ஜனவரி 02, 2020
டிசம்பர் 06, 2019
ஆவியின் கனிகள் - Spiritual Fruits part - IV
6. நற்குணம் - Goodness
நற்குணம் - மற்றவர்களுக்கு நன்மை செய்யும் குணம், தீங்காய் தோன்றுகிற யாவற்றையும் விட்டு விலகுவதற்கான வாஞ்சை
மத்தேயு:5:44 - "நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்."
- நமது நண்பர்களுக்கு மட்டுமின்றி, நம்முடைய சத்துருக்களையும் சிநேகித்து, சபிக்கிறவர்களை ஆசீர்வதித்து, பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்து, நிந்திக்கிறவர்களுக்கு ஜெபம் செய்து நம்முடைய நற்குணத்தை வெளிப்படுத்தலாம்.
ரோமர்:12:20 - "அன்றியும், உன் சத்துரு பசியாயிருந்தால், அவனுக்குப் போஜனங்கொடு; அவன் தாகமாயிருந்தால், அவனுக்குப் பானங்கொடு; நீ இப்படிச் செய்வதினால் அக்கினித்தழலை அவன் தலையின்மேல் குவிப்பாய்."
நீதிமொழிகள்:25:21 - "உன் சத்துரு பசியாயிருந்தால், அவனுக்குப் புசிக்க ஆகாரங்கொடு; அவன் தாகமாயிருந்தால், குடிக்கத் தண்ணீர்கொடு."
- நமது சத்துருவாக இருந்தாலும் அவர்களுக்கு நம்முடைய நற்குணத்தை வெளிப்படுத்தும்படி அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.
ரோமர்:15:14 - "என் சகோதரரே, நீங்கள் நற்குணத்தினால் நிறைந்தவர்களும், சகல அறிவினாலும் நிரப்பப்பட்டவர்களும், ஒருவருக்கொருவர் புத்திசொல்ல வல்லவர்களுமாயிருக்கிறீர்களென்று நானும் உங்களைக் குறித்து நிச்சயித்திருக்கிறேன்;"
- நாம் சகலவித நற்குணங்களாலும் நிரப்பப்பட்டிருக்க வேண்டும்.
மத்தேயு:5:16 - "இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக்கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது."
- நம்மிடத்தில் மற்றவர்கள் நற்குணங்களைக் காணும்போது தேவ நாமம் நம் மூலமாக மகிமைப்படும்.
நற்குணமுள்ள ரூத்:
- தன் கணவன் இறந்த பின் மாமியாரை விட்டு தன் இனத்தாரிடம் சென்று மறுமணம் செய்து வசதியாக வாழ விரும்பாமல், வேதனையின் மத்தியிலும் தன் மாமியாரை நேசித்து, வாழ்நாள் முழுவதும் ஆதரிக்கும் நற்குணம் ரூத்திற்கு இருந்தது. (ரூத்:1:15-18)
- சோம்பலாயிருந்து நகோமிக்கு பாரமாய் இருக்காமல் சுறுசுறுப்பாய் வேலை செய்து, தனக்கு மட்டுமன்றி, தன் மாமிக்கும் ஆகாரம் கொண்டு வந்தாள். தான் வயலில் சாப்பிட்ட போது, சிறிது எடுத்து வைத்திருந்து நகோமிக்கும் கொடுத்தாள். தன் குடும்பத்தின் மேல் அக்கறை உள்ளவளாக இருந்தாள்.
ரூத்:2:14,18 - "பின்னும் போவாஸ் சாப்பாட்டு வேளையில் அவளைப் பார்த்து: நீ இங்கே வந்து, இந்த அப்பத்திலே புசித்து, காடியிலே உன் துணிக்கையைத் தோய்த்துக்கொள் என்றான். அப்படியே அவள் அறுப்பறுக்கிறவர்கள் அருகே உட்கார்ந்தாள், அவளுக்கு வறுத்த கோதுமையைக் கொடுத்தான்; அவள் சாப்பிட்டு, திருப்தியடைந்து, மீந்ததை வைத்துக்கொண்டாள். அவள் அதை எடுத்துக்கொண்டு, ஊருக்குள் வந்தாள்; அவள் பொறுக்கினதை அவளுடைய மாமி பார்த்தாள்; தான் திருப்தியாய்ச் சாப்பிட்டு மீதியாக வைத்ததையும் எடுத்து அவளுக்குக் கொடுத்தாள்."
- தனக்கு துணையை தானே தேடிக்கொள்ளாமல், தேவனுடைய வழியின்படி செல்வதற்கு தன்னை ஒப்புக்கொடுத்தாள்.
ரூத்:3:10,11 - "அதற்கு அவன்: மகளே, நீ கர்த்தரால் ஆசீர்வதிக்கப்படுவாயாக; நீ தரித்திரரும் ஐசுவரியவான்களுமான வாலிபர்களின் பிறகே போகாததினால், உன் முந்தின நற்குணத்தைப்பார்க்கிலும் உன் பிந்தின நற்குணம் உத்தமமாயிருக்கிறது. இப்போதும் மகளே, நீ பயப்படாதே; உனக்கு வேண்டியபடியெல்லாம் செய்வேன்; நீ குணசாலி என்பதை என் ஜனமாகிய ஊராரெல்லாரும் அறிவார்கள்."
- ரூத்தின் நற்குணம் போவாஸைக் கொண்டு வந்தது. அவள் நற்குணமுள்ளவள், குணசாலி என்று ஊரெல்லாம் பரவியது. மேலும் அரசனாகிய தாவீதையும் இயேசு கிறிஸ்துவையும் வாரிசாக பெறும் பாக்கியம் பெற்றாள்.
இப்படிப்பட்ட நற்குணமுள்ள ரூத்தின் பெயர் இன்று வரை சொல்லப்பட்ட வருகிறது. நற்குணத்தை உடையவர்கள் தேவனுக்கு புகழ்ச்சியைக் கொண்டு வருவார்கள்.
7. விசுவாசம் - Faithfulness
கிரேக்க வார்த்தை - "பிஸ்டிஸ்"
விசுவாசம் - அனுதின வாழ்வின் தேவைகளுக்காக, வழிநடத்துதலுக்காக நாம் தேவனிடம் சார்ந்திருப்பது (அ) நம்பத்தக்கவர்களுக்காக இருப்பது
நாம் உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும். நமது வாழ்வின் ஒவ்வொரு பிரச்சனையிலும் நமது விசுவாசத்தை வெளிப்படுத்த வேண்டும்.
1 யோவான்:5:4 - "தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும்; நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்."
எபிரேயர்:11:1 - "விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது."
தோமாவைப் போல் "பார்த்தால் தான் நம்புவேன்" என்பது விசுவாசமல்ல; ஆபிரகாமை போல் காணாதிருந்தும் நம்புவதே விசுவாசம்.
2கொரிந்தியர்:5:6 - "நாம் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்கிறோம்."
நமது விசுவாசம் வாக்குத்தத்தங்களைக் கொண்டு வரும்! நாம் எல்லா காரியங்களிலும் தேவனை நம்பி, அவரை விசுவாசித்தால் அவர் நமக்கு வாக்குத்தத்தங்களைக் கொடுப்பார்.
ரோமர்:1:17 - "விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறபடி விசுவாசத்தினால் உண்டாகும் தேவநீதி விசுவாசத்திற்கென்று அந்தச் சுவிசேஷத்தினால் வெளிப்படுத்தப்படுகிறது."
யோவான்:1:50 - "இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: அத்திமரத்தின் கீழே உன்னைக் கண்டேன் என்று நான் உனக்குச் சொன்னதினாலேயா விசுவாசிக்கிறாய்; இதிலும் பெரிதானவைகளைக் காண்பாய் என்றார்."
இயேசு நாத்தான்வேலிடம் கேட்ட கேள்வி இதுதான் - "நான் உனக்குச் சொன்னதினாலேயா விசுவாசிக்கிறாய் ?"
யோவான்:20:29 - "அதற்கு இயேசு: தோமாவே, நீ என்னைக் கண்டதினாலே விசுவாசித்தாய், காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்றார்."
ஏனென்றால் தேவன் நமது விசுவாசத்தின் அளவை சோதிக்கிறார். நமது விசுவாசம் எத்தகையது என்று தேவன் பார்க்கிறார். நாம் காண்கிறதினால் தேவனை விசுவாசிக்கிறோமா அல்லது சொன்னதினால் விசுவாசிக்கிறோமா அல்லது காணாதிருந்தும் விசுவாசிக்கிறோமா என்றெல்லாம் அவர் நம்மை சோதித்தறிகிறார்.
எபேசியர்:3:12 - "அவரைப் பற்றும் விசுவாசத்தால் அவருக்குள் நமக்குத் தைரியமும் திடநம்பிக்கையோடே தேவனிடத்தில் சேரும் சிலாக்கியமும் உண்டாயிருக்கிறது."
நாம் விசுவாசமென்னும் கேடகத்தை பிடித்தவர்களாய் எந்த பிரச்சினை வந்தாலும் விசுவாசத்தில் உறுதியாய் இருக்க வேண்டும். தேவனை விசுவாசிக்கிறவர்கள் வெட்கப்பட்டு போவதில்லை.
2 தீமோத்தேயு:4:7 - விசுவாசத்தை காத்துகொள்ள வேண்டும்
தீத்து:1:14 - விசுவாசத்திலே ஆரோக்கியமுள்ளவர்களாயிருக்க வேண்டும்.
எபிரேயர்:11:17 - 40 - விசுவாசத்தினாலே ஜெயித்தவர்கள்
செயலில் காட்டப்பட வேண்டிய விசுவாசம்:
யாக்கோபு:2:18 - "கிரியை இல்லாத விசுவாசம் செத்தது"
எல்லா காரியங்களிலும் விசுவாசம் காணப்பட வேண்டும். நம் குடும்பத்திலும் சுற்றுபுறத்திலும் வெளிப்படுத்த வேண்டும்.
மாற்கு:2:5 - "இயேசு அவர்கள் விசுவாசத்தைக் கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி: மகனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்."
இயேசு நோயாளிகளை குணமாக்கும்போது, அவர்களது விசுவாசத்தை கண்டு குணமாக்கினார். ஆகவே நமது செயலில் விசுவாசம் காணப்பட வேண்டும். நமது விசுவாசத்தின் அளவை கண்டு தேவன் நம்மை ஆசீர்வதிப்பார்.
விசுவாச பலவீனம்:
வாழ்வில் பிரச்சினைகள் வந்தாலும் விசுவாசத்தில் பலவீனம் ஏற்படக்கூடாது.
- ஆபிரகாம் தனக்கு வயதாகி கொண்டே வருகிறது என்று தன்னுடைய விசுவாசத்தில் சோர்ந்து போகாமல் தனக்கு ஒரு மகனை தருவார் என்று உறுதியுடன் வாக்குத்தத்தங்களை விசுவாசித்தார். சரீரம் செத்து போயிற்று என்று சொல்லப்பட்டாலும் தேவனால் கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தத்திற்கு உயிர் இருந்தது. ஆகவே ஏற்ற காலத்தில் ஒரு மகன் பிறந்தான். (எபிரேயர்:11:12)
விசுவாசத்தில் பலவீனம் ஏற்பட்டால், தொடர்ந்து வாழ்க்கை முழுவதும் பலவீனம் ஏற்படும். ஆபிரகாம் ஒரு கட்டத்தில், விசுவாசத்தில் பலவீனப்பட்டு ஆகார் மூலமாக சந்ததி உண்டாக செய்ததினால், தொடர்ந்து அந்த சந்ததி மூலம் அவனுக்கு பாதிப்பு ஏற்பட்டது.
- பேதுரு கற்பாறையாக இருந்தாலும் விசுவாசத்தில் பலவீனப்பட்டவனாக இருந்தான். இயேசுவை விசுவாசித்து கடலின் மேல் நடக்க முற்பட்டான். ஆனால் ஒரு கட்டத்தில் அவன் சந்தேகத்தினால் தண்ணீரில் மூழ்க நேரிட்டது. (மத்தேயு:14:31) பின் நாட்களில் அவன் விசுவாச வீரனாக மாறி பெரிய காரியங்களை செய்தான்.
யோபுவின் வாழ்க்கையிலும் விசுவாச சோதனை வந்தது. ஆனாலும் பலவீனத்துக்கு இடங்கொடுக்காமல், எல்லாவற்றையும் தாங்கி கொண்டும் சகித்து கொண்டும் தேவனை இன்னும் அதிகமாக விசுவாசித்தான். கர்த்தர் அவனது விசுவாச அளவினை பார்த்து அவன் முன்னிலைமையை பார்க்கிலும் அவன் பின்னிலைமையை அதிகமாக ஆசீர்வதித்தார்.
"தேவன் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும்
அவர்மேல் விசுவாசம் வை; திரும்ப கொடுக்கப்படும்"
தொடரும்....
டிசம்பர் 02, 2019
ஆவியின் கனிகள் - Spiritual Fruits - Part III
4. நீடிய பொறுமை - Long Suffering
நீடிய பொறுமை - சோதனைகளையும் வேதனைகளையும் சகித்து கொள்ளுதல்
2 பேதுரு:3:9 - "ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்ப வேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்."
தேவன் நீடிய பொறுமையுள்ளவராக இராதிருந்தால், நாம் பாவம் செய்த போது நம்மை அழித்திருப்பார். அவர் நாம் மனந்திரும்புவதற்கு அநேக வாய்ப்புகளை தந்து கொண்டிருக்கிறார்.
எபிரேயர்:12:2 - "அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார்."
1பேதுரு:2:23 - "அவர் வையப்படும்போது பதில்வையாமலும், பாடுபடும்போது பயமுறுத்தாமலும், நியாயமாய்த் தீர்ப்புச்செய்கிறவருக்குத் தம்மை ஒப்புவித்தார்."
தம்மால் உருவாக்கப்பட்ட மனிதன் தம்மை அவமதித்து, பாடுபடுத்தி, சிலுவையில் அறைந்த போதும் அவர் நீடிய பொறுமையோடு சகித்தார்.
நீடிய பொறுமையுடன் இருந்த பரிசுத்தவான்கள்:
1. யோபு
யோபு:13:15 - "அவர் என்னைக் கொன்றுபோட்டாலும், அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன்; ஆனாலும் என் வழிகளை அவருக்கு முன்பாக ரூபகாரம்பண்ணுவேன்."
தன்னுடைய பொருள்கள் யாவும் அழிந்து போன போதிலும், தன் பிள்ளைகள் யாவரும் சடுதியில் மரணமடைந்த போதிலும், தன் உடல் முழுவதிலும் வியாதியால் வேதனைப்பட்ட போதிலும், தன் மனைவி, நண்பர்கள் நிந்தித்த போதிலும் தேவனை குறை கூறாமல் யாவற்றையும் சகித்துப் பொறுயோடே இருந்தான்.
2. தாவீது
தான் தேவனால் அபிஷேகம் பண்ணப்பட்ட போதிலும், அரசராக இருந்த சவுலின் கொடுமைகளை பொறுமையுடன் சகித்து, சவுலை கொல்வதற்கு தனக்கு வாய்ப்புகள் கிடைத்த போதும் அதை வெறுத்து தள்ளினான். அபிஷேகம் பண்ணப்பட்டவர் மேல் தன் கையை போட கூடாது என்று தன் காலம் வரும் வரை பொறுமையுடன் சோதனைகளை சகித்து வந்தான்.
இவர்கள் இருவருமே பொறுமையுடன் துன்பங்களை சகித்துக்கொண்டனர். முடிவில் ஆசீர்வதிக்கப்பட்டனர். யோபுவின் முன்னிலைமையிலும் அவன் பின்னிலைமை மேலானதாக இருந்தது. தாவீது சமஸ்த இஸ்ரவேலுக்கும் ராஜாவாகி 40 வருஷம் அரசாண்டான்.
நீதிமொழிகள்:25:15 - "பொறுமையினால் பிரபுக்களையும் சம்மதிக்கப்பண்ணலாம்"
லூக்கா:21:19 - "உங்கள் பொறுமையினால் உங்கள் ஆத்துமாக்களைக் காத்துக்கொள்ளுங்கள்."
யாக்கோபு:1:4 - "நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும் இருக்கும்படி, பொறுமையானது பூரண கிரியை செய்யக்கடவது."
1பேதுரு:2:19,20 - "ஏனெனில், தேவன்மேல் பற்றுதலாயிருக்கிற மனச்சாட்சியினிமித்தம் ஒருவன் அநியாயமாய்ப் பாடுபட்டு உபத்திரவங்களைப் பொறுமையாய்ச் சகித்தால் அதுவே பிரீதியாயிருக்கும்.நீங்கள் குற்றஞ்செய்து அடிக்கப்படும்போது பொறுமையோடே சகித்தால், அதினால் என்ன கீர்த்தியுண்டு? நீங்கள் நன்மைசெய்து பாடுபடும்போது பொறுமையோடே சகித்தால் அதுவே தேவனுக்கு முன்பாகப் பிரீதியாயிருக்கும்."
எப்பொழுது பொறுமையை இழக்கிறோம்?
- தேவனைப் பார்க்காமல் சூழ்நிலையை பார்க்கும்போது பொறுமையை இழக்கிறோம்.
சங்கீதம்:106:32,33 - "மேரிபாவின் தண்ணீர்களிடத்திலும் அவருக்குக் கடுங்கோபம் மூட்டினார்கள்; அவர்கள் நிமித்தம் மோசேக்கும் பொல்லாப்பு வந்தது.அவர்கள் அவன் ஆவியை விசனப்படுத்தினதினாலே, தன் உதடுகளினால் பதறிப்பேசினான்."
எண்ணாகமம்:20:3- 11 - மோசே தேவனை பார்க்காமல் தன்னை சுற்றியுள்ள முறுமுறுக்கும் ஜனங்களை பார்த்து தவறான முடிவை எடுத்து பொறுமையை இழந்தான்.
- தேவனை முழுமையாக நம்பாமல், மாம்சத்துக்கு இடம் கொடுக்கும் போது பொறுமையை இழக்கிறோம்.
ஆதியாகமம்:16:2-4 - "சாராய் ஆபிராமை நோக்கி: நான் பிள்ளை பெறாதபடிக்குக் கர்த்தர் என் கர்ப்பத்தை அடைத்திருக்கிறார்; என் அடிமைப் பெண்ணோடே சேரும், ஒருவேளை அவளால் என் வீடு கட்டப்படும் என்றாள். சாராயின் வார்த்தைக்கு ஆபிராம் செவிகொடுத்தான். ஆபிராம் கானான் தேசத்தில் பத்து வருஷம் குடியிருந்தபின்பு, ஆபிராமின் மனைவியாகிய சாராய் எகிப்து தேசத்தாளான தன் அடிமைப்பெண்ணாகிய ஆகாரை அழைத்து, அவளைத் தன் புருஷனாகிய ஆபிராமுக்கு மறுமனையாட்டியாகக் கொடுத்தாள். அவன் ஆகாரோடே சேர்ந்தபோது, அவள் கர்ப்பந்தரித்தாள்; அவள் தான் கர்ப்பவதியானதைக் கண்டபோது, தன் நாச்சியாரை அற்பமாக எண்ணினாள்"
ஆபிரகாம் தேவன் கொடுத்த வாக்கை விசுவாசிக்காமல், தன் மனைவியின் பேச்சை கேட்டு ஆகார் மூலம் தன் சந்ததி உருவாகட்டுமென்று தவறான முடிவை எடுத்து பொறுமையை இழந்தான்.
- கோபத்திற்கு இடங்கொடுக்கும் போது பொறுமையை இழக்கிறோம்.
பிரசங்கி:7:8,9 - "ஒரு காரியத்தின் துவக்கத்தைப்பார்க்கிலும் அதின் முடிவு நல்லது; பெருமையுள்ளவனைப்பார்க்கிலும் பொறுமையுள்ளவன் உத்தமன். உன் மனதில் சீக்கிரமாய்க் கோபங்கொள்ளாதே; மூடரின் நெஞ்சிலே கோபம் குடிகொள்ளும்."
பொறுமையின்மையின் விளைவுகள்:
- பகை
- பிரிவினை
- சண்டை
- கொலை
நாம் நீடிய பொறுமையை தரித்துக்கொள்ளும்படி தெரிந்து கொள்ளப்பட்டிருக்கிறோம். நம் தேவன் நீடிய பொறுமையாக இருந்தது போல நாமும் அதே பண்பை எல்லா சூழ்நிலையிலும் வெளிப்படுத்த வேண்டும்.
5. தயவு
தயவு - இரக்கம் காட்டுவது, மன்னிப்பது
எபேசியர்:2:6,7 - "கிறிஸ்து இயேசுவுக்குள் அவர் நம்மிடத்தில் வைத்த தயவினாலே, தம்முடைய கிருபையின் மகா மேன்மையான ஐசுவரியத்தை வருங்காலங்களில் விளங்கச்செய்வதற்காக,கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அவரோடேகூட எழுப்பி, உன்னதங்களிலே அவரோடேகூட உட்காரவும் செய்தார்."
கர்த்தர் நம்மேல் வைத்த தயவினால், பாவத்திலிருந்து நம்மை இரட்சித்து, நீதிமானாக்கி, ஆபிரகாமின் பிள்ளைகளாகும் பாக்கியத்தை தந்து, உன்னத பரலோகத்தை பெறும்படி செய்தார்.
தயவுள்ளவனாயிருந்த யோசேப்பு:
தன் சகோதரர்கள் தன்னை பகைத்து, துன்புறுத்தி, அடிமையாக விற்ற போதிலும், தன்னுடைய ஆளுகைக்கு கீழ் வந்தபோதிலும் அவர்களை வெறுக்காமலும், கடிந்து கொள்ளாமலும், தண்டிக்காமலும் தயவாய் அவர்களை மன்னித்து இரக்கம் பாராட்டினான்.
(ஆதியாகமம்:50:15-21)
தயவுள்ளவனாயிருந்த தாவீது:
சவுல் தன்னை எவ்வளவு தான் துன்புறுத்தி கொலை செய்ய முயற்சி செய்தாலும், தன்னை ஏமாற்றியிருந்தும், அவன் இறந்த பின் அவன் வீட்டாரை அழிக்காமல் அவர்களுக்கு தயை செய்தான். யோனத்தானின் மகன் மேவிபோசெத்திற்கு சவுலின் நிலங்களை திரும்பக் கொடுத்து ஒரு இளவரசன் போல அனுதினமும் தன்னுடைய பந்தியில் விருந்துண்ணும் படி தயை செய்தான். (2சாமுவேல்:9:1-13)
தயவுள்ளவர்களாயிருக்க நாம் செய்ய வேண்டியவை:
1. மன்னிக்கும் குணமுடையவர்களாக இருக்க வேண்டும்.
கொலோசெயர்:3:12,13 - "ஆகையால், நீங்கள் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாய், உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு;ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்."
மற்றவர்களுடைய குறைகளை மிகைப்படுத்தாமல், கிறிஸ்து நமக்கு மன்னித்தது போல நாமும் மன்னிக்க வேண்டும்.
2. கடுஞ்சொல்லை தவிர்த்து இனிமையான சொல்லை பேச வேண்டும்
எபேசியர்:6:9 - "... கடுஞ்சொல்லை விட்டுவிடுங்கள்."
நீதிமொழிகள்:25:15 - "நீண்ட பொறுமையினால் பிரபுவையும் சம்மதிக்கப் பண்ணலாம்; இனிய நாவு எலும்பையும் நொறுக்கும்."
மற்றவர்களிடம் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தாமல் தேவ அன்பை வெளிப்படுத்தும் வார்த்தைகளை பயன்படுத்தும் போது நம்மில் உள்ள தேவ சாயலை கண்டு அநேகர் கிறிஸ்துவின் அன்பை ருசிக்க வாய்ப்புள்ளது.
3. இரக்க குணமுள்ளவர்களாக இருக்க வேண்டும்.
லூக்கா:10:29-37 - நல்ல சமாரியனை போல மற்றவர்கள் மேல் இரக்கப்பட வேண்டும்.
நாம் தயவை தரித்துக்கொண்டு (கொலோசெயர்:3:12), பிறர் குறைகளை பெரிதாக எண்ணாமல் ஒருவருக்கொருவர் மன்னித்து இரக்கம் காட்டவேண்டும்.
தொடரும்......
நவம்பர் 26, 2019
ஆவியின் கனிகள் - Spiritual Fruits part - II
கடந்த பகுதியில் முதலாவது கனியான அன்பை குறித்து பார்த்தோம். தொடர்ந்து மற்ற கனிகளை குறித்து தியானிப்போம்.
2. சந்தோஷம் - Joy
லூக்கா:2:10 - "தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்."
சந்தோஷம் - ஆனந்தம், மகிழ்ச்சி, களிகூறுதல்
இயேசு இந்த உலகத்தில் மனிதனாக அவதரித்த போது, அது ஜனங்களுக்கு மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கிற்று.இயேசு கிறிஸ்து நம் உள்ளத்தில் வரும்போது மிகுந்த சந்தோஷம் உண்டாகும். ஆவிக்குரிய சந்தோஷம் உண்டாகும். இது துன்பங்கள், பாடுகள் மத்தியிலும் காணப்படும் சந்தோஷம். இது தேவ கிருபையினால் நமக்கு வருவது; இது நமது இரட்சிப்பின் சந்தோஷம்.
"இயேசு வந்த வீட்டில் சந்தோஷமே"
யோவான்:15:11 - "என்னுடைய சந்தோஷம் உங்களில் நிலைத்திருக்கும்படிக்கும், உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படிக்கும், இவைகளை உங்களுக்குச் சொன்னேன்."
பிலிப்பியர்:4:4 - "கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்."
நாம் எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும். கர்த்தருடைய இரட்சிப்பின் சந்தோஷம் நம் மனதில் நிலைத்திருக்க வேண்டும்.
இரட்சிக்கப்படும்போது நாம் ஆவிக்குரிய சந்தோஷத்தை அனுபவிக்கிறோம். அடிக்கடி நமது இரட்சிப்பைக் குறித்து தியானித்து அதற்காக சந்தோஷத்துடன் நன்றி செலுத்துவது நமது கடமை.
சங்கீதம்:35:9 - "என் ஆத்துமா கர்த்தரில் களிகூர்ந்து, அவருடைய இரட்சிப்பில் மகிழ்ந்திருக்கும்."
தாவீது, தேவன் தன்னை இரட்சித்ததை நினைத்து களிகூர்ந்து, எந்நாளும் நன்றி சொல்லி மகிழ்ந்தான். இரட்சிக்கப்பட்ட புதிதில் அனுதினமும் மகிழ்ச்சியை அனுபவித்து களிகூர்ந்து நன்றி சொல்லி வருவோம். கொஞ்ச காலத்தில் நமக்கு வரும் துன்பங்கள், பாடுகள், சோதனைகள் நம் சந்தோஷத்தை குலைத்து விடும். நம்மை பாவத்தில் தள்ளி, நமது இரட்சிப்பின் சந்தோஷத்தை கெடுத்து விடும். தாவீது, பத்சேபாளிடத்தில் பாவம் செய்து தனது இரட்சிப்பின் சந்தோஷத்தை இழந்தான். ஆனாலும் தனது பாவத்தை அறிக்கை செய்து மனந்திரும்பினான். மீண்டும் தான் இழந்த சந்தோஷத்தை பெற்றுக்கொண்டான்.
சங்கீதம்:51:12 - "உமது இரட்சணியத்தின் சந்தோஷத்தைத் திரும்பவும் எனக்குத் தந்து, உற்சாகமான ஆவி என்னைத் தாங்கும்படி செய்யும்."
பின்மாற்றத்திலிருந்து திரும்பவும் கர்த்தருக்குள் வரும்போது நாம் இரட்சிப்பின் சந்தோஷத்தை திரும்பவும் பெற்றுக்கொள்கிறோம்.
கெட்டகுமாரன் தான் செய்த பாவத்தை நினைத்து வருந்தி, திரும்பவும் தன் தகப்பனிடம் சென்று மன்னிப்பு கேட்டு, இழந்து போன இரட்சிப்பின் சந்தோஷத்தை திரும்பவும் பெற்றுக்கொண்டான்.
லூக்கா:15:32 - "உன் சகோதரனாகிய இவனோ மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான்; ஆனபடியினாலே, நாம் சந்தோஷப்பட்டு மகிழ்ச்சியாயிருக்க வேண்டுமே என்று சொன்னான் என்றார்."
லூக்கா:19:10 - "இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார்."
ஆம்! இழந்து போன இரட்சிப்பின் சந்தோஷத்தை நாம் பெறவேண்டுமென்பதற்காக இயேசு கிறிஸ்து மனிதனாக அவதரித்தார். அவர் பிறப்பிலே சந்தோஷம் உண்டாயிற்று.
இயேசுவின் பிறப்பில் சந்தோஷம் - ஏன்?
பாவம், வியாதிகள், வேதனைகள், போராட்டங்கள் ஆகியவற்றில் சிக்கியிருக்கும் மனிதனுக்கு இயேசுவின் மூலம் ""விடுதலை உண்டு" என்பது நற்செய்தி அல்லவா? நரகத்திற்கு செல்ல வேண்டிய நம்மை மீட்டெடுக்க இயேசு பிறந்தது நமக்கு சந்தோஷம் தானே!?!!
தேவ ராஜ்யத்தின் பிள்ளைகளான நாம் எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும்.
ரோமர்:14:17 - "தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது."
நாம் எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டுமென்று தேவன் விரும்புகிறார். எல்லா நிலைகளிலும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும்.
சங்கீதம்:118:24 - "இது கர்த்தர் உண்டுபண்ணின நாள், இதிலே களிகூர்ந்து மகிழக்கடவோம்."
ஒவ்வொரு நாளும் கர்த்தர் உண்டு பண்ணின நாள். ஆகவே எதை கண்டும் கவலைப்படாமல் மகிழ்ந்து களிகூறுவோம்.
ஆபகூக்:3:17-19 - "அத்திமரம் துளிர்விடாமற்போனாலும், திராட்சச்செடிகளில் பழம் உண்டாகாமற்போனாலும், ஒலிவமரத்தின்பலன் அற்றுப்போனாலும், வயல்கள் தானியத்தை விளைவியாமற்போனாலும், கிடையில் ஆட்டுமந்தைகள் முதலற்றுப்போனாலும், தொழுவத்திலே மாடு இல்லாமற்போனாலும், நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன், என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன்."
எந்த இழப்பு நேர்ந்தாலும் என்ன தொல்லை வந்தாலும் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருந்து தேவனுக்குள் களிகூறுவதே ஆவியின் கனியாகிய சந்தோஷத்தின் அறிகுறியாகும்.
ஏசாயா:51:11 - "அப்படியே கர்த்தரால் மீட்கப்பட்டவர்கள் ஆனந்தக்களிப்புடன்பாடி சீயோனுக்குத் திரும்பிவருவார்கள்; நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலையின்மேல் இருக்கும்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைவார்கள்; சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போம்."
ஏசாயா:35:10 - "கர்த்தரால் மீட்கப்பட்டவர்கள் திரும்பி, ஆனந்தக்களிப்புடன் பாடி, சீயோனுக்கு வருவார்கள்; நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலையின்மேலிருக்கும்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைவார்கள்; சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போம்."
ஒரு நாள் வரும்! நாம் பரம சீயோனுக்குள் சேருவோம். அப்பொழுது நித்திய சந்தோஷம் நமது தலைமேல் இருக்கும்.
3.சமாதானம் - Peace
சமாதானம் என்பது நாம் பாவம் செய்து மனம் நொருங்குண்டு தேவனிடம் மன்னிப்புக்கு கெஞ்சி, பயம் கலக்கம் நீங்கி, மன்னிப்பை பெற்றுக்கொண்ட நிச்சயத்தை அடையும்போது உண்டாகும் சலனமற்ற தெய்வீக அமைதி எனலாம்.சமாதானத்தின் தேவன்:
2கொரிந்தியர்:13:11 - "சமாதானத்திற்கு காரணராகிய தேவன்"
நமது சமாதானத்தைக் கெடுக்க நினைக்கும் சாத்தானை நமது காலின் கீழ் நசுக்கிப்போடும் சமாதானத்தின் தேவன் அவர். (ரோமர்:16:20)
ஏசாயா:9:6 - "சமாதான பிரபு"
ஏசாயா:53:5 - "நமக்கு சமாதானத்தை உண்டு பண்ணும் ஆக்கினை அவர் மேல் வந்தது."
யோவான்:14:27 - "தன்னுடைய சமாதானத்தை நமக்காக வைத்துப்போயிருக்கிறவர்"
நாம் பாவிகளாக இருக்கையில், சமாதானமின்றி வாழ்ந்து வந்தோம். நமது பாவங்களுக்கேற்ற தண்டனையை அடைந்த பின்னர் தான் நமக்கு சமாதானம் உண்டாகும். நாம் அனுபவிக்க வேண்டிய ஆக்கினையை அவர் ஏற்றுக்கொண்டார். அவர் சிலுவையிலே சிந்திய இரத்தத்தினாலே பிதாவிடம் நமக்கு சமாதானம் உண்டாகி இருக்கிறது.
கொலோசெயர்:1:20 - "அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர் மூலமாய்த் தமக்கு ஒப்புரவாக்கிக்கொள்ளவும் அவருக்குப் பிரியமாயிற்று."
நாம் செய்ய வேண்டியது:
மாற்கு:9:50 - "ஒருவரோடொருவர் சமாதானமுள்ளவர்களாயும் இருங்கள் "
இயேசு கிறிஸ்து மூலமாக ஆத்தும சமாதானத்தை பெற்று கொண்ட நாம் மற்றவர்களோடும் சமாதானமாக இருக்க வேண்டும்.
ரோமர்:12:18 - "கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள்"
ஆத்தும சமாதானமின்றி வாழ்கிறவர்களை நிலையான சமாதானம் அளிக்கும் சமாதான பிரபுவாகிய இயேசுவண்டை வழிநடத்தி அவர்களும் சமாதானம் பெற வழிசெய்வது நமது கடமையாகும்.
சமாதான வாழ்த்துதல்:
லூக்கா:10:5,6 - "ஒரு வீட்டில் பிரவேசிக்கிறபோது: இந்த வீட்டுக்குச் சமாதானம் உண்டாவதாகவென்று முதலாவது சொல்லுங்கள்.சமாதான பாத்திரன் அங்கே இருந்தால், நீங்கள் கூறின சமாதானம் அவனிடத்தில் தங்கும், இல்லாதிருந்தால் அது உங்களிடத்திற்குத் திரும்பிவரும்."
- ஒரு வீட்டிற்குள் பிரவேசிக்கும் போது அவ்வீட்டாரை சமாதானத்தை கூறி வாழ்த்த வேண்டும்.
ஏசாயா:52:7 - "சமாதானத்தைக் கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவித்து, இரட்சிப்பைப் பிரசித்தப்படுத்தி: உன் தேவன் ராஜரிகம் பண்ணுகிறாரென்று சீயோனுக்குச் சொல்லுகிற சுவிசேஷகனுடைய பாதங்கள் மலைகளின்மேல் எவ்வளவு அழகாயிருக்கின்றன"
- எங்கும் சமாதானத்தை கூற வேண்டும்.
சமாதானத்தோடு வாழ்வதன் இரகசியம்:
1. கர்த்தருடைய வேதத்தை நேசிக்க வேண்டும்.
சங்கீதம்:119:165 - "உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு; அவர்களுக்கு இடறலில்லை."
2. கர்த்தருடைய கற்பனைகளை கைக்கொள்ள வேண்டும்
ஏசாயா:48:18 - "ஆ, என் கற்பனைகளைக் கவனித்தாயானால் நலமாயிருக்கும்; அப்பொழுது உன் சமாதானம் நதியைப்போலும், உன் நீதி சமுத்திரத்தின் அலைகளைப்போலும் இருக்கும்."
3. நன்மை செய்ய வேண்டும்
ரோமர்:2:10 - "முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் எவன் நன்மைசெய்கிறானோ அவனுக்கு மகிமையும் கனமும் சமாதானமும் உண்டாகும்."
4. ஆவியின் சிந்தையுடையவர்களாக இருக்க வேண்டும்
ரோமர்:8:6 - "மாம்சசிந்தை மரணம்; ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம்."
தொடரும்.....
நவம்பர் 25, 2019
பரிசுத்த ஆவியானவரின் அடையாளங்கள்
1. தண்ணீர்
யோவான்:7:37,38 - "பண்டிகையின் கடைசிநாளாகிய பிரதான நாளிலே இயேசு நின்று, சத்தமிட்டு: ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம்பண்ணக்கடவன்.வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனெவனோ அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார்."
பரிசுத்த ஆவியினால் நாம் மீண்டும் பிறந்திருக்கிறோம். (யோவான்:3:5)
தொடர்ந்து பரிசுத்த ஆவியை பருகுவதினால், நாம் நம்முடைய ஆவிக்குரிய வாழ்வை காத்து கொள்ள முடியும். தாகமே அடையாத திருப்தியான வாழ்க்கை நடத்த பரிசுத்த ஆவியானவர் உதவுகிறார்.
யோவான்:4:13,14 - "இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: இந்தத் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கு மறுபடியும் தாகமுண்டாகும். நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது; நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்தியஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும் என்றார்."
நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கை பரிசுத்த ஆவியால் தினமும் கழுவப்பட வேண்டும். பரிசுத்த ஆவியானவர் நம் இருதயத்தை புதிதாக்குகிறார்.
தீத்து:3:5 - "நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே, மறுஜென்ம முழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார்."
2. அக்கினி
மத்தேயு:3:11 - "மனந்திரும்புதலுக்கென்று நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறேன்; எனக்குப்பின் வருகிறவர் என்னிலும் வல்லவராயிருக்கிறார், அவருடைய பாதரட்சைகளைச் சுமக்கிறதற்கு நான் பாத்திரன் அல்ல; அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் ஞானஸ்நானம் கொடுப்பார்."
பழைய ஏற்பாடு முழுவதிலும் தேவனுடைய சமூகம் அக்கினியின் மூலமாக வெளிப்படுத்தப்பட்டது.
யாத்திராகமம்:3:1-5 - முட்செடியின் நடுவிலிருந்து அக்கினியின் மூலம் தேவன் மோசேயை சந்தித்தார்.
1இராஜாக்கள்:18 - "அக்கினியால் உத்தரவு அருளும் தெய்வமே தெய்வம்" என்பதை பாகால் தீர்க்கதரிசிகள் உணர்ந்து கொள்ளும்படியாக எலியாவின் நாட்களில் பரிசுத்த ஆவியானவர் அக்கினியின் மூலம் வெளிப்பட்டார்.
அப்போஸ்தலர்:2:2,3 - "அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம் போல, வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று. அல்லாமலும் அக்கினிமயமான நாவுகள்போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு அவர்கள் ஒவ்வொருவர்மேலும் வந்து அமர்ந்தது."
- எல்லாவகையான அசுத்தமான பொருட்களையும் அக்கினி சுட்டெரிக்கிறது. அவர் நம்மிலுள்ள பாவங்களை அழிக்கிறார்.
எபிரேயர்:12:29 - "நம்முடைய தேவன் பட்சிக்கிற அக்கினியாயிருக்கிறாரே."
- அக்கினி ஒளியை கொடுக்கிறது. பரிசுத்த ஆவியானவர் வரும்போது பரலோகத்தின் தெய்வீக ஒளியை பாய்ச்சி, நித்திய ஜீவனையும் பரலோகத்தின் இரகசியங்களையும் உணர உதவி செய்கிறார்.
- அக்கினி வல்லமையையும் வாஞ்சையையும் தருகிறது.
3. காற்று
யோவான்:3:8 - "காற்றானது தனக்கு இஷ்டமான இடத்திலே வீசுகிறது, அதின் சத்தத்தைக் கேட்கிறாய், ஆகிலும் அது இன்ன இடத்திலிருந்து வருகிறதென்றும், இன்ன இடத்துக்குப் போகிறதென்றும் உனக்குத் தெரியாது; ஆவியினால் பிறந்தவனெவனோ அவனும் அப்படியே இருக்கிறான் என்றார்."
கிரேக்க வார்த்தை: நியூமா (Pneuma) - பரிசுத்த காற்று
காற்று பூமியில் எங்கும் நிறைந்திருக்கிறது. பரிசுத்த ஆவியானவர் இல்லாத இடம் எங்குமில்லை. அவர் எங்கும் எப்போதும் கிரியை செய்து கொண்டே இருக்கிறார்.
காற்று தொடர்ந்து அசைவிலேயே இருக்கிறது. தட்பவெப்ப நிலைக்கேற்ப உயர் அழுத்த மண்டலத்திலிருந்து குறைவான அழுத்த மண்டலத்திற்கு காற்று வீசிக்கொண்டேயிருக்கிறது. அதேபோல பரிசுத்த ஆவியானவரும் பழைய ஏற்பாட்டுக் காலத்திலும் புதிய ஏற்பாட்டுக் காலத்திலும் கிரியை செய்தததுபோல் இப்போதும் கிரியை செய்து கொண்டே இருக்கிறார்.
4.எண்ணெய்
1சாமுவேல்:16:13 - "அப்பொழுது சாமுவேல்: தைலக்கொம்பை எடுத்து, அவனை அவன் சகோதரர் நடுவிலே அபிஷேகம்பண்ணினான்; அந்நாள்முதற்கொண்டு, கர்த்தருடைய ஆவியானவர் தாவீதின்மேல் வந்து இறங்கியிருந்தார்; சாமுவேல் எழுந்து ராமாவுக்குப் போய்விட்டான்."
தேவனுக்கென்று பிரித்தெடுக்கும்படி அபிஷேகம் செய்யப்படுவதற்கு அடையாளமாக எண்ணெய் சொல்லப்படுகிறது.
பரிசுத்த ஆவியானவரின் எண்ணெயில் எரியும் வெளிச்சம் மட்டுமே தேவனுடைய வசனத்தை பிரகாசிக்கச் செய்யும். பரலோகத்திலுள்ள பரிசுத்த ஸ்தலத்தின் இரகசியங்களை வெளிப்படுத்திக்காட்டும்.
5. மழை
சங்கீதம்:72:6 - "புல்லறுப்புண்ட வெளியின்மேல் பெய்யும் மழையைப் போலவும், பூமியை நனைக்கும் தூறலைப்போலவும் இறங்குவார்".
மழை இல்லாமல் கனிகளை காண முடியாது. ஆவிக்குரிய ஜீவியத்திலும் ஆவிக்குரிய கனிகளும் ஆவிக்குரிய வல்லமைகளையும் பெற்று எழுப்புதலை அடைய வேண்டுமானால் பரிசுத்த ஆவியாகிய மழையை பெற்றால் மட்டுமே முடியும்.
பரிசுத்த ஆவியானவரின் "முன்மாரி" பழைய ஏற்பாட்டு காலத்திலும், பெந்தெகோஸ்தே நாளில் மேல்வீட்டறையில் கூடியிருந்த 120 பேர் காலம் வரைக்கும் பொழிந்தருளப்பட்டது. தற்போது இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு முன்பாக "பின்மாரி" பொழியப்படுகிறது.
6. புறா
யோவான்:1:32 - "பின்னும் யோவான் சாட்சியாகச் சொன்னது: ஆவியானவர் புறாவைப்போல வானத்திலிருந்திறங்கி, இவர்மேல் தங்கினதைக் கண்டேன்."
உலகத்தின் எல்லா பகுதிகளிலும் புறா சமாதானத்தின் சின்னமாக இருக்கிறது. தேவன் நோவா காலத்தில் உலகத்தை அழித்தபோது கர்த்தருடைய கண்களில் நோவாவுக்கும் அவன் குடும்பத்தாருக்கும் கிருபை கிடைத்ததினால் பேழையினால் காக்கப்பட்டார்கள். தண்ணீர் வற்றிவிட்டதா என்பதை தெரிந்து கொள்ளும்படி நோவா புறாவை வெளியே விட்டான். அது ஒலிவ இலையை கொண்டு வந்தது. (ஆதி:8:10,11)
தேவனுடைய ஆக்கினை தீர்ப்பு கடந்து சென்று விட்டது என்பதையும், பூமியின் மீது சமாதானம் வந்துவிட்டது என்பதையும் காட்டும் முதல் ஆதாரம் புறா தான்.
புறா கபடற்றதும், தூய்மையுமான ஒரு உயிரினம். பரிசுத்த ஆவியானவர் புறா ரூபங்கொண்டு இறங்கி வந்தார். அவர் பரிசுத்தமுள்ள தேவன். அவரில் அசுத்தமில்லை.
புறா மிக சுலபமாக பயந்து விடும். மீண்டும் மீண்டும் துன்பப்பட்டால் நிரந்தரமாக அந்த இடத்தை விட்டு போய் விடும். நம் இருதயத்தில் பரிசுத்தாவியானவர் என்றும் தங்கியிருக்க வேண்டுமானால் நாம் மிகவும் கவனமும், பயபக்தியுடனும் நடந்து அவரை துக்கப்படுத்தாமல் பார்த்து கொள்ள வேண்டும். நாம் தொடர்ந்து எதிர்ப்போமானால் அவர் நம்மை விட்டு போய் விடுவார்.
எபேசியர்:4:30 - "அன்றியும், நீங்கள் மீட்கப்படும்நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்."
7. திராட்சரசம்
எபேசியர்:5:18 - "துன்மார்க்கத்திற்கு ஏதுவான மதுபான வெறிகொள்ளாமல், ஆவியினால் நிறைந்து;"
பரிசுத்த ஆவியானவரின் நிறைவு திராட்சரசத்தை போல இருதயத்திற்கு மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் அளிக்கிறது. ஆவிக்குரிய மகிழ்ச்சியையும் பரலோக பேரின்பத்தையும் கொண்டு வருகிறது.
திராட்சரசம் மக்களை மகிழ்ச்சியூட்டுவது போல் தோன்றுகிறது. அநித்தியமான சமாதானத்தை தருகிறது.அச்சத்தையும் கவலைகளையும் பாரங்களையும் மறக்க வைக்கிறது. ஆனால் பரிசுத்த ஆவியானவர் உலக கவலைகளை நம்மை விட்டு அகற்றி விடுகிறார்.
பரிசுத்தாவியின் நிறைவு பாவத்தின் மீது நாம் வெற்றிக்கொள்ள தைரியத்தையும் தந்து ஜெயஜீவியம் செய்ய ஏதுவாயிருக்கிறது.
பரிசுத்தாவியின் நிறைவு எதிர்ப்புகளின் நடுவே நாம் உறுதியாய் நிற்பதற்கு பெலன் தருகிறது.
8. முத்திரை
முத்திரை - திறக்காமலிருப்பதற்கான ஒரு பாதுகாவல்
எபேசியர்:1:13 - "நீங்களும் உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைக் கேட்டு, விசுவாசிகளானபோது, வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியால் அவருக்குள் முத்திரைபோடப்பட்டீர்கள்."
இயேசுவின் இரத்தத்தால் முத்திரையிடப்பட்டால், நாம் பாவத்தில் வீழ்ந்து விடாதபடி பரிசுத்தாவியின் வல்லமையால் தேவன் நம்மை காத்துக்கொள்கிறார். பொல்லாங்கன் நம்மை தொடான்.
முத்திரை ஒரு தனி உரிமையை காட்டுகிறது. நம் கையொப்பமோ முத்திரையோ இல்லாமல் வங்கியிலிருக்கும் நமது பணத்தை எடுக்க முடியாது. அதேபோல தேவன் தம் மக்கள் மீதுள்ள தனிப்பட்ட உரிமையை நிரூபிக்க பரிசுத்த ஆவியின் முத்திரையை பதிக்கிறார். யாராவது அபிஷேகம் பண்ணப்பட்டவர்களுக்கு தீங்கிழைத்தால் தேவ கோபாக்கினை வரும்.
முத்திரை அதிகாரத்தை காட்டுகிறது. சீஷர்கள் இயேசு தங்களோடு இருந்த வரையிலும் அதிகாரத்தோடும் வல்லமையோடும் செயல்பட்டனர். இயேசு பரமேறிய பின்பு தோல்வியடைந்தவர்களாக காணப்பட்டார்கள். ஆனால் பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தை பெற்ற பின் பெரிய அதிகாரத்தை பெற்றார்கள். வல்லமை வெளிப்பட்டது.
9. உத்திரவாதம்
2கொரிந்தியர்:1:21,22 - "உங்களோடேகூட எங்களையும் கிறிஸ்துவுக்குள் ஸ்திரப்படுத்தி, நம்மை அபிஷேகம்பண்ணினவர் தேவனே.அவர் நம்மை முத்திரித்து, நம்முடைய இருதயங்களில் ஆவியென்னும் அச்சாரத்தையும் கொடுத்திருக்கிறார்."
நாம் இரட்சிக்கப்பட்டிருந்தாலும் விசுவாசத்திலும் குறைவுப்பட்டிருப்போம். சாத்தான் சந்தேக அம்புகளை எய்யும் போது சில சமயம் வீழ்ந்துவிடுவோம். ஆனால் அவ்வாறு விழ்ந்து விடாமலிருக்க பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை பெற்றவர்களுக்கு அவர் சத்திய வசனத்தின் மூலம் உத்திரவாதமளித்து கொண்டேயிருப்பார்.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)