செப்டம்பர் 13, 2013
ஞானஸ்நானம் எடுத்த பின்பு செய்ய வேண்டியவைகள்
1. தினமும் ஜெபம் பண்ண வேண்டும். நன்றி சொல்லுதல், நமது தேவைகளுக்காக அவரை நம்பியிருத்தல், பிறருக்காக மன்றாடுதல், அவர் சித்தம் அறிய
2. தினமும் வேதம் வாசித்தல். தேவன் மனிதர்களுக்கு அருளிய மிக பெரிய பொக்கிஷம் பரிசுத்த வேதாகமம்.
3. வாரந்தோறும், ஞாயிறு ஆராதனையில் பங்கெடுத்து, அவரை மகிமைப்படுத்த வேண்டும்.
4. அவர் நமக்கு கொடுத்திருக்கும் வரங்கள், தாலந்துகள், திறமைகளை அவருடைய சரீரமாகிய சபையின் ஆசீர்வாதத்திற்காக பயன்படுத்த வேண்டும.
5. பராமரிப்பு குழுவில் அங்கம் வகிக்க வேண்டும்.
6. வேத பாட வகுப்பில் கலந்து கொள்ள வேண்டும்
7. சபையின் அங்கத்தினராக மாறிவிடுகிறீர்கள்.சபையின் அனைத்து காரியங்களுக்கும் பொறுப்பானவர்கள். (தேவனுடைய நாமம் உங்களால் வீணிலே வழங்கப்படக் கூடாது. சபைக்கு உத்திரவாதமுள்ளவர்களாய் நடந்து கொள்ள வேண்டும்)
8. திருவிழாக்களில் கலந்து கொள்வதில் மிக அதிக கவனம் தேவை.
9. தசமபாகம் கொடுக்க வேண்டும். நம்முடைய வருமானத்தில் பத்தில் ஒரு பங்கை கொடுக்க வேண்டும்.
10. தேவனுக்கு பயந்து நடக்க வேண்டும். அவரை நேசித்து ஆராதிக்க வேண்டும், அவரை பிரியப்படுத்த வேண்டும். அவர் சித்தம் செய்ய வேண்டும்.
சீஷர்களுக்குரிய அடையாளங்கள்.
மத் 28:18-20 சீஷராக்குங்கள்
1. (லூக் 14:26) யாதொருவன் என்னிடத்தில் வந்து, தன் தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரரையும் சகோதரிகளையும், தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.
2. (லூக் 14:27) தன் சிலுவையைச் சுமந்துகொண்டு எனக்குப் பின்செல்லாதவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.
3. (லூக் 14:33) அப்படியே உங்களில் எவனாகிலும் தனக்கு உண்டானவைகளையெல்லாம் வெறுத்துவிடாவிட்டால் அவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.
4. (யோவா 8:31) இயேசு தம்மை விசுவாசித்த யூதர்களை நோக்கி: நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள்
5. (யோவா 13:35) நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள் என்றார்.
6. யோவா 15:8) நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுப்பதனால் என் பிதா மகிமைப்படுவார், எனக்கும் சீஷராயிருப்பீர்கள்.
7. (அப் 14:22) சீஷருடைய மனதைத் திடப்படுத்தி, விசுவாசத்திலே நிலைத்திருக்கும்படி அவா;களுக்குப் புத்திசொல்லி, நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய்த் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கவேண்டுமென்று சொன்னார்கள்.
8. (லூக் 6:40) சீஷன் தன் குருவுக்கு மேற்பட்டவனல்ல, தேறினவன் எவனும் தன் குருவைப்போலிருப்பான்.
9. (மத் 24:13) முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்.
10. (அப் 11:26) சீஷர்களே கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்பட்டார்கள்.
சபை வளர்ச்சி அடைய
திருச்சபை வளர்ச்சி:
திருச்சபை வளர வேண்டிய பகுதிகள் ஆவிக்குரிய காரியங்களில் வளர வேண்டும் எண்ணிக்கையில் வளர வேண்டும்.
ஆத்தும ஆதாயம் பொருளாதாரத்தில் வளர வேண்டும் ஊழியம் செய்வதில் வளர வேண்டும்.
கிளை சபைகள் உருவாக வேண்டும் மிஷனெரி ஊழியங்களுக்காக ஜெபிக்க, கொடுக்க வேண்டும்.
முழு நேர ஊழியர்கள் உருவாக வேண்டும்
திருச்சபையில் காணப்பட வேண்டிய அம்சங்கள்:
1. ஆராதனையில் பலமாக இருக்கிற திருச்சபை பெருகும்
2. ஐக்கியத்தில் அனலாக இருக்கிற திருச்சபை வளரும்
3. சீஷத்துவத்தில் ஆழமாக இருக்கிற திருச்சபை வளரும்
4. நற்செய்தி பணியில் பெரிதாக இருக்கிற திருச்சபை பெருகும்
5. சேவை செய்வதில் அகலமாக இருக்கிற திருச்சபை வளரும்
ஒரு திருச்சபையின் மதிப்பீடுகள்:
* விதிமுறைகள் அல்ல உறவுமுறைகள் முக்கியம்
* மக்கள் விருப்பம் அல்ல தேவ சித்தம் முக்கியம்
* சபைக்கு வருகிறவர்கள் அல்ல சீஷர்கள் முக்கியம்
* எண்ணிக்கை அல்ல மறுரூபம் முக்கியம்
* மனித பாரட்டுகள் அல்ல தேவ மகிமை முக்கியம்
* திறமைகள் அல்ல கிருபைகள்
* ஆளுகை அல்ல அன்பு
செப்டம்பர் 01, 2013
கண்டதைக் கற்கப் பண்டிதன் ஆவான்
கண்டதைக் கற்க எப்படி பண்டிதன் ஆக முடியும்?
மாணவர்கள் கண்டதைக் கற்கிறார்களே! பண்டிதர் ஆகவில்லையே!
”கண்டு அதைக் கற்கப் பண்டிதன் ஆவான்.”
இன்ன நூல்களைக் கற்க வேண்டும் என்று தேர்ந்தெடுத்துக் கற்றால் பண்டிதன் ஆக முடியும் என்று கருத்துரைக்கிறது இப்பழமொழி.
"உம்முடைய கட்டளைகளை நான் கைக் கொண்டிருக்கிறபடியால், முதியோர்களைப் பார்க்கிலும் ஞானமுள்ளவனாயிருக்கிறேன்" (சங்: 119:100)
"நீங்கள் வளரும்படி, புதிதாய் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள்" (1பேதுரு: 2:3).
"இவைகளால் ஞானத்தையும், போதகத்தையும் அறிந்து, புத்திமதிகளை உணர்ந்து, விவேகம், நீதி, நியாயம், நிதானம் என்பவைகளைப் பற்றிய உபதேசத்தை அடையலாம். இவைகள் பேதைகளுக்கு வினாவையும், வாலிபருக்கு அறிவையும் விவேகத்தையும் கொடுக்கும். புத்திமான் இவைகளைக் கேட்டு அறிவில் தேறுவான், விவேகி நல்லாலோசனைகளை அடைந்து, நீதிமொழியையும், அதின் அர்த்தத்தையும், ஞானிகளின் வாக்கியங்களையும், அவர்கள் உரைத்த புதைபொருள்களையும் அறிந்து கொள்வான். கர்த்தருக்கு பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்..." (நீதி: 1:2-7)
--அப்பா தான் என் பெலன்--
வயதான அப்பாவும் மகனும் தினசரி காலை முதல் மாலை வரை வயலில் வேலை செய்வர்.
அப்பா முன்கோபி.
சிறு தவறுகளுக்கு எல்லாம் மகனை அடிப்பார்.
ஆனால் மகன் எதிர்த்துக் கூட பேச மாட்டார்.
ஒரு நாள் கோபத்துடன் தந்தை மகனை அடித்த போது, மகன் கண்ணீர் விட்டு அழுதார்.
''இத்தனை நாள் இல்லாது இன்று மட்டும் அழுத காரணம் என்ன?'' என்று தந்தை கேட்ட போது,
மகன் சொன்னார்,
''அப்பா, இது வரை நீங்கள் அடித்த போதெல்லாம் வலி அதிகமாக இருக்கும்...
நானும் பொறுத்துக் கொள்வேன்...
இன்று நீங்கள் ஓங்கி அடித்தும் வலிக்கவில்லை...
உங்கள் உடம்பில் பெலன் குறைந்து விட்டதே என்று எண்ணித் தான் அழுதேன்.
-- Selected--
பண்டிகையும் கிறிஸ்தவமும் - 4
பண்டிகை கொண்டாடலாம் என்பதற்கு வேத ஆதாரம்:
(எண்: 10:10, யோவேல்: 2:15,16)
வேதத்தை வாசிக்கும்போது - ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஒவ்வொருமுறையும் சுவிசேஷம் அறிவிக்கும்போதும் பண்டிகை நாட்களில்தான் அதிகம் அறிவித்தார் என நாம் அறியலாம். பண்டிகைக்கு முன்பாகவே அவர் அவ்விடத்திற்கு வருவதைக் காணமுடியும். (யோவா: 5:1). இயேசு பஸ்கா பண்டிகையை ஆசரித்தார். (மத்: 26:17, மாற்: 14:12, லூக்: 22:9, 2:41,43, 22:15, யோவா: 2:13, 6:4, 12:1,15, 7:10) இயேசு பண்டிகைக்கு இரகசியமாக போனார். யோவா: 7:37 - பண்டிகையில் இயேசு சுவிசேஷம் அறிவித்தார். யோவா: 10:22,23 - ல் - இயேசு தேவாலயப் பிரதிஷ்டை பண்டிகையில் கலந்து கொண்டார்.
அப்.பவுல் பண்டிகையில் கலந்து கொள்ள விருப்பமாயிருந்தான். (அப்: 18:20,21). பவுல் பெந்தேகொஸ்தே பண்டிகையில் கலந்து கொள்ள எருசலேமிற்கு செல்ல தீவிரப்பட்டான். (அப்: 20:16). "ஆதலால், பழைய புளித்தமாவோடே அல்ல, துர்க்குணம் பொல்லாப்பு என்னும் புளித்தமாவோடும் அல்ல, துப்புரவு உண்மை என்னும் புளிப்பில்லாத அப்பத்தோடே பண்டிகையை ஆசரிக்கக்கடவோம்." (1கொரி: 5:8).
மேலும் பவுல் கூறும்போது, பண்டிகை கொண்டாடலாம். ஆனால், பிறர் குற்றப்படுத்தும்படியான வகையில் கூடாத என்கிறார். "ஆகையால், போஜனத்தையும், பானத்தையும் குறித்தாவது, பண்டிகைகளையும், மாதப் பிறப்பையும் ஓய்வு நாட்களையுங் குறித்தாவது, ஒருவரும் உங்களை குற்றப்படுத்தாதிரப்பானாக" (கொலோ: 2:16).
நாகூம்: 1:15 - "...யுதாவே உன் பண்டிகைகளை ஆசரி".
எசேக்: 45:17, 21,23,25 - குறிக்கப்பட்ட பண்டிகைகளை ஆசரிக்கலாம்.
ஏசா: 33:20 - "நம்முடைய பண்டிகைகள் ஆசரிக்கப்படும் சீயோனை நோக்கிப்பார்".
சங்: 83:3 - "மாதப்பிறப்பிலும், நியமித்த காலத்திலும், நம்முடைய பண்டிகை நாட்களிலும் எக்காளம் ஊதுங்கள்".
எஸ்தர்: 9:17,18 - "...சந்தோஷப்படுகிற பண்டிகை நாளாக்கினார்கள்".
நெகே: 8:18 - "...ஏழு நாள் பண்டிகையை ஆசரித்தார்கள்".
(எஸ்றா: 6:22, 3:5, 2நாளா: 35:17, 30:13,22, 8:13, 7:8,9, 2:4, 1ராஜா: 8:65, 12:32, உபா: 16:10,15,16, யாத்: 5:1, 10,9, 23:14-16, யாத்: 32:5, 34:18,22, லேவி: 23:6, எண்: 28:17, லேவி: 23:34, எண்: 29:12, உபா: 16:13, எண்: 10:10)
காலக்கிரமத்தின்படி தீர்க்கதரிசிகள்
1. ஒபதியா - கி.மு.845 - இவன் பரியாசக்காரனை கடிந்து கொண்டவன்
2. யோவேல் - கி.மு.850 - இவன் பெந்தேகொஸ்தே தீர்க்கதரிசி
3. யோனா- கி.மு. - 800 - இவன் முழு உலகத்திற்கும் தீர்க்கதரிசியாக இருந்தான்
4. ஆமோஸ் - கி.மு. 787 - இவன் நீதியின் தீர்க்கதரிசி
5. ஓசியா - கி.மு. - 785 - இவன் அன்பின் தீர்க்கதரிசி
6. மீகா - கி.மு. - 740 - இவன் ஏழைகளின் தீர்க்கதரிசி
7. நாகூம் - கி.மு. - 700 - இவன் ஒரு கவிஞன்
8. செப்பனியா - கி.மு. - 630 - இவன் ஒரு மேடைப் பேச்சாளான்
9. ஆபகூக் - கி.மு. - 627 - இவன் ஒரு தத்துவ மேதை
10. ஆகாய் - கி.மு. - 520 - இவன் ஒரு தேவாலய தீர்க்கதரிசி
11. சகரியா - கி.மு. - 520 - இவன் ஒரு தரிசன / ஞான தீர்க்கதரிசி
12. மல்கியா - கி.மு. - 450 - இவன் ஒரு விரிவுரையாளன்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)