ஜூன் 18, 2015

அமாவாசை ஜெப விண்ணப்பங்கள் - 1

நேசரின் தோட்டம் ஏ.ஜி.சபையின் அமாவாசை ஜெபம்

1.   தலை (Head) 2. ஜீவன் (Life)  3. பெலன் (Strength)  4. சுகம் (Health)  5. பரிபூரணம் (Fulness)

(கீழ்கண்ட 7 காரியங்களின் தேவைகள் சந்திக்கப்பட, மேலே கண்ட 5 தலைப்புகளில் உள்ள வசனங்களை வாசித்து அறிக்கையிட்டு ஜெபிப்போம்) 

1. சபை:  ஆராதனை, ஜெபம், ஊழியம், வருகைக்கு ஆயத்தமாகுதல் 

 தரிசனம், இலக்கு, திட்டம், செயல்பாடு நிறைவேற...  
  
மொத்த மக்கள் தொகை: 1,09,963 பேர்  *சபைக்கு தசமபாகமாக மக்கள் தேவை10,907 பேர்      

நாமகிரிப்பேட்டை மையப்பகுதி மக்கள் தொகை: 12,675 பேர்.  * சபைக்கு தசமபாகமாக மக்கள் தேவை2007 பேர் 

2015 முதல் 2020 க்குள் சபைக்கு 2000 பேர் இரட்சிப்பின் அனுபவத்தைப் பெற்று சபைக்கு ஆராதனைக்கு கடந்து வர                                

2. குடும்பம்: அங்கத்தினர், உறவுகள்

3. ஆவிக்குரிய வாழ்வு: இரட்சிப்பு, விசுவாசம், பரிசுத்தம், வேதவாசிப்பு, ஜெபம், அபிஷேக நிறைவு, ஆத்தும மற்றும் ஊழிய பாரம்

4. தனி நபர்: ஆவி, ஆத்துமா, சரீரம்

5. கையின் பிரயாசம்: வேலை, தொழில், வியாபாரம், பிரயாணம், எதிர்பார்ப்புகள், முயற்சிகள், முதலீடுகள்

6. குறைவுகள்: சுகவீனம், கடன், சத்துருக்கள், உடைந்த உறவுகள், தடைகள், வன்கண், வறுமை, வேலையின்மை, அவமானம், நிந்தை, எதிர்மறை மனப்போக்கு, எதிரான சூழல், வளர்ச்சியின்மை

7. ஆசீர்வாதம்: கட்டுமானம், கல்வி, திருமணம், குழந்தை பாக்கியம், பதவி உயர்வு, மேன்மை, புகழ், கனம், செல்வாக்கு, மனுஷர் தயவு, தேவ கிருபை

1.  தலை (Head)

1கொரி: 11:3 – “ஒவ்வொரு புருஷனுக்கும் கிறிஸ்து தலையாயிருக்கிறாரென்றும், ஸ்திரீக்கு புருஷன் தலையாயிருக்கிறானென்றும், கிறிஸ்துவுக்கு தேவன் தலையாயிருக்கிறாரென்றும் நீங்கள் அறிய வேண்டுமென்று விரும்புகிறேன்”

எபேசி: 1:23 – “எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறவருடைய நிறைவாகிய சரீரமான சபைக்கு அவரை எல்லாவற்றிற்கும் மேலான தலையாகத் தந்தருளினார்”

எபேசி: 5:23 – “கிறிஸ்து சபைக்கு தலையாயிருக்கிறதுபோல… அவரே சரீரத்திற்கும் இரட்சகராயிருக்கிறார்”

ஆதி: 3:15 – “… அவர் உன் தலையை நசுக்குவார்….”

2.  ஜீவன் (Life)

நீதி: 8:35 – “என்னைக் கண்டடைகிறவன் ஜீவனைக் கண்டடைகிறான்; கர்த்தரிடத்தில் தயவையும் பெறுவான்”

நீதி: 19:23 – “கர்த்தருக்கு பயப்படுதல் ஜீவனுக்கேதுவானது; அதை அடைந்தவன் திருப்தியடைந்து நிலைத்திருப்பான்; தீமை அவனை அணுகாது”

யோவா: 10:10 – “… நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்”

யோவா: 10:11 – “நானே நல்ல மேய்ப்பன்; நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான்”

அப்: 17:25 – “எல்லாருக்கும் ஜீவனையும் சுவாசத்தையும் சகலத்தையும் கொடுக்கிறவர்”

கொலோ: 3:3 – “உங்கள் ஜீவன் கிறிஸ்துவுடனே தேவனுக்குள் மறைந்திருக்கிறது”

1யோவா: 5:12 –குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன், ஜீவன் இல்லாதவன்”

3.  பெலன் (Strength)

யாத்: 15:2 – “கர்த்தர் என் பெலனும் கீதமுமானவர்”

சங்: 29:11 – “கர்த்தர் தமது ஜனத்திற்குப் பெலன் கொடுப்பார்; கர்த்தர் தமது ஜனத்திற்கு சமாதானம் அருளி, அவர்களை ஆசீர்வதிப்பார்”

எரே: 16:19 – “என் பெலனும், என் கோட்டையும், நெருக்கப்படுகிற நாளில் என் அடைக்கலமுமாகிய கர்த்தாவே”

1கொரி: 1:18 – “சிலுவையைப் பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவ பெலனாயிருக்கிறது”

1கொரி: 1:24 – “… எவர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்களோ… அவர்களுக்குக் கிறிஸ்து தேவபெலனும் தேவஞானமுமாயிருக்கிறார்”

சங்: 84:5 – “உம்மிலே பெலன் கொள்ளுகிற மனுஷன் பாக்கியவான்”

ஏசா: 40:29 – “சோர்ந்து போகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப் பண்ணுகிறார்”

ஏசா: 40:31 – “கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப் போலச் செட்டைகளை அடித்து  எழும்புவார்கள்; இவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்து போகார்கள்”

ஏசா: 41:1 – “… ஜனங்கள் தங்கள் பெலனைப் புதிதாக்கிக் கொண்டு, சமீபித்து வந்து, பின்பு பேசக்கடவர்கள்” 

2கொரி: 12:9 – “… என் கிருபை எனக்குப் போதும் பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்”

எபேசி: 6:10 – “கடைசியாக, என் சகோதரரே, கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள்”

4.  சுகம் (Health)

ஏசா: 1:5,6 – “… தலையெல்லாம் வியாதியும், இருதயமெல்லாம் பலட்சயமுமாய் இருக்கிறது. உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலை மட்டும் அதிலே சுகமேயில்லை”

அப்: 3:16 – “அவருடைய நாமத்தைப் பற்றும் விசுவாசத்தினாலே … இந்த சர்வாங்க சுகத்தை … கொடுத்தது”

மாற்: 5:34 – “… உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது… உன் வேதனை நீங்கி சுகமாயிரு”

சங்: 4:8 – “சமாதானத்தோடே படுத்துக் கொண்டு நித்திரை செய்வேன்; கர்த்தாவே, நீர் ஒருவரே என்னை சுகமாய்த் தங்கப்பண்ணுகிறீர்”

சங்: 122:7 – “ உன் அலங்கத்திற்குள்ளே சமாதானமும், உன் அரமனைகளுக்குள்ளே சுகமும் இருப்பதாக”

ஏசா: 58:8 – “உன் சுக வாழ்வு சீக்கிரத்தில் துளிர்த்து, உன் நீதி உனக்கு முன்னாலே செல்லும்; கர்த்தருடைய மகிமை உன்னைப் பின்னாலே காக்கும்”

5.  பரிபூரணம் (Fulness)

யோவா: 1:16 – “அவருடைய பரிபூரணத்தினால் நாம் எல்லாரும் கிருபையின்மேல் கிருபை பெற்றோம்”

யோவா: 10:10 – “… நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்”

2கொரி: 7:4 – “… எங்களுக்கு உண்டான சகல உபத்திரவத்திலேயும் பரிபூரண சந்தோஷமாயிருக்கிறேன்”

எபே: 3:19 – “… தேவனுடைய சகல பரிபூரணத்தாலும் நிறையப்படவும், அவர் தமது மகிமையினுடைய ஐசுவரியத்தின்படியே, உங்களுக்கு அநுக்கிரகம் பண்ண வேண்டுமென்று வேண்டிக் கொள்ளுகிறேன்”

கொலோ: 1:19 – “சகல பரிபூரணமும் அவருக்குள்ளே வாசமாயிருக்கவும்”

கொலோ: 2:9 – “தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் வாசமாயிருக்கிறது”

கொலோ: 2:10 – “மேலும், சகல துரைத்தனங்களுக்கும் அதிகாரத்துக்கும் தலைவராயிருக்கிற அவருக்குள் நீங்கள் பரிபூரணமுள்ளவர்களாயிருக்கிறீர்கள்”

சங்: 16:11 – “… உம்முடைய சமூகத்தில் பரிபூரண ஆனந்தமும், உம்முடைய வலதுபாரிசத்தில் நித்திய பேரின்பமும் உண்டு”


மத்: 13:12 – “உள்ளவன் எவனோ அவனுக்குக் கொடுக்கப்படும், பரிபூரணமும் அடைவான்”