புத்தாண்டு ஆசீர்வாதங்களுக்காக தேவனைத் துதிப்போம்!
1.
நம் தேசத்தில் அவரது ஆளுகை உண்டாகும்படியாக
2.
நம் தேசத்தில் அவரது சித்தம் நிறைவேறும்படியாக
3.
நம் தேசத்தில் அவரது நாமம் மகிமைப்படும்படியாக
4.
நம் தேசத்தில் அவரது இராஜ்யம் வரும்படியாக
5.
நம் தேசத்தில் சுவிசேஷத்திற்காக திறந்த வாசல் ஏற்படும்படியாக
6.
நம் தேசம் இரட்சிக்கப்படும்படியாக, ஆட்சியாளர்கள்
மனந்திரும்ப
7.
நம் தேசம் இயேசுவே தேவன் என்று அறியும்படியாக
8.
கர்த்தரை துதிக்கும் தேசமாக மாறும்படியாக
9.
நம் தேசம் கர்த்தரை அறிகிற அறிவினால் நிரப்பப்படும்படியாக
10. சமாதானமுள்ள
தேசமாக மாறும்படியாக, கிறிஸ்துவுக்கு விரோதமான கிரியைகள் அற்றுப்போக
11. வறுமை
நீங்கி வளம் பெறும் நாடாக மாறும்படியாக
12. நம் தேசம்
தேவ பிரசன்னத்தினால் மூடப்படும்படியாக
அவரே நித்தியானந்தமுள்ள ஏக சக்ராதிபதியும்,
இராஜாதி இராஜாவும், கர்த்தாதி கர்த்தாவும், ஒருவராய் சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத
ஒளியில் வாசம் பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும் காணக்கூடாதவருமாயிருக்கிறவர்;
அவருக்கே கனமும், நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக. ஆமென்! (2தீமோத்தேயு:
6:15,16)
13. சபைகள்
இல்லாத இடங்களில் சபைகள் நிறுவப்படும்படியாக
14. சொந்த
இடமில்லாத சபைகளுக்கு இடங்கள் வாங்கும்படியாக
15. மிஷினெரிகள்
இல்லாத இடங்களுக்கு மிஷினெரிகள் அனுப்பப்படும்படியாக
16. தரிசனமுள்ள
ஊழியர்கள், மிஷினெரிகள் தேசத்தில் பெருகும்படியாக
17. ஊழியங்களை
தாங்குவோர் தேசத்தில் திரளாக எழும்பும்படியாக
18. தேசத்திற்காக
ஜெபிப்போர் திரள் கூட்டம் பெருகும்படியாக
19. ஆத்துமாதய
அறுவடை பணி தீவிரப்படுத்தப்படும்படியாக
20. தேசத்திற்காக
முழங்காலில் நிற்போர் எழும்பும்படியாக
21. தேசத்தில்
மகிமையான எழுப்புதல் உண்டாகும்படியாக
22. தேசத்தில்
தேவனுடைய பலத்த கிரியைகள் வெளியரங்கமாக்கப்படும்படியாக
23. தேசத்திலுள்ள
அனைத்து தேவபிள்ளைகளையும் தேவன் பாதுகாக்கும்படியாக
24. தேசத்திலுள்ள
அனைத்து ஊழியர்களையும் குடும்பங்களையும் பாதுகாக்கும்படியாக
கர்த்தரோ மெய்யான தெய்வம், அவர் ஜீவனுள்ள தேவன் நித்திய
ராஜா, அவருடைய கோபத்தினால் பூமி அதிரும். அவருடைய உக்கிரத்தை ஜாதிகள்
சகிக்கமாட்டார்கள். வானத்தையும் பூமியையும்
உண்டாக்காத தெய்வங்கள், பூமியிலும், இந்த வானத்தின் கீழும் இராதபடி,
அழிந்து போகும் என்பதை அவர்களுக்குச் சொல்லுங்கள். (எரேமியா:10:11)
25. திருச்சபைகளில்
பரிசுத்த ஆவியானவரின் முழு ஆளுகை உண்டாகும்படியாக
26. தினந்தோறும்
சபைகள் சத்தியத்தில் வளர்ந்து பெருகும்படியாக
27. திருச்சபைகளில்
அற்புத அடையாளங்கள் மூலமாக தேவவசனம் உறுதிப்படும்படியாக
28. திருச்சபைகள்
உயிர்மீட்சி பெற்று எழுப்புதல் அடையும்படியாக
29. தேவனின்
பரிபூரண சித்தம் திருச்சபைகளில் முழுமையாக
நிறைவேறும்படியாக
30. திருச்சபைகளில்
ஐந்துவிதமான ஊழியங்கள் நடைபெறும்படியாக
31. தினந்தோறும்
திருச்சபைகள் ஆத்துமாக்களால் நிரப்பப்பட்டு வளர்ந்து பெருகும்படியாக
32. திருச்சபைகள்
இரண்டாம் வருகைக்கு ஆயத்தப்படும்படியாக
33. திருச்சபைகளின்
இலக்குகள், தரிசனங்கள், நோக்கங்கள், திட்டங்கள் நிறைவேறும்படியாக
34. திருச்சபைகளில்
ஒருமனம் ஒற்றுமை, சமாதானம் பெற்று சாட்சியாக விளங்கும்படியாக
35. திருச்சபை
மக்கள் தேவராஜ்ய மனப்பான்மையுடன் செயல்படும்படியாக
36. திருச்சபைகளில்
தேவமகிமை, தேவபிரசன்னம், தேவவல்லமை, இரட்சிப்பு வெளிப்படும்படியாக
நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும்
சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்தாவி நாமத்திலே அவர்களுக்கு ஞாணஸ்நானம் கொடுத்து, நான்
உங்களுக்கு கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்.
இதோ உலகத்தின் முடிவுபரியந்தமும் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன். (மத்தேயு:
28:19,20)
37. விதைக்கப்படாத
இடத்தில் விதைக்கும்படியான தரிசனம் உண்டாகும்படி
38. சந்திக்கப்படாத
ஜனங்களைக் குறித்ததான ஆத்துமபாரம் உண்டாக
39. அநேகர்
மிஷினெரி ஊழியத்திற்கு தன்னை அர்ப்பணிக்க
40. மிஷினெரி
ஊழியத்தைக் குறித்த தரிசனம் பெற்ற திருச்சபைகள் எழும்ப
41. மிஷினெரி
ஊழியத்திற்கு கொடுக்கிற ஜெபிக்கிற ஜனங்கள் எழும்ப
42. தேவ பிள்ளைகள்
ஆத்தும பாரத்தோடு ஊழியம் செய்திட
43. தேசத்தில்
ஜெபவீரர்கள் திரள் திரளாக எழும்ப
44. ஜெபவீரர்கள்
சபை மற்றும் தேசத்தை குறித்த தரிசனம், பெற்றவர்களாய் இருக்க
45. ஜெபவீரர்கள்
தேவனின் இருதய பாரத்தை அறிந்தவர்களாக இருக்க
46. ஜெபவீரர்களை
தேவன் தமது மன்றாட்டின் ஆவியால் நிரப்ப
47. ஜெபவீரர்கள் மத்தியில் மாபெரும்
எழுப்புதல் உண்டாகும்படியாக
48. தேவனுடைய பரிபூரண
சித்தம் சுவிசேஷ ஊழியத்தில் நிறைவேற
குறித்த காலத்துக்குத் தரிசனம் இன்னும் வைக்கப்பட்டிருக்கிறது;
முடிவிலே அது விளங்கும், அது பொய் சொல்லாது; அது தாமதித்தாலும் அதற்குக் காத்திரு;
அது நிச்சயமாய் வரும், அது தாமதிப்பதில்லை (ஆபகூக்: 2:3)
49.
சபையின் தரிசனத்தோடு இணைந்து செயல்படுகிறவர்கள் எழும்ப
50.
சபையின் தரிசனத்தை சுமக்கிறவர்களாயிருக்க
51.
சபையின் தரிசனத்திற்காக பிரயாசப்பட
52.
சபைவளர்ச்சியின் மேல் கரிசனையுள்ளவர்களாயிருக்க
53.
தரிசனம் உண்டாக உபவாசிக்கும் ஜெபவீரர்களை தேவன் எழுப்ப
54.
தரிசனம் உண்டாக விழித்து ஜெபிக்கும் ஜெபவீரர்களை தேவன் எழுப்ப
55.
தரிசனம் உண்டாக ஜாமங்காத்து ஜெபிக்கும் ஜெபவீரர்கள் எழும்ப
56.
தனிநபர் எழுப்புதல், குடும்பத்தில் எழுப்புதல், சமுதாயத்தில் எழுப்புதல்
ஏற்பட
57.
தனித்தாள், தெருப்பிரசங்கம், கைப்பிரதிகள் மூலம் ஜனங்கள் சந்திக்கப்பட
58.
சீஷத்துவப் பயிற்சி, ஊழியப் பயிற்சி, மூப்பர் பயிற்சி, வேத பாடம் மூலம்
ஆவிக்குரிய வளர்ச்சி பெற
59.
புதிய தரிசனம், புதிய சிந்தை, புதிய நோக்கம், புதிய திட்டம் பெற்றுக்
கொள்ள
60.
பரம தரிசனத்துக்கு கீழ்படிகிற தாழ்மைக்காக
கர்த்தரே தேவனென்று அறியுங்கள்; நாம் அல்ல, அவரே
நம்மை உண்டாக்கினார்; நாம் அவர் ஜனங்களும், அவர் மேய்ச்சலின் ஆடுகளுமாயிருக்கிறோம் (சங்கீதம்:
100:3)
61.
சபைமேல், ஊழியர்மேல், ஊழியத்தின்மேல் கரிசனை, அக்கறை செலுத்துவோர்கள்
எழும்ப
62.
பகுதி நேர மற்றும் முழுநேர ஊழியத்திற்கு அர்ப்பணிக்க
63.
ஆண்கள் ஐக்கியம், பெண்கள் ஐக்கியம் வளர, செயல்பட
64.
வாலிபர் கூட்டம், சிறுவர் ஊழியம் சிறப்பாக நடைபெற
65.
ஜெபக்குழுக்கள், பராமரிப்புக் குழுக்கள் மூலம் மாபெரும் எழுப்புதல்
ஏற்பட
66.
ஆவிக்குரிய தலைவர்கள் எண்ணிக்கையில் பெருக
67.
மாணவர் ஊழியம் மூலம் ஆத்துமாக்கள் சந்திக்கப்பட
68.
பின்தொடர் ஊழியம், தனித்தாள் ஊழியம் செய்கிறவர்களை தேவன் எழுப்ப
69.
பிள்ளைகளை ஒப்புக் கொடுக்கும் தாய்மார்கள், கர்த்தர் சொன்னதை நிறைவேற்றும்
தகப்பன்மார், ஊழியத்திற்கு உதவிடும் தம்பதிகள் எழும்ப
70.
இசைக்குழு, பாடகர் குழு, ஜெபக்குழு, பணிவிடைக்குழு எழும்ப
71.
இரத்தக்கோட்டை ஜெபம், இரவு ஜெபம், உபவாச ஜெபம், ஜாமக்காரன் ஜெபத்தின்
மூலம் எழுப்புதல் அடைய
72.
கிளை சபைகளை நிறுவ, தேவைகள் சந்திக்கப்பட, கிளைசபைகள் வளர
நித்தியமும்
அழிவில்லாமையும் அதரிசனமுள்ள ராஜனுமாய், தாம் ஒருவரே ஞானமுள்ள தேவனுமாயிருக்கிறவருக்கு,
கனமும் மகிமையும் சதா காலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென் (1தீமோத்தேயு: 1:17)