எவரையும் நீர் புறம்பே தள்ளுவதில்லை (யோவா: 6:37) என்ற அருள் வாக்கையும் நம்பி உம்மிடம் வந்து மன்றாடுகிறேன். நான் எதிர்நோக்கியிருக்கும் பரிட்சைகளை குறித்த என்னுடைய கவலைகளையும், பயங்களையும் நீர் அறிந்திருக்கிறீர்.

எனவே, என் இருதயத்தையும், ஆத்துமாவையும் உம்முடைய தெய்வீகபிரசன்னத்தினால் நிரப்பி, என் வாழ்க்கையின் தேவனாய் இரும். தயவாக என் பெலவீனங்கள், கவனக்குறைவுகள், பயங்கள், பரபரப்புகள், தடைகள் யாவையும் எடுத்துப்போட்டு, பரிட்சைக்கு ஆயத்தப்படும் இந்த நாட்களில் முழுகவனத்தையும் என்னுடைய பாடங்களில் செலுத்தி, நேரத்தை வீணாக்காமல் படிக்க, “எனக்கு பயமுள்ள ஆவியை கொடாமல், பலமும், அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியை கொடுத்து என்னை ஆசீர்வதியும்” (2தீமோ: 1:7).

 “நான் உனக்குப் போதித்து, நீ நடக்க வேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்” (சங்: 32:8) என்றபடி, எந்த பாடத்தை எப்படி படிக்க வேண்டும் என்று எனக்கு கற்றுத்தாரும். என் பக்கத்தில் உட்கார்ந்து எனக்கு தெரியாத பகுதிகளை சொல்லித் தாரும்.

 “உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூர்ணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்து கொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன். அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும்” (யாக்: 1:5) என்ற வசனத்தின்படி தெய்வீக ஞானத்தையும், ஞாபக்தியையும் எனக்குத் தாரும். நான் படிப்பதெல்லாம் அப்படியே என் மனதில் தங்கவும், அவை பரிட்சை நேரத்தில் என் ஞாபகத்திற்கு வரவும், எனக்கு விசேஷித்த ஞாபகசக்தியைத் தாரும்.
 நீர் என் மன்றாட்டைக் கேட்டதற்காக நன்றி. இந்த ஜெபத்தை ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் ஈடு இணையற்ற நாமத்தில் ஏறெடுக்கிறேன் எங்கள் நல்லப்பிதாவே. ஆமென்!

பரிட்சை நாட்களில் செய்ய வேண்டிய ஜெபம்


அன்புள்ள பரலோக தகப்பனே!

“ஜெபத்தைக் கேட்கிறவர்” என்ற நாமத்தை நீர் கொண்டிருப்பதால் உம்மிடத்தில் நம்பிக்கையோடு வருகிறேன் (சங்: 65:2). நான் இப்பொழுது எழுதப்போகும் பரிட்சைக்கு தேவையான ஞானம், ஞாபக சக்தி, ஆரோக்கியம், தைரியம்  நீர் எனக்கு அளித்து, உதவி செய்யும்படி மன்றாடுகிறேன். இந்த ஆசீர்வாதங்களை முழுமையாகப் பெற்று அனுபவிக்க தடையாக உள்ள என் பாவங்கள் யாவையும் உம் இரத்தத்தால் கழுவி, என்னை தூய்மைப்படுத்தும். என்னை உம் பிள்ளையாக மாற்றியிருக்கிறபடியால் உமக்கு நன்றி.

 “என் சமூகம் உனக்கு முன்பாக செல்லும்” என்ற உமது வாக்குப்படி, உம்பிரசன்னத்தால் என்னை நிரப்பும். என்னோடு வாரும்.

“நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்” (ஏசா: 41:10) என்று எழுதியிருக்கிறபடியே, இன்று நான் தேர்வு எழுதப்போகும் அறையில் உம் பிரசன்னத்தை அதிகமாக உணர, எனக்கு உம் அருள் தாரும். உம் வார்த்தையின்படியே, என் கரத்தை உம் வலதுகரத்தினால் தாங்கும். அப்பொழுது என்னால் முழு நிச்சயத்துடன் என் பரிட்சைகளை எழுதமுடியும். எல்லா கேள்விகளுக்கும் விடையளிக்கவும், ஒவ்வொரு கேள்விக்கும் தகுந்த பதிலை அதுவும் கொடுக்கப்படுகிற நேரத்திற்குள் முழுமையாக எழுதி முடிக்கவும் உதவி செய்யும்.

 என் தேர்வையும், அதின் முடிவுகளையும் உம்முடைய வல்லமையுள்ள கரங்களில் ஒப்படைக்கிறேன். “குதிரை யுத்தநாளுக்கு ஆயத்தமாக்கப்படும்; ஜெயமோ கர்த்தரால் வரும்” (நீதி: 21:31) என்ற வாக்கின்படி, எனக்கு ஜெயம் தாரும். இப்பொழுதும் என் ஜெபத்தைக் கேட்கிறதற்காக நன்றி.

இந்த விண்ணப்பங்களையெல்லாம், எனக்கு ஜெயம் கொடுக்கப்போகிற ஜெயக்கிறிஸ்துவின் நாமத்தில் ஏறெடுக்கிறேன் எங்கள் நல்லப்பிதாவே. ஆமென்.


அக்டோபர் 16, 2015

ஆத்துமாக்கள் சபையில் நிலைநிற்க

Image result for soul winning

ஆத்துமாக்கள் சபையில் நிலைநிற்க

“நீங்கள் தேவனுக்குச் சித்தமானவைகளெல்லாவற்றிலும் தேறினவர்களாயும் பூரண நிச்சயமுள்ளவர்களாயும் நிலைநிற்கவேண்டுமென்று, தன் ஜெபங்களில் உங்களுக்காக எப்பொழுதும் போராடுகிறான்” (கொலோ: 4:12)

(ஒவ்வொரு சபைப் போதகப்பிதாக்களும், சபைமக்களும் இவ்வேதவசனத்தை அறிக்கையிட்டு ஜெபிக்கும்படி அன்பாய் கேட்கிறேன்)

1.   “இஸ்ரவேலை சிதறடித்தவர் அதைச் சேர்த்துக் கொண்டு, ஒரு மேய்ப்பன் தன் மந்தையைக் காக்கும் வண்ணமாக அதைக்காப்பார்” (எரே: 31:10)

2.   “பாபிலோன் நடுவிலிருந்தோடி, கல்தேயரின் தேசத்தைவிட்டுப் புறப்பட்டு, மந்தையின் முன் நடக்கும் கடாக்களைப்போல் இருங்கள்” (எரே: 50:8)

3.   “கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் நானே என் ஆடுகளை விசாரித்து, அவைகளைத் தேடிப்பார்ப்பேன். ஒரு மேய்ப்பன் சிதறுண்ட தன் ஆடுகளின் நடுவே இருக்கிற நாளில் தன் மந்தையைத் தேடிக்கொண்டிருக்கிறதுபோல, நான் என் ஆடுகளைத் தேடி, மப்பும் மந்தாரமுமான நாளிலே அவைகள் சிதறுண்டுபோன எல்லா இடங்களிலுமிருந்து அவைகளைத் தப்பிவரப்பண்ணி, அவைகளை ஜனங்களிடத்திலிருந்து புறப்படவும், தேசங்களிலிருந்து சேரவும் பண்ணி, அவைகளுடைய சுயதேசத்திலே அவைகளைக் கொண்டுவந்து, இஸ்ரவேல்மலைகளின் மேலும் ஆறுகள் அண்டையிலும் தேசத்தின் சகல வாசஸ்தலங்களிலும் அவைகளை மேய்ப்பேன். அவைகளை நல்லமேய்ச்சலிலே மேய்ப்பேன்; இஸ்ரவேலுடைய உயர்ந்த மலைகளில் அவைகளுடைய தொழுவம் இருக்கும்; அங்கே அவைகள் நல்ல தொழுவத்தில் படுத்துக் கொள்ளும், இஸ்ரவேலின் மலைகளின்மேல் நல்ல மேய்ச்சலை மேயும். என் ஆடுகளை நான் மேய்த்து, அவைகளை நான் மடக்குவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்” (எசேக்: 34:11-15)

4.   “கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேல் வம்சத்தாருக்காக நான் இதை அநுக்கிரகஞ்செய்யும்படி அவர்கள் என்னிடத்தில் விண்ணப்பம் பண்ண வேண்டும்; மந்தை பெருகுகிறதுபோல் அவர்களில் மனுஷரைப் பெருகப் பண்ணுவேன்” (எசேக்: 36:37)

5.   “யாக்கோபின் ஜனங்களே, உங்களெல்லாரையும் நான் நிச்சயமாய்க்கூட்டுவேன், இஸ்ரவேலில் மீதியானவர்களை நிச்சயமாய் சேர்ப்பேன்; போஸ்றாவின் ஆடுகளைப்போல் அவர்களை ஏகக்கூட்டமாக்குவேன், தன் தொழுவத்துக்குள்ளே சேர்ந்த மந்தைக்குச் சமானமாய் ஜனத்திரளினாலே இரைச்சல் உண்டாகும். தடைகளை நீக்கிப்போடுகிறவர் அவர்களுக்கு முன்பாக நடந்துபோகிறார்; அவர்கள் தடைகளை நீக்கி, வாசலால் உட்பிரவேசித்துக் கடந்துபோவார்கள்; அவர்கள் ராஜா அவர்களுக்கு முன்பாகப் போவார், கர்த்தர் அவர்கள் முன்னணியில் நடந்துபோவார்” (மீகா: 2:12,13)

6.   “கர்மேலின் நடுவிலே தனித்து வனவாசமாயிருக்கிற உமது சுதந்தரமான மந்தையாகிய உம்முடைய ஜனத்தை உமது கோலினால் மேய்த்தருளும்; பூர்வநாட்களில் மேய்ந்தது போலவே அவர்கள் பாசானிலும் கீலேயாத்திலும் மேய்வார்களாக” (மீகா: 7:14)

7.   “யோசியா இஸ்ரவேல் புத்திரருடைய தேசங்கள் எங்கும் உண்டான அருவருப்புகளையெல்லாம் அகற்றி, இஸ்ரவேலிலே காணப்பட்டவர்களையெல்லாம் தங்கள் தேவனாகிய கர்த்தரை விட்டுப் பின்வாங்கினதில்லை” (2நாளா: 34:33)

8.   “எங்கள் மீறுதல்கள் உமக்கு முன்பாக மிகுதியாயிருந்து, எங்கள் பாவங்கள் எங்களுக்கு விரோதமாய்ச் சாட்சி சொல்லுகிறது; எங்கள் மீறுதல்கள் எங்களோடே இருக்கிறது; எங்கள் அக்கிரமங்களை அறிந்திருக்கிறோம். கர்த்தருக்கு விரோதமாய்த் துரோகம் பண்ணி, பொய்பேசி, எங்கள் தேவனைவிட்டுப் பின்வாங்கினோம்; கொடுமையாகவும், கலகமாகவும் பேசினோம்; கள்ள வார்த்தைகளைக் கர்ப்பந்தரித்து, இருதயத்திலிருந்து பிறப்பிக்கப்பண்ணினோம்” (ஏசா: 59:12,13)

9.   “கற்பாறையின்மேல் விதைக்கப்பட்டவர்கள் கேட்கும்போது சந்தோஷத்துடனே வசனத்தை ஏற்றுக்கொள்ளுகிறார்கள்; ஆயினும் தங்களுக்குள்ளே வேர்கொள்ளாதபடியி னாலே, கொஞ்சக்கால மாத்திரம் விசுவாசித்து, சோதனை காலத்தில் பின்வாங்கிப் போகிறார்கள்” (லூக்: 8:13)

10. “விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான், பின்வாங்கிப்போவானானால் அவன்மேல் என் ஆத்துமா பிரியமாயிராது என்கிறார். நாமோ கெட்டுப்போகப் பின்வாங்குகிறவர் களாயிராமல், ஆத்துமா ஈடேற விசுவாசிக்கிறவர்களாயிருக்கிறோம்” (எபி: 10:38,39)

11. “தேசங்களின் ஜனங்களைவிட்டுப் பிரிந்து விலகித் தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்குத் திரும்பின அனைவரும், அவர்கள் மனைவிகளும், அவர்கள் குமாரரும், அவர்கள் குமாரத்திகளுமாகிய அறிவும், புத்தியும் உள்ளவர்ளெல்லாரும், தங்களுக்குப் பெரியவர்களாகிய தங்கள் சகோதரரோடே கூடிக்கொண்டு, தேவனுடைய தாசனாகிய மோசேயைக்கொண்டு கொடுக்கப்பட்ட நியாயப்பிரமாணத்தின்படி நடந்து கொள்வோம் என்றும், எங்கள் ஆண்டவராகிய கர்த்தரின் கற்பனைகளையும், சகல நீதிநியாயங்களையும், கட்டளைகளையும் எல்லாம் கைக்கொண்டு, அவைகளின்படி செய்வோம் என்றும், நாங்கள் எங்கள் குமாரத்திகளை தேசத்தின் ஜனங்களுக்குக் கொடாமலும், எங்கள் குமாரருக்கு அவர்கள் குமாரத்திகளைக் கொள்ளாமலும் இருப்போம் என்றும், தேசத்தின் ஜனங்கள் ஓய்வுநாளிலே சரக்குகளையும், எந்தவிதத் தானியதவசத்தையும் விற்கிறதற்குக் கொண்டுவந்தால், நாங்கள் அதை ஓய்வுநாளிலும் பரிசுத்தநாளிலும் அவர்கள் கையில் கொள்ளாதிருப்போம் என்றும் … ஆணையிட்டு பிரமாணம் பண்ணினார்கள்” (நெகே: 10:28-31)

12. “தேமா இப்பிரபஞ்சத்தின்மேல் ஆசைவைத்து, என்னை விட்டுப் பிரிந்து, தெசலோனிக்கே பட்டணத்துக்குப் போய்விட்டான்;” (2தீமோ: 4:10)

13. “பிரிந்துபோகிறவன் தன் இச்சையின்படி செய்யப்பார்க்கிறான்” (நீதி: 18:1)

14. “அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்து போனார்கள்; ஆகிலும் அவர்கள் நம்முடையவர்களா யிருக்கவில்லை; நம்முடையவர்களாயிருந்தார்களானால் நம்முடனே நிலைத்திருப்பார் களே; எல்லாரும் நம்முடையவர்களல்லவென்று வெளியாகும்படிக்கே பிரிந்து போனார்கள்” (1யோவா: 2:19)

15.   “கடைசிகாலத்திலே தங்கள் துன்மார்க்கமான இச்சைகளின்படி நடக்கிற பரியாசக்காரர் தோன்றுவார்கள் என்று உங்களுக்குச் சொன்னார்களே. இவர்கள் பிரிந்து போகிறவர்களும், ஜென்மசுபாவத்தாரும், ஆவியில்லாதவர்களுமாமே” (யூதா: 18,19)

16. “உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்;உம்முடைய வசனமே சத்தியம்” (யோவா: 17:17)

17. “பரிசுத்த பிதாவே, நீர் எனக்குத் தந்தவர்கள் நம்மைப்போல ஒன்றாயிருக்கும்படிக்கு, நீர் அவர்களை உம்முடைய நாமத்தினாலே காத்துக் கொள்ளும். நான் அவர்களுடனேகூட உலகத்திலிருக்கையில் அவர்களைக் காத்துக் கொண்டேன்; நீர் எனக்குத் தந்தவர்களை காத்துக் கொண்டு வந்தேன்; வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக, கேட்டின் மகன் கெட்டுப்போனானேயல்லாமல், அவர்களில் ஒருவனும் கெட்டுப்போகவில்லை” (யோவா: 17:11-12)

18. “நீர் அவர்களை உலகத்திலிருந்து எடுத்துக்கொள்ளும்படி வேண்டிக்கொள்ளாமல், நீர் அவர்களைத் தீமையினின்று காக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன்” (யோவா: 17:15)

19. “ஒருமைப்பாட்டில் அவர்கள் தேறினவர்களாயிருக்கும்படிக்கும், … நான் எங்கே இருக்கிறேனோ அங்கே அவர்களும் என்னுடனே கூட இருக்க விரும்புகிறேன்” (யோவா: 17:23,24)

20. “நீர் என்னிடத்தில் வைத்த அன்பு அவர்களிடத்திலிருக்கும்படிக்கும், நானும் அவர்களிலிருக்கும்படிக்கும், உம்முடைய நாமத்தை அவர்களுக்குத் தெரியப்படுத்தினேன்; இன்னமும் தெரியப்படுத்துவேன்” (யோவா: 17:26)

21. “என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; … ஒருவன் என்னில் நிலைத்திராவிட்டால், வெளியே எறியுண்ட கொடியைப்போல அவன் எறியுண்டு உலர்ந்து போவான்; … நீங்கள் என் அன்பிலே நிலைத்திருங்கள்” (யோவா: 15:4,6,9)

22. “என் நாமத்தினிமித்தம் நீங்கள் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள்; முடிவுப்பரியந்தம் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான்” (மத்: 10:22)
23. “நீங்கள் என் உபதேசத்திலே நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள்” (யோவா: 8:31)

24. “பர்னபா … தேவனுடைய கிருபையைக் கண்டபோது, சந்தோஷப்பட்டு, கர்த்தரிடத்தில்  மனநிர்ணயமாய் நிலைத்திருக்கும்படி எல்லாருக்கும் புத்திசொன்னான்” (அப்: 11:23)

25. “சீஷருடைய மனதை திடப்படுத்தி, விசுவாசத்திலே நிலைத்திருக்கும்படி அவர்களுக்குப் புத்திசொல்லி, நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க வேண்டுமென்று சொன்னார்கள்” (அப்: 14:22)

26. “ஆகையால், தேவனுடைய தயவையும் கண்டிப்பையும் பார்; விழுந்தவர்களிடத்திலே கண்டிப்பையும், உன்னிடத்திலே தயவையும் காண்பித்தார்; அந்தத் தயவிலே நிலைத்திருப்பாயானால் உனக்குத் தயவு கிடைக்கும்; நிலைத்திராவிட்டால் நீயும் வெட்டுண்டு போவாய். அன்றியும், அவர்கள் அவிசுவாசத்திலே நிலைத்திராதிருந்தால் அவர்களும் ஒட்டவைக்கப்படுவார்கள்; அவர்களை மறுபடியும் ஒட்டவைக்கிறதற்குத் தேவன் வல்லவராயிருக்கிறாரே ” (ரோம: 11:22,23)

27. “அவனவன் தான்அழைக்கப்பட்ட நிலைமையிலே நிலைத்திருக்கக்கடவன்” (1கொரி:7:20)

28. “விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள், புருஷராயிருங்கள், திடன் கொள்ளுங்கள்” (1கொரி: 16:13)

29. “நீங்கள் கேட்ட சுவிசேஷத்தினால் உண்டாகும் நம்பிக்கையைவிட்டு அசையாமல், ஸ்திரமாயும் உறுதியாயும் விசுவாசத்திலே நிலைத்திருப்பீர்களானால் அப்படியாகும்” (கொலோ: 1:22)

30. “நீ தேறுகிறது யாவருக்கும் விளங்கும்படி இவைகளையே சிந்தித்துக் கொண்டு, இவைகளிலே நிலைத்திரு” (1தீமோ: 4:15)

31. “உத்தம விதவையாயிருந்து தனிமையாயிருக்கிறவள் தேவனிடத்தில் நம்பிக்கையுள்ள வளாய், இரவும் பகலும் வேண்டுதல்களிலும் ஜெபங்களிலும் நிலைத்திருப்பாள்” (1தீமோ:5:5)

32. “அந்த விசுவாசம் முந்தி உன் பாட்டியாகிய லோவிசாளுக்குள்ளும் உன் தாயாகிய ஐனிக்கேயாளுக்குள்ளும் நிலைத்திருந்தது; அது உனக்குள்ளும் நிலைத்திருக்கிறதென்று நிச்சயித்திருக்கிறேன்” (2தீமோ: 1:5)

33. “சுயாதீனப்பிரமாணமாகிய பூரணப்பிரமாணத்தை உற்றுப்பார்த்து, அதிலே நிலைத்திருக் கிறவனே கேட்கிறதை மறக்கிறவனாயிராமல், அதற்கேற்ற கிரியை செய்கிறவனாயிரு ந்து, தன் செய்கையில் பாக்கியவானாயிருப்பான்”  (யாக்: 1:25)

34. “அவருக்குள் நிலைத்திருக்கிறேனென்று சொல்லுகிறவன், அவர் நடந்தபடியே தானும் நடக்க வேண்டும்” (1யோவா: 2:6)

35. “உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்” (1யோவா: 2:17)

36. “அவருடைய கட்டளைகளை கைக்கொள்ளுகிறவன் அவரில் நிலைத்திருக்கிறான், அவரும் அவனில் நிலைத்திருக்கிறார்; அவர் நம்மில் நிலைத்திருக்கிறதை அவர் நமக்குத் தந்தருளின ஆவியினாலே அறிந்திருக்கிறோம்” (1யோவா: 3:24)

37. “எல்லாவற்றையும் முறுமுறுப்பில்லாமலும் தர்க்கிப்பில்லாமலும்செய்யுங்கள்”(பிலி:2:16)

38. “திராட்சத்தோட்டங்களைக் கெடுக்கிற குழிநரிகளையும், சிறுநரிகளையும் நமக்குப் பிடியுங்கள்; நம்முடைய திராட்சத்தோட்டங்கள் பூவும் பிஞ்சுமாயிருக்கிறதே” (உ.பா:1:15)


39. “என் ஜனமாகிய குமாரத்தியே, நீ இரட்டைக் கட்டிக் கொண்டு, சாம்பலிலே புரண்டு, ஒரே புத்திரனுக்காகத் துக்கிக்கிறதுபோல மனங்கசந்து புலம்பு” (எரே: 6:26)  

அக்டோபர் 15, 2015

தேவனுடைய ராஜ்யம் வருவதாக

Image result for kingdom of god on earth as it is in heaven

இயேசுவின் ராஜ்யம் வருவதாக

(வேதவசன அறிக்கை ஜெபம்)

1.   நான் தேவனுடைய விரலினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே” (லூக்: 11:20)

2.   “நான் தேவனுடைய ஆவியினாலே பிசாசுகளைத் துரத்தகிறபடியால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே” (மத்: 12:28)

3.   “காலம் நிறைவேறிற்று, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்று” (மாற்: 1:15)

4.   “தேவனுடைய ராஜ்யம் சீக்கிரமாய் வெளிப்படும்” (லூக்: 19:11)

5.   “அவருடைய ராஜ்யத்திற்கு முடிவிராது” (லூக்: 1:33)

6.   “கர்த்தரின் நாமத்தினால் வருகிற நம்முடைய பிதாவாகிய தாவீதின் ராஜ்யம் ஆசீர்வதிக்கப்படுவதாக” (மாற்: 11:10)

7.   “உம்முடைய ராஜ்யம் சதாகாலங்களிலுமுள்ள ராஜ்யம், உம்முடைய ஆளுகை தலைமுறை தலைமுறையாகவும் உள்ளது” (சங்: 145:13)

8.   “அவருடைய அடையாளங்கள் எவ்வளவு மகத்துவமும் அவருடைய அற்புதங்கள் எவ்வளவு வல்லமையுமாயிருக்கிறது; அவருடைய ராஜ்யம் நித்திய ராஜ்யம்; அவருடைய ஆளுகை தலைமுறை தலைமுறையாக நிற்கும்” (தானி: 4:3)

9.   “அவர் ஜீவனுள்ள தேவன், அவர் என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறவர்; அவருடைய ராஜ்யம் அழியாதது; அவருடைய கர்த்தத்துவம் முடிவுபரியந்தமும் நிற்கும்” (தானி:6:26)

10. “சகல ஜனங்களும் ஜாதியாரும், பாஷைக்காரரும் அவரையே சேவிக்கும்படி, அவருக்குக் கர்த்தத்துவமும் மகிமையும் ராஜரீகமும் கொடுக்கப்பட்டது; அவருடைய ராஜ்யம் அழியாததுமாயிருக்கும்” (தானி: 7:14)

11. “வானத்தின் கீழெங்குமுள்ள ராஜ்யங்களின் ராஜரீகமும் ஆளுகையும் மகத்துவமும் உன்னதமானவருடைய பரிசுத்தவான்களாகிய ஜனங்களுக்குக் கொடுக்கப்படும்; அவருடைய ராஜ்யம் நித்திய ராஜ்யம்; சகல கர்த்தத்துவங்களும் அவரைச் சேவித்து, அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கும் என்றான்” (தானி: 7:27)

12. “பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப்  பூமியிலேயும் (என்னிலும், என் குடும்பத்திலும், என் சபையிலும், என் பட்டணத்திலும், என் கிராமத்திலும், என் மாநிலத்திலும், என் தேசத்திலும்) செய்யப்படுவதாக” (மத்: 6:9,10)

13. “அப்பொழுது சேனைகளின் கர்த்தர் சீயோன் மலையிலும், எருசலேமிலும் ஆளுகை செய்வதால், சந்திரன் கலங்கும், சூரியன் நாணமடையும்; அவருடைய மூப்பர்களுக்கு முன்பாக மகிமை உண்டாயிருக்கும்” (ஏசா: 24:23)

14. “உன்னதமானவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகை செய்து, தமக்குச் சித்தமாயிருக்கிறவனுக்கு அதைக் கொடுக்கிறார்” (தானி: 4:25)

15. “உன்னதமான தேவன் மனுஷரின் ராஜ்யத்தில் ஆளுகை செய்து, தமக்குச் சித்தமானவனை அதின்மேல் அதிகாரியாக்குகிறார்” (தானி: 5:21)

16. “மந்தையின் துருக்கமே, சீயோன் குமாரத்தியின் அரணே, முந்தின ஆளுகை உன்னிடத்தில் வரும்; ராஜரிகம் எருசலேம் குமாரத்தியினிடத்தில் வரும்” (மீகா: 4:8)

17. “அவரே கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுவார்; அவர் மகிமை பொருந்தினவராய், தம்முடைய சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்து ஆளுகை செய்வார்; தம்முடைய சிங்காசனத்தின்மேல் ஆசாரியராயும் இருப்பார்; இவ்விரண்டின் நடுவாகச் சமாதானத்தின் ஆலோசனை விளங்கும்” (சகரி: 6:13)

18. “எப்பிராயீமினின்று இரதங்களையும் எருசலேமினின்று குதிரைகளையும் அற்றுப்போகப் பண்ணுவேன், யுத்தவில்லும் இல்லாமற்போகும்; அவர் ஜாதிகளுக்கு சமாதானம் கூறுவார்; அவருடைய ஆளுகை ஒரு சமுத்திரந்தொடங்கி மறு சமுத்திரம் வரைக்கும், நதி தொடங்கி பூமியின் எல்லைகள் பரியந்தமும் செல்லும்” (சகரி: 9:10)

19. “கர்த்தர் சதாகாலங்களாகிய என்றென்றைக்கும் ராஜரிகம் பண்ணுவார்” (யாத்: 15:18)

20. “கர்த்தர் வானங்களில் தமது சிங்காசனத்தை ஸ்தாபித்திருக்கிறார்; அவருடைய ராஜரீகம் சர்வத்தையும் ஆளுகிறது” (சங்: 103:19)

21. “கர்த்தர் சதாகாலங்களிலும் அரசாளுகிறார்; சீயோனே, உன் தேவன் தலைமுறை தலைமுறையாகவும் ராஜரிகம் பண்ணுகிறார். அல்லேலூயா” (சங்: 146:10)

22. “இதோ நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது தாவீதுக்கு ஒரு நீதியுள்ள கிளையை எழும்பப்பண்ணுவேன்; அவர் ராஜாவாயிருந்து, ஞானமாய் ராஜரிகம்பண்ணி, பூமியிலே நியாயத்தையும் நீதியையும் நடப்பிப்பார்” (எரே: 23:5)

23. “கர்த்தர் ராஜரிகம் பண்ணுகிறார், மகத்துவத்தை அணிந்துகொண்டிருக்கிறார்; கர்த்தர் பராக்கிரமத்தை அணிந்து, அவர் அதைக் கச்சையாகக் கட்டிக் கொண்டிருக்கிறார்; ஆதலால், பூச்சக்கரம் அசையாதபடி நிலைபெற்றிருக்கிறது” (சங்: 93:1)

24. “கர்த்தர் ராஜரிகம்பண்ணுகிறார்; பூமிபூரிப்பாகி, திரளானதீவுகள் மகிழக்கடவது” (சங்:97:1)

25. “கர்த்தர் ராஜரிகம்பண்ணுகிறார்; ஆகையால் பூச்சக்கரம் அசையாதபடி உறுதிப்பட்டிருக்கும்; அவர் ஜனங்களை நிதானமாய் நியாயந்தீர்ப்பார் என்று ஜாதிகளுக்குள்ளே சொல்லுங்கள்” (சங்: 96:10)

26. “வானங்கள் மகிழ்ந்து, பூமிபூரிப்பதாக; கர்த்தர் ராஜரிகம் பண்ணுகிறார் என்று ஜாதிகளுக்குள்ளே சொல்லப்படுவதாக” (1நாளா: 16:31)

27. “சமுத்திரமும் அதின் நிறைவும் முழங்கி, நாடும் அதிலுள்ள யாவும் களிகூறுவதாக. கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது” (1நாளா: 16:32,34)

நாமகிரிப்பேட்டையில் தேவனுடைய ராஜ்யம் வருவதற்கு விரோதமாய் செயல்படும் எல்லாவித ஆவிகளையும் ஒரு திரி அணைகிறதுபோல் அணைந்துபோவதாக. ஆமென்.


அக்டோபர் 14, 2015

ஆத்தும இரட்சிப்பிற்கான வசன அறிக்கை

Image result for salvation of soul

சபைக்குள் வரப்போகும் பலவான்களுக்கான வசன அறிக்கை

“பலவான்களை அவர் தமக்குக் கொள்ளையாகப் பங்கிட்டுக் கொள்வார்” (ஏசா: 53:12)

1.   "என்னைக் கேளும், அப்பொழுது ஜாதிகளை உமக்கு சுதந்தரமாகவும், பூமியின் எல்லைகளை உமக்குச் சொந்தமாகவும் கொடுப்பேன்” (சங்: 2:8)

2.   இன்னும் ஜனங்களும் அநேகம் பட்டணங்களின் குடிகளும் வருவார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். ஒரு பட்டணத்தின்குடிகள் மறு பட்டணத்தின் குடிகளிடத்தில் போய், நாம் கர்த்தருடைய சமுகத்தில் விண்ணப்பம்பண்ணவும் சேனைகளின் கர்த்தரைத் தேடவும் தீவிரித்துப்போவோம் வாருங்கள்; நாங்களும் போவோம் என்று சொல்லுவார்கள். அநேக ஜனங்களும் பலத்த ஜாதிகளும் எருசலேமிலே சேனைகளின் கர்த்தரைத் தேடவும், கர்த்தருடைய சமுகத்தில் விண்ணப்பம் பண்ணவும் வருவார்கள். அந்நாட்களில் பலவித பாஷைக்காரராகிய புறஜாதியாரில் பத்து மனுஷர் ஒரு யூதனுடைய வஸ்திரத்தொங்கலைப் பிடித்துக் கொண்டு: தேவன் உங்களோடே இருக்கிறார் என்று கேள்விப்பட்டோம்; ஆகையால் உங்களோடேகூடப் போவோம் என்று சொல்லி, அவனைப் பற்றிக்கொள்வார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்றார்” (சக: 8:20-23)

3.   “ஏரோதின் காரியக்காரனான கூசாவின் மனைவியாகிய யோவன்னாளும், சூசன்னாளும் தங்கள் ஆஸ்திகளால் அவருக்கு ஊழியஞ்செய்து கொண்டு வந்த மற்ற அநேகம் ஸ்திரீகளும் அவருடனே இருந்தார்கள்” (லூக்: 8:3)

4.   “இரதத்தை நிறுத்தச் சொன்னான். அப்பொழுது பிலிப்பும் மந்திரியும் ஆகிய இருவரும் தண்ணீரில் இறங்கினார்கள். பிலிப்பு அவனுக்கு ஞானஸ்நானங் கொடுத்தான்” (அப்:8:38)

5.   ஜனங்களின் பிரபுக்கள் ஆபிரகாமின் தேவனுடைய ஜனங்களாகச் சேர்க்கப்படுகிறார்கள்; பூமியின் கேடகங்கள் தேவனுடையவைகள்; அவர் மகா உன்னதமானவர்” (சங்: 47:9)

6.   “சிலர் அவனைப்பற்றிக்கொண்டு, விசுவாசிகளானார்கள். அவர்களில் மார்ஸ்மேடையின் நியாயாதிபதிகளில் ஒருவனாகிய தியொனீசியு என்பவனும், தாமரி என்னும் பேருள்ள ஒரு ஸ்திரீயும், இவர்களுடனே வேறு சிலரும் இருந்தார்கள்” (அப்:17:34)

7.   “அப்பொழுது தியத்தீரா ஊராளும் இரத்தாம்பரம் விற்கிறவளும் (தொழிலதிபர்கள், மொத்த வியாபாரிகள்) தேவனை வணங்குகிறவளுமாகிய லீதியாள் என்னும் பேருள்ள ஒரு ஸ்திரீ கேட்டுக் கொண்டிருந்தாள்; பவுல் சொல்லியவைகளைக் கவனிக்கும்படி கர்த்தர் அவள் இருதயத்தைத் திறந்தருளினார்” (அப்: 16:14)

8.   “தினந்தோறும் தேவாலயத்திலேயும், வீடுகளிலேயும் இடைவிடாமல் உபதேசம்பண்ணி, இயேசுவே கிறிஸ்துவென்று பிரசங்கித்தார்கள்” (அப்: 5:42)


9.   “அவர்கள் புறப்பட்டுப்போய், எங்கும் பிரசங்கம் பண்ணினார்கள். கர்த்தர் அவர்களுடனே கூடக் கிரியையை நடப்பித்து, அவர்களால் நடந்த அடையாளங்களினாலே வசனத்தை உறுதிப்படுத்தினார். ஆமென்” (மாற்: 16:20)

ஜெப சவாரி வேதவசன அறிக்கை - 1

Image result for prayer safari

ஜெப சவாரி வேதவசன அறிக்கை - 1

அ) பாகால் வல்லமை இயேசுவின் நாமத்தினால் அற்றுப் போவதாக

“அவர்கள் அங்கே வந்து, அதில் சீயென்றிகழப்பட்டதும் அருவருக்கப்படத்தக்கதுமாயிருக்கிற           - தையெல்லாம் அதிலிருந்து அகற்றுவார்கள்” (எசேக்: 11:18)

1. “வானத்தையும் பூமியையும் உண்டாக்காத தெய்வங்கள், பூமியிலும் இந்த வானத்தின்கீழும் இராதபடிக்கு அழிந்துபோகும் என்பதை அவர்களுக்குச் சொல்லுங்கள்” (எரே: 10:11)

2. “மேடைகளில் பலியிடுகிறவனையும் தன் தேவர்களுக்கு தூபங்காட்டுகிறவனையும் ஓயப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்” (எரே: 48:35)

3. “பாகால்களுடைய நாமங்களை அவள் வாயிலிருந்து அற்றுப்போகப் பண்ணுவேன்; இனி அவைகளின் பேரைச் சொல்லி, அவைகளை நினைக்கிற நினைப்பும் இல்லாமற் போகும்” (ஓசி: 2:17)

4. “சகல ஜனங்கள் மேலுமுள்ள முக்காட்டையும், சகல ஜாதிகளையும் மூடியிருக்கிற மூடலையும், இந்த மலையிலே அகற்றிப் போடுவார்” (ஏசா: 25:7)

5. “கர்த்தர் அவர்கள் மேல் கெடியாயிருப்பார்; பூமியிலுள்ள தேவர்களையெல்லாம் மெலிந்து போகப்பண்ணுவார்; அப்பொழுது தீவுகளிலுள்ள சகல புறஜாதிகளும் அவரவர் தங்கள் தங்கள் ஸ்தானத்திலிருந்து அவரைப் பணிந்து கொள்வார்கள்” (செப்: 2:11)

6. “கர்த்தருடைய கரம் இந்த மலையிலே தங்கும்; கூளம் எருக்களத்தில் மிதிக்கப்படுவது போல, மோவாப் அவர்கீழ் மிதிக்கப்பட்டுப்போம்” (ஏசா: 25:10)

7. “நான் கட்டுக்கதைக்காரரின் குறிகளை அபத்தமாக்கி, குறிசொல்லுகிறவர்களை நிர்மூடராக்கி, ஞானிகளை வெட்கப்படுத்தி, அவர்கள் அறிவைப் பைத்தியமாகப் பண்ணுகிறவர்” (ஏசா: 44:25)

8. “அப்பொழுது நரரின் மேட்டிமை தாழ்ந்து, மனுஷரின் வீறாப்புத் தணியும்; கர்த்தர் ஒருவரே அந்நாளில் உயர்ந்திருப்பார். விக்கிரகங்கள் கட்டோடே ஒழிந்துபோம்” (ஏசா: 2:17,18)

9. “இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் காண்டார்கள்; மரணஇருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின்மேல் வெளிச்சம் பிரகாசித்தது” (ஏசா: 9:2)

10. ஜனங்களின் பிரபுக்கள் ஆபிரகாமின் தேவனுடைய ஜனங்களாக சேர்க்கப்படுகிறார்கள்; பூமியின் கேடகங்கள் தேவனுடையவைகள்; அவர் மகா உன்னதமானவர்” (சங்: 47:9)

11. “விக்கிரகங்கள் அவருக்கு முன்பாக குலுங்கும்” (ஏசா: 19:1)

12. “அவைகள் தீமை செய்யக் கூடாது, நன்மை செய்யவும் அவைகளுக்குச் சக்தி இல்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்” (எரே: 10:5)

13. “வார்ப்பித்த விக்கிரகம் பொய்யே, அவைகளில் ஆவி இல்லை” (எரே: 10:14)

14. “நரகலானவிக்கிரகங்களை அழித்து, நோப்பின்சிலைகளை ஒழியப்பண்ணுவேன்” எசே:30:13

15. சுரூபங்கள் எல்லாம் நொறுக்கப்படும், அதின் விக்கிரகங்களை எல்லாம் பாழாக்குவேன்” (மீகா: 1:7)

16. “வெட்டப்பட்ட விக்கிரகத்தையும், வார்க்கப்பட்ட விக்கிரகத்தையும் நான் நிர்மூலம் பண்ணுவேன்” (நாகூம்: 1:14)

17. “நான் விக்கிரகங்களின் பேரும் தேசத்தில் இராதபடிக்கு அழிப்பேன்; அவைகள் இனி நினைக்கப்படுவதில்லை. தரிசனம் சொல்லுகிறவர்களையும், அசுத்த ஆவியையும் தேசத்திலிருந்து போய் விடவும் பண்ணுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்” (சகரி: 13:2)

18. “விக்கிரகங்களை உண்டு பண்ணுகிற அனைவரும் வெட்கப்பட்டு இலச்சையடைந்து, ஏகமாய்க் கலங்கிப் போவார்கள்” (ஏசா: 45:16)

19. “உங்கள் பலிபீடங்கள் நிர்மூலமும் பாழுமாகும்படிக்கும், உங்கள் நரகலான விக்கிரகங்கள் தகர்க்கப்பட்டு, ஓய்ந்து, உங்கள் சிலைகள் வெட்டுண்டு, உங்கள் கிரியைகள் குலைந்து போகும்படிக்கும், உங்களுடைய சகல வாசஸ்தலங்களிலுமுள்ள பட்டணங்கள் நிர்மூலமும் உங்கள் மேடைகள் பாழுமாகும்” (எசே: 6:6)

20. “ஆகையால், நீ இஸ்ரவேல் வம்சத்தாரை நோக்கி: திரும்புங்கள், உங்கள் நரகலான விக்கிரகங்களை விட்டுத் திரும்புங்கள்; உங்கள் சகல அருவருப்புகளையும் விட்டு, உங்கள் முகங்களை திருப்புங்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்” (எசே: 14:6)

21. “உங்களில் அவரவர் தங்கள் கண்களால் நோக்கின அருவருப்புகளைத் தள்ளி விட்டு, எகிப்தின் நரகலான விக்கிரகங்களால் உங்களைத் தீட்டுப்படுத்தாதிருப்பீர்களாக” (எசே: 20:7)

22. “நீங்கள் உங்கள் பிதாக்களின் முறைமைகளில் நடவாமலும் அவர்களுடைய நியாயங்களைக் கைக்கொள்ளாமலும், அவர்களுடைய நரகலான விக்கிரகங்களால் உங்களைத் தீட்டுப்படுத்தாமலும் இருங்கள்” (எசே: 20:18)


23. “அப்பொழுது நான் உங்கள்மேல் சுத்தமான ஜலம் தெளிப்பேன்; நான் உங்களுடைய எல்லா அசுத்தங்களையும் உங்களுடைய எல்லா நரகலான விக்கிரகங்களையும் நீக்கி உங்களைச் சுத்தமாக்குவேன், நீங்கள் சுத்தமாவீர்கள்” (எசே: 36:25)