மார்ச் 17, 2019

நானே சர்வ வல்லமையுள்ள தேவன்


நானே சர்வ வல்லமையுள்ள தேவன்

ஆதியாகமம்:35:11 பின்னும் தேவன் அவனை நோக்கி: நான் சர்வவல்லமையுள்ள தேவன், நீ பலுகிப் பெருகுவாயாக; ஒரு ஜாதியும் பற்பல ஜாதிகளின் கூட்டங்களும் உன்னிடத்திலிருந்து உண்டாகும்; ராஜாக்களும் உன் சந்ததியில் பிறப்பார்கள்.”

நாம் ஆராதிக்கும் கர்த்தர் “எல்ஷடாய் - சர்வ வல்லமையுள்ள தேவன்”

எல்ஷடாய் :
ஆபிரகாமுக்கு கர்த்தர் “எல்ஷடாய்” என்ற நாமத்தின் மூலம் சந்தித்து அவனை ஆசீர்வதித்தார்.

ஆதியாகமம்:17:1,2 ஆபிராம் தொண்ணூற்றொன்பது வயதானபோதுகர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி: நான் சர்வவல்லமையுள்ள தேவன்; நீ எனக்கு முன்பாக நடந்துகொண்டு உத்தமனாயிரு. நான் உனக்கும் எனக்கும் நடுவாக என் உடன்படிக்கையை ஏற்படுத்தி, உன்னை மிகவும் திரளாய்ப் பெருகப்பண்ணுவேன் என்றார்.”

  • வாழ்வாதாரத்தை தரும் தேவன்

ரோமர்:4:19 அவன் விசுவாசத்திலே பலவீனமாயிருக்கவில்லை; அவன் ஏறக்குறைய நூறு வயதுள்ளவனாயிருக்கும்போது, தன் சரீரம் செத்துப்போனதையும், சாராளுடைய கர்ப்பம் செத்துப்போனதையும் எண்ணாதிருந்தான்.”

-    சாராளின் கர்ப்பம் செத்து போயிற்று; இருந்தாலும் அவன் அதை எண்ணாதிருந்தான். ஏனென்றால், வாக்குப்பண்ணின தேவன் அதை நிறைவேற்றுவார். உடன்படிக்கை பண்ணினவர் அதை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறார் என்பதை ஆபிரகாம் நன்றாக அறிந்திருந்தான்.

-    தேவன் நம் சூழ்நிலைகளை பயன்படுத்தி, தமது சர்வ வல்லமையை நம் வாழ்வில் வெளிப்படுத்துவார். ஆனால், நாம் அதை அறிவதில்லை; அதனால் தேவன் ஏன் சோதனைகளை அனுமதித்தார் என்று அவரை கேள்விக்கேட்கிறோம்.

எபிரேயர்:11:11 விசுவாசத்தினாலே சாராளும் வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவரென்றெண்ணி, கர்ப்பந்தரிக்கப் பெலனடைந்து, வயதுசென்றவளாயிருந்தும் பிள்ளைபெற்றாள்.”

-    சாராளின் செத்துப்போன கர்ப்பத்தை எல்ஷடாய் தேவன் உயிர்ப்பித்தார். வெறுமையை தேவன் மாற்றுவார். அதேபோல நம்முடைய வாழ்விலும் செத்துப்போன நிலையில் இருக்கும் எல்லா காரியங்களையும் உயிர்ப்பிக்க எல்ஷடாய் தேவனால் முடியும்.

-    ஆபிரகாம் சாராள் இருவரும் பிள்ளை இல்லாமல் எத்தனை நாள் ஏங்கியிருப்பார்கள்?! தனக்கு ஒரு வாரிசு இல்லையே என்று மனமுடைந்து இருந்த அவர்கள், தங்கள் வாழ்க்கையில் தேவனை பின்பற்றி அவருடைய வாக்குத்தத்தங்களை விசுவாசித்தார்கள். வாக்குத்தத்தங்கள் குறிப்பிட்ட காலங்களில் நிறைவேறியது.
  •   ஆசீர்வாதத்தை தரும் தேவன்

யோபு:1:1 – “ஊத்ஸ் தேசத்திலே யோபு என்னும் பேர்கொண்ட ஒரு மனுஷன் இருந்தான்; அந்த மனுஷன் உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாயிருந்தான்.”

-    யோபு உத்தமனாக, தேவனுக்கு பயந்தவனாக, மிகுந்த ஆஸ்தியுள்ளவனாக வாழ்ந்து வந்தான். ஆனால் கர்த்தர் அவன் வாழ்வில் சோதனைகளை அனுமதித்தார். அதற்காக அவன் கர்த்தரை மறுதலிக்கவோ தூஷிக்கவோ இல்லை. மாறாக சோதனைகளை சகித்து கொண்டான்.

யோபு:1:22 - இவையெல்லாவற்றிலும் யோபு பாவஞ்செய்யவுமில்லை, தேவனைப்பற்றிக் குறைசொல்லவுமில்லை.”

-    இதையெல்லாம் பார்த்துக்கொண்டே இருந்தே தேவன் அவனை இன்னும் பல மடங்கு ஆசீர்வதித்தார்.

யோபு:5:17இதோ, தேவன் தண்டிக்கிற மனுஷன் பாக்கியவான்; ஆகையால் சர்வவல்லவருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதிரும்.”

“சர்வ வல்லவருடைய சிட்சை அற்பமானது அல்ல; அது நம்மை பண்படுத்தி, நம்மை விளைச்சலுக்கு ஆயத்தப்படுத்துகிறது.”

யோபு:42:12கர்த்தர் யோபின் முன்னிலைமையைப் பார்க்கிலும் அவன் பின்னிலைமையை ஆசீர்வதித்தார்; பதினாலாயிரம் ஆடுகளும், ஆறாயிரம் ஒட்டகங்களும், ஆயிரம் ஏர்களும், ஆயிரம் கழுதைகளும் அவனுக்கு உண்டாயின.”
  •   தன்னிறைவை தரும் தேவன்

ரூத்:1:20,21அதற்கு அவள்: நீங்கள் என்னை நகோமி என்று சொல்லாமல், மாராள் என்று சொல்லுங்கள்; சர்வவல்லவர் எனக்கு மிகுந்த கசப்பைக் கட்டளையிட்டார். நான் நிறைவுள்ளவளாய்ப் போனேன்கர்த்தர் என்னை வெறுமையாய்த் திரும்பிவரப்பண்ணினார்கர்த்தர் என்னைச் சிறுமைப்படுத்தி, சர்வவல்லவர் என்னைக் கிலேசப்படுத்தியிருக்கையில், நீங்கள் என்னை நகோமி என்பானேன் என்றாள்.”

-     பஞ்ச காலத்திலே அப்பத்தின் வீடாகிய பெத்லகேமை விட்டு, புறஜாதிய நாடான மோவாபுக்கு நிறைவாக போன நகோமி குடும்பம், யாவற்றையும் இழந்து திரும்பவும் தன்னுடைய சொந்த ஜனத்தாரிடத்திற்கு வந்தார்கள்.
-     தேவன் நிரப்ப நினைத்தால், அதற்கு முன் கண்டிப்பாக வெறுமையாக்குவார். பின் நம்மை நிறைவுள்ளவர்களாக மாற்றுவார்.

“அவர் தன்னில் தானே நிறைவுள்ள தேவன். அவரில் குறைவுகளே இல்லை. அவர் நம்முடைய குறைவுகளை நிறைவாக்க போதுமானவர்”

யோவான்:15:5நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது.”

ஒருவேளை நகோமி தன்னுடைய குடும்பத்தாரை இழக்காதிருந்தால், தேவனுடைய மீட்பின் திட்டம் ரூத் மூலமாக நிறைவேறியிருக்காது. தேவனின் நினைவுகள் நம் நினைவுகள் போல அல்ல.

நகோமியின் வாழ்வில் பெரிய மாற்றம் நடந்தது. தனக்கு தேவன் இவ்வளவு சோதனைகளை அனுமதித்து விட்டாரே என்று மனம் சோர்ந்து போனாலும், பின் தேவனின் திட்டத்திற்கு ஒப்புக்கொடுத்தாள். ரூத் மூலமாக தாவீதின் வம்ச வரலாறு தொடங்கியது. அந்த வம்சத்தில் இயேசு கிறிஸ்து பிறந்தார்.

எல்ஷடாய் தேவனால் ஆகாத காரியம் ஒன்றுமில்லை. அவர் நித்தியமானவர். அவர் நமக்கு அளித்த வாக்குத்தத்தங்களை ஏற்ற வேளையில் நிறைவேற்றுவார். அவருடைய சர்வ வல்லமையை தேவன் நம் மூலமாக வெளிப்படுத்துவார்.

மோசே மூலம் பார்வோனிடம் தம்முடைய சர்வ வல்லமையை வெளிப்படுத்தின தேவன், நம் மூலமாக நம்மை சுற்றிலும் உள்ளவர்களிடம் அவரின் வல்லமையை வெளிப்படுத்துவார். அப்போது, நம் சத்துருக்கள் சிதறுண்டு போவார்கள்.

சர்வ வல்லமையுள்ள தேவன் நம்மிடம் உடன்படிக்கையை ஏற்படுத்த நாம் என்ன செய்ய வேண்டும்?


தேவன் யாக்கோபுக்கு உடன்படிக்கை ஏற்படுத்த “சர்வ வல்லமையுள்ளவர்” என்ற நாமத்தில் வெளிப்பட்டார்.

யாக்கோபு தன் சகோதரனாகிய ஏசாவுக்கு பயந்து விலகி ஓடி வந்த இடத்திற்கு போய், தேவன் ஒரு பலிபீடத்தை உண்டாக்கும் படி சொன்னார்.

ஆதியாகமம்:35:1,2 – தேவன் யாக்கோபை நோக்கி: நீ எழுந்து பெத்தேலுக்குப் போய், அங்கே குடியிருந்து, நீ உன் சகோதரனாகிய ஏசாவின் முகத்திற்கு விலகி ஓடிப்போகிறபோது, உனக்குத் தரிசனமான தேவனுக்கு அங்கே ஒரு பலிபீடத்தை உண்டாக்கு என்றார். அப்பொழுது யாக்கோபு தன் வீட்டாரையும் தன்னோடேகூட இருந்த மற்ற அனைவரையும் நோக்கி: உங்களிடத்தில் இருக்கிற அந்நிய தெய்வங்களை விலக்கிப்போட்டு, உங்களைச் சுத்தம்பண்ணிக்கொண்டு, உங்கள் வஸ்திரங்களை மாற்றுங்கள்.”

யாக்கோபு ஏசாவுக்கு பயந்து ஓடி வந்த போது மிகுந்த பயத்தோடு கர்த்தரை சேவித்து கொண்டிருந்தான். பயபக்தியுடன் இருந்தான். அவனை குறித்து கர்த்தரின் திட்டத்தை அறியாதவனாக இருந்தான். ஆகவே கர்த்தர் அவனை திரும்ப அதே இடத்திற்கு போய் பலிபீடத்தை உண்டாக்க சொன்னார்.
1.  உனக்கு தரிசனமான தேவனுக்கு பலிபீடத்தை உண்டாக்கு 
2. அந்நிய தெய்வங்களை விலக்கிப்போடு
3. உன்னை சுத்தம் பண்ணிக்கொள்

-     இந்த உபவாச நாட்களில் நம்மை நாமே உய்த்து ஆராய வேண்டும். நாம் எதில் குறைவாக இருக்கிறோம் என்பதை கண்டுபிடித்து சரி செய்ய வேண்டும்.
                               
1.    பலிபீடத்தை உண்டாக்க வேண்டும்:

ஆதியாகமம்:35:7 – “அங்கே அவன் ஒரு பலிபீடத்தைக் கட்டி, தன் 
சகோதரனுடைய முகத்துக்குத் தப்பி ஓடினபோது, அங்கே தனக்கு தேவன் தரிசனமானபடியால், அந்த ஸ்தலத்திற்கு ஏல்பெத்தேல் என்று பேரிட்டான்.”

ஏல்பெத்தேல் – தேவனின் வீடு

ஆதியாகமம்:28:17அவன் பயந்து, இந்த ஸ்தலம் எவ்வளவு பயங்கரமாயிருக்கிறது! இது தேவனுடைய வீடேயல்லாமல் வேறல்ல, இது வானத்தின் வாசல் என்றான்.”

பெத்தேலின் சிறப்பம்சம்:
        பெத்தேல் “தேவனுடைய வீடு” எனப்படும். தேவன் யாக்கோபுக்கு தன்னுடைய உடன்படிக்கையை பெத்தேலில் கொடுக்கிறார்.
-                       பெத்தேலில் ரெபேக்காளின் தாதியாகிய தெபோராளை கர்வாலி மரத்தின் கீழ் அடக்கம் செய்யப்பட்டாள். (ஆதியாகமம்:35:8) அதே மரத்தின் கீழ் உட்கார்ந்து, நியாயாதிபதிகள் காலத்தில் தெபோராள் இஸ்ரவேலை நியாயம் விசாரித்து வந்தாள். (நியாயாதிபதிகள்:4:5)
-                       கர்த்தர் தம்முடைய தீர்க்கதரிசிகளை பெத்தேலுக்கு அனுப்பி தம்முடைய நியாயத்தீர்ப்பை கொடுத்துக்கொண்டே இருந்தார். ஏனென்றால் பெத்தேலில் விக்கிரகவழிபாடு இருந்தது. (ஆமோஸ்:3:14)

தேவனுடைய வீடாகிய பெத்தேலை பரிசுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். நாமே தேவன் தங்கும் வீடாக இருக்கிறோம்.

1கொரிந்தியர்:3:17ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக்கெடுத்தால், அவனை தேவன் கெடுப்பார்; தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது; நீங்களே அந்த ஆலயம்.”

தேவன் வாழும் நம் உள்ளத்தில் பரிசுத்தம் இருக்க வேண்டும். பலிபீடத்தில் அர்ப்பணிக்கப்பட வேண்டியவை பரிசுத்தமாகவும் சுத்தமாகவும் இருக்க வேண்டும். பூரணமாகவும் இருக்க வேண்டும். ஆபேலை போல தேவன் அங்கீகரிக்கும்படியான பலியை முழுமனதோடு செலுத்த வேண்டும்.

ஆதியாகமம்:4:4ஆபேலும் தன் மந்தையின் தலையீற்றுகளிலும் அவைகளில் கொழுமையானவைகளிலும் சிலவற்றைக் கொண்டுவந்தான். ஆபேலையும் அவன் காணிக்கையையும் கர்த்தர் அங்கிகரித்தார்.”

நம்மை நாமே பலியாக தேவ சமூகத்தில் ஒப்புக்கொடுக்க வேண்டும். ஏனென்றால், தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை நமக்காக கல்வாரி சிலுவையில் பலியாக ஒப்புக்கொடுத்தார். அவருடைய சமூகத்தில் நம்மை நாமே ஒப்புக்கொடுத்து முழுஉள்ளத்தோடு அவரை ஆராதிக்க வேண்டும்.

2.   அந்நிய தெய்வங்களை விலக்கிப்போடவேண்டும்

யாத்திராகமம்:20:4மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்

நம்மிடம் அந்நிய தெய்வங்களுக்குரிய எந்தவொரு அச்சடையாளங்களும் இருக்கக்கூடாது; விக்கிரக ஆராதனை தேவனின் பார்வையில் அருவருப்பானது.

2கொரிந்தியர்:6:14-18அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது? கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவேது? அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது? தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது? நான் அவர்களுக்குள்ளே வாசம்பண்ணி, அவர்களுக்குள்ளே உலாவி அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள் என்று, தேவன் சொன்னபடி, நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களே. ஆனபடியால், நீங்கள் அவர்கள்  நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானவைகளைத் தொடாதிருங்கள் என்று  கர்த்தர்  சொல்லுகிறார். அப்போது, நான் உங்களை ஏற்றுக்கொண்டு, உங்களுக்குப் பிதாவாயிருப்பேன், நீங்கள் எனக்குக் குமாரரும் குமாரத்திகளுமாயிருப்பீர்களென்று சர்வவல்லமையுள்ள கர்த்தர் சொல்லுகிறார்.”

1யோவான்:5:21பிள்ளைகளே, நீங்கள் விக்கிரகங்களுக்கு விலகி, உங்களைக் காத்துக்கொள்வீர்களாக. ஆமென்.”

விக்கிரக ஆராதனை என்பது கல்லால் ஆன சிற்பங்களை தொழுது கொள்வது மட்டுமல்ல; இறந்தவர்களை தொழுதுகொள்வது, நமக்கு பிடித்த பிரபலமானவர்களை நமஸ்கரிப்பது போன்ற காரியங்களும் விக்கிரக ஆராதனை தான்.

1கொரிந்தியர்:10:14 – “ஆகையால் எனக்குப் பிரியமானவர்களே, விக்கிரகாராதனைக்கு விலகி ஓடுங்கள்.”

ஆகையால் யாக்கோபு தன்னிடமும் தன் ஜனங்களிடமும் உள்ள அந்நிய தெய்வங்களின் சுரூபங்களை கர்வாலி மரத்தின் கீழ் புதைத்தான். யாக்கோபு தன்னை மாத்திரம் அல்ல தன் குடும்பத்தாரையும் தன் ஜனங்களையும் செவ்வைப்படுத்தினான்.

3.   உன்னை சுத்தம் பண்ணிக்கொள்

தேவன் நம்மிடம் அதிகம் எதிர்பார்ப்பது “பரிசுத்தம்” மட்டுமே. ஏனென்றால் அவர் பரிசுத்தர். அவர் பாவத்தை பாராத சுத்த கண்ணராக இருக்கிறார்.
நாம் பரிசுத்தமாயிருந்தால் தேவன் நம்மில் நிரந்தரமாக வாசம் செய்வார். ஏனெனில் நாமே அவர் தங்கும் ஆலயம். அவர் தங்கும் ஆலயமாகிய நம் உள்ளத்தை சுத்தமாக காத்துக் கொள்ள வேண்டும்.

லேவியராகமம்:11:45 நான் உங்கள் தேவனாயிருக்கும்படி உங்களை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணின கர்த்தர், நான் பரிசுத்தர்; ஆகையால், நீங்களும் பரிசுத்தராயிருப்பீர்களாக.”

சில வேளையில் பழைய மனுஷனுக்குரிய நடக்கைகள் வரும். அதை களைந்து போட வேண்டும். இரட்சிக்கப்படுவதற்கு முன் செய்த காரியங்கள் நினைவுக்கு வரும்; ஆனால் அவை எல்லாவற்றிலேயும் நாம் இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே ஜெயங்கொள்ள வேண்டும்.

எபேசியர்:4:22-24அந்தப்படி, முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை நீங்கள் களைந்துபோட்டு, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி, மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்.”

யோசுவா:3:5யோசுவா ஜனங்களை நோக்கி: உங்களைப் பரிசுத்தம்பண்ணிக்கொள்ளுங்கள்; நாளைக்குக்  கர்த்தர்  உங்கள்  நடுவிலே அற்புதங்களைச் செய்வார் என்றான்.”

நம்மை சுத்தமாக காத்துக்கொள்ள…
 “பாவத்திற்கு விலகி ஓடு; பிசாசிற்கு எதிர்த்து நில்”

எப்படி சுத்தம் பண்ணவேண்டும்?

1.  வேதவசனத்தினால்
சங்கீதம்:119:9 வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம்பண்ணுவான்? உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக்கொள்ளுகிறதினால்தானே.”

யோவான்:17:17 – “உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம்.”

-   -    ஒருவன் தன்னை சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டுமானால் அவன் வேதவசனத்தை நன்கு கற்று அதின்படி வாழ்வதினால் மட்டுமே ஆகும்.
-    
  - வேதவசனம் அவன் கால்கள் தீமைக்குள் நடவாதபடி ஏற்ற நேரத்தில் அவனை எச்சரித்து செவ்வைப்படுத்தும்.


                           2.   ஜெபிப்பதினால்

அனுதினமும் நாம் ஜெபிப்பதினால், உலகம் மாம்சம் பிசாசு நம்மை மேற்கொள்ளாது.

·         உலகம் – பூமிக்குரிய கீழானவைகளை போதிக்கும்; அபத்தமானவைகளை போதிக்கும்; இழிவானவைகளை போதிக்கும்.

·         மாம்சம் – மாம்சத்தின் கிரியைகளை போதிக்கும்  (கலாத்தியர்:5:19,20)

·         பிசாசு – நரகத்துக்கு கொண்டு செல்வான்.

எனவே, நாம் தினமும் ஜெபிப்பதினால் நம் வழியை செவ்வைப்படுத்திக்கொள்ள முடியும்.

                         3 பரிசுத்த ஆவியின் நிறைவு

அப்போஸ்தலர்:2:3 அல்லாமலும் அக்கினிமயமான நாவுகள்போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு அவர்கள் ஒவ்வொருவர்மேலும் வந்து அமர்ந்தது.”

பரிசுத்த ஆவியின் அக்கினி நமக்குள்ளே வரும் போது, நம்முடைய ஆவி ஆத்துமா சரீரம் சுட்டெரிக்கப்படும். பரிசுத்த அக்கினி வரும்போது அசுத்தங்கள் சுட்டெரிக்கப்படும்.

-    பழைய ஏற்பாட்டில் … அக்கினி முட்செடியில் எரிந்தது; குத்துவிளக்கில் எரிந்தது; பலிபீடத்தில் எரிந்தது. முட்செடிக்கும் குத்துவிளக்குக்கும் ஒன்றும் ஆகவில்லை; ஆனால் பலிபீடத்தில் இருந்த பலிமிருகத்தை அக்கினி பட்சித்தது.

-    நம்மை நாமே பலிபீடத்தில் ஒப்புக்கொடுத்தால், பரிசுத்த ஆவியின் அக்கினி நம்மில் இருக்கும் வேண்டாத அசுத்தங்களை சுட்டெரிக்கும். நம்மை பரிசுத்த ஆவியானவர் சுத்தப்படுத்துவார்.



இம்மூன்று காரியங்களையும் யாக்கோபு செய்ததினால், அவனை சர்வ வல்லமையுள்ள தேவன் ஆசீர்வதித்து உடன்படிக்கை பண்ணினார்.

"எத்தனாக இருந்த யாக்கோபு இஸ்ரவேலாக 

மாறினான்."


நாமும் யாக்கோபை போல இந்த 3 காரியங்களிலும் நம்மை செவ்வைப்படுத்திக்கொண்டால், சர்வ வல்லமையுள்ள தேவன் நம்மோடும் நம் சந்ததியோடும் உடன்படிக்கை பண்ணுவார்.

ஆமென்!


















மார்ச் 16, 2019

மீட்பின் விலையும் – மீட்பின் பொருளும்


                                “மீட்பின் விலையும் – மீட்பின் பொருளும்”                                
 The price of redemption - redemption of the material

திறவுகோல்வசனம்:              ரோமர்: 5:15 – “… மீறுதலின் பலன் கிருபை வரத்தின் பலனுக்கு ஒப்பானதல்ல. எப்படியெனில், ஒருவனுடைய மீறுதலினாலே அநேகர் மரித்திருக்க, தேவனுடைய கிருபையும் இயேசுகிறிஸ்து என்னும் ஒரே மனுஷனுடைய கிருபையினாலே வரும் ஈவும் அநேகர்மேல் அதிகமாய் பெருகியிருக்கிறது”.
ஒரு அடிமை அல்லது ஒரு போர்க்கைதியை மீட்பதைக் குறிக்கும். பழைய ஏற்பாட்டில் இது சம்பந்தமாக நாம் பார்க்கும்போது, அது அரைச்சேக்கல் வரி என்கிற வீதத்தில் தன்தன் உயிரை மீட்கும் காணிக்கையாக ஆண்டவருக்குச் செலுத்த வேண்டியது அவசியம். பின் வரும் வேதவசனங்களை நன்கு வாசித்துப் பாருங்கள்:

யாத்திராகமம்: 30:12 – “நீ இஸ்ரவேல் புத்திரரை அவர்கள் இலக்கத்தின்படி கணக்குப்பார்க்கும் பொருட்டு, அவர்களை எண்ணும்போது, அவர்களுக்குள்ளே ஒரு வாதை உண்டாகாதபடிக்கு, அவர்களில் ஒவ்வொருவனும் எண்ணப்படும் சமயத்தில் தன்தன் ஆத்துமாவுக்காகக் கர்த்தருக்கு மீட்கும் பொருளைக் கொடுக்கக்கடவன்”.

யாத்திராகமம்: 30:13-15 – “எண்ணப்படுகிறவர்களின் தொகையிலே சேருகிற ஒவ்வொருவனும் பரிசுத்த ஸ்தலத்துச் சேக்கல் கணக்கின்படி அரைச்சேக்கல் கொடுக்க வேண்டும்; ஒரு சேக்கலுக்கு இருபது கேரா; கர்த்தருக்குச் செலுத்தப்படுவது அரைச்சேக்கல்”.

யாத்திராகமம்: 30:14 – “எண்ணப்படுகிறவர்களின் தொகையிலே சேருகிற இருபது வயது முதற்கொண்டு அதற்கு மேற்பட்ட ஒவ்வொருவனும் அதைக் கர்த்தருக்குச் செலுத்த வேண்டும்”.
யாத்திராகமம்: 30:15 – “உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவர்த்தி பண்ணும்படி நீங்கள் கர்த்தருக்குக் காணிக்கை செலுத்தும்போது, ஐசுவரியவான் அரைச்சேக்கலுக்கு அதிகமாய்க் கொடுக்கவும் வேண்டாம், தரித்திரன் அதற்குக் குறைவாகக் கொடுக்கவும் வேண்டாம்”.

ஐசுவரியவான் ஆனாலும், தரித்திரனானாலும் மீட்கும் பொருளாக இருவருக்கும் சமமாக அரைச்சேக்கல் செலுத்த வேண்டும் என காண்கிறோம்.

பழைய ஏற்பாட்டில் மீட்பிற்கு விலையாக எதை? எவ்வளவு? எதற்காக? கொடுத்தனர்?

1.   தனது மாடு இன்னொருவனைக் கொன்றதால், அந்த உயிருக்கு ஈடாக செலுத்த வேண்டிய அபராதம்:              
     யாத்திராகமம்: 21:30 – “அபராதம் கொடுக்கும்படி தீர்க்கப்பட்டதனால், அவன் தன் ஜீவனை மீட்கும் பொருளாக விதிக்கப்பட்ட அபராதத்தைக் கொடுக்கக்கடவன்”.

2.   மனிதனின் முதற்பேற்றை மீட்கக் கொடுத்த பணம்:                                                             
      எண்ணாகமம்: 18:15 – “மனிதரிலும் மிருகங்களிலும் அவர்கள் கர்த்தருக்குச் செலுத்தும் சமஸ்த பிராணிகளுக்குள்ளே கர்ப்பந்திறந்து பிறக்கும் யாவும் உனக்கு உரியதாயிருக்கும்; ஆனாலும் மனிதரின் முதற்பேற்றை அகத்தியமாய் மீட்க வேண்டும்; தீட்டான மிருகஜீவனின் தலையீற்றையும் மீட்க வேண்டும்”.
3.   அடிமையான தன் இனத்தானை, குடும்பத்தார் மீட்கக் கொடுக்கும் பணம்: (லேவியராகமம்: 25:47-51)

லேவியராகமம்: 25:51 – “… அவன் தன் விலைக்கிரயத்திலே அவைகளுக்குத் தக்கதைத் தன்னை மீட்கும் பொருளாகத் திரும்பக் கொடுக்கக்கடவன்”.

4.   அடகு வைத்ததை மீட்கக் கொடுத்த தொகை: (லேவியராகமம்: 25:25-28)
லேவியராகமம்: 25:26,27 – “… தானே அதை மீட்கதக்கவனானால், அதை விற்றபின் சென்ற வருஷங்களின் தொகையைத் தள்ளி, மீந்த தொகையை ஏற்றி, கொண்டவனுக்குக் கொடுத்து, அவன் தன் காணியாட்சிக்குத் திரும்பிப் போகக்கடவன்”.

இத்தகைய பொருள் தரக்கூடியதற்கு அடிப்படையான எபிரேய மூலபாஷை “Koper” என்பதாகும். அதேபோல, இன்னொரு எபிரேய சொல்லும் இதற்கு அடிப்படையாக இருக்கிறது. அது “Asam” என எபிரெய மொழியிலும், “Trespass Offering” (டிரஸ்பாஸ் ஆஃபரிங்) எனவும் அழைக்கப்படுகிறது. அதன் பொருள் குற்றநிவாரணபலி என்பதாகும்.

1.   கர்த்தருக்குரிய பரிசுத்தமானவைகளில் குற்றஞ்செய்தால், குற்றநிவாரணபலியாக செலுத்த வேண்டிய அபராதம்:
லேவியராகமம்: 5:15-18 – “ஒருவன் கர்த்தருக்குரிய பரிசுத்தமானவைகளில் குற்றஞ்செய்து, அறியாமையினால் பாவத்துக்குட்பட்டால், அவன் தன் குற்றத்தினிமித்தம் பரிசுத்த ஸ்தலத்துச் சேக்கல் கணக்கின்படியே, நீ அவன்மேல் சுமத்தும் அபராதம் எவ்வளவோ, அவ்வளவு வெள்ளிச் சேக்கல் பெறும் பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவைக் குற்ற நிவாரணபலியாகக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டு வந்து, பரிசுத்தமானதைத் தான் செய்த தப்பிதத்தினால் உண்டான நஷ்டத்தைச் செலுத்தி, அதினோடு ஐந்தில் ஒரு பங்கை அதிகமாகக் கூட்டி, ஆசாரியனுக்குக் கொடுப்பானாக; குற்றநிவாரணபலியாக ஆட்டுக்கடாவினாலே அவனுக்காக ஆசாரியன் பாவநிவர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும். ஒருவன் செய்யத்தகாதென்று கர்த்தருடைய கட்டளைகளினால் விலக்கப்பட்ட யாதொன்றைச் செய்து பாவத்துக்குட்பட்டால், அதை அவன் அறியாமையினால் செய்தாலும், அவன் குற்றமுள்ளவனாயிருந்து, தன் அக்கிரமத்தைச் சுமப்பான். அதினிமித்தம் அவன் குற்றநிவாரணபலியாக, உன் மதிப்புக்குச் சரியான பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவை ஆசாரியனிடத்தில் கொண்டு வருவானாக; அவன் அறியாமல் செய்த தப்பிதத்தை ஆசாரியன் அவனுக்காக நிவர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும்”.

2.   தன் அயலானுக்கு மாறாட்டம் பண்ணி, பலாத்காரமாய் பறித்துக் கொண்டதினிமித்தம் செலுத்த வேண்டிய அபராதம்:
லேவியராகமம்: 6:2-7 – “ஒருவன் கர்த்தருக்கு விரோதமாக அநியாயம் செய்து, தன் வசத்தில் ஒப்புவிக்கப்பட்ட பொருளிலாவது, கொடுக்கல் வாங்கலிலாவது, தன் அயலானுக்கு மாறாட்டம் பண்ணி, அல்லது ஒரு வஸ்துவைப் பலாத்காரமாய்ப் பறித்துக் கொண்டு, அல்லது தன் அயலானுக்கு இடுக்கண் செய்து, அல்லது காணாமற்போனதைக் கண்டடைந்ததும் அதை மறுதலித்து, அதைக்குறித்துப் பொய்யாணையிட்டு, மனிதர் செய்யும் இவைமுதலான யாதொரு காரியத்தில் பாவஞ் செய்தானேயாகில், அவன் செய்த பாவத்தினாலே குற்றவாளியானபடியினால், தான் பலாத்காரமாய்ப் பறித்துக் கொண்டதையும், இடுக்கண் செய்து பெற்றுக் கொண்டதையும், தன் வசத்திலே ஒப்புவிக்கப்பட்டதையும், காணமற்போயிருந்து தான் கண்டெடுத்ததையும், பொய்யாணையிட்டுச் சம்பாதித்த பொருளையும் திரும்பக் கொடுக்கக்கடவன்; அந்த முதலைக் கொடுக்கிறதும் அல்லாமல், அதினோடு ஐந்தில் ஒரு பங்கு அதிகமாகவுங் கூட்டி, அதைத் தான் குற்றநிவாரணபலியை இடும் நாளில், அதற்குரியவனுக்குக் கொடுத்துவிட்டு, தன் குற்றநிவாரணபலியாக, உன் மதிப்புக்குச் சரியான பழுதற்ற ஆட்டுக்கடாவைக் கர்த்தருக்குச் செலுத்தும்படி, அதை ஆசாரியனிடத்தில் குற்றநிவாரணபலியாகக் கொண்டு வருவானாக. கர்த்தருடைய சந்நிதியில் அவன் பாவத்தை ஆசாரியன் நிவர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அவன் குற்றவாளியாகச் செய்த அப்படிப்பட்ட எந்தக் காரியமும் அவனுக்கு மன்னிக்கப்படும் என்றார்”.

3.   குற்றநிவாரணபலி:
லேவியராகமம்: 7:1-7 – “குற்றநிவாரண பலியின் பிரமாணம் என்னவென்றால், அது மகா பரிசுத்தமானது. சர்வாங்க தகனபலி கொல்லப்படும் இடத்தில், குற்றநிவாரண பலியும் கொல்லப்பட வேண்டும்; அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின் மேல் சுற்றிலும் தெளித்து, அதினுடைய கொழுப்பு முழுவதையும், அதின் வாலையும், குடல்களை மூடிய கொழுப்பையும், இரண்டு குண்டிக்காய்களையும், அவைகளின்மேல் சிறு குடல்களினிடத்திலிருக்கிற கொழுப்பையும், குண்டிக்காய்களோடே கூடக் கல்லீரலின்மேல் இருக்கிற ஜவ்வையும் எடுத்துச் செலுத்துவானாக. இவைகளை ஆசாரியன் பலிபீடத்தின்மேல் கர்த்தருக்குத் தகனபலியாகத் தகனிக்கக்கடவன்; அது குற்றநிவாரணபலி. ஆசாரியரில் ஆண்மக்கள் யாவரும் அதைப் புசிப்பார்களாக; அது பரிசுத்த ஸ்தலத்தில் புசிக்கப்பட வேண்டும்; அது மகா பரிசுத்தமானது. பாவநிவாரணபலி எப்படியோ குற்றநிவாரணபலியும் அப்படியே அவ்விரண்டிற்கும் பிரமாணம் ஒன்றே; அதினாலே பாவநிவர்த்தி செய்த ஆசாரியனை அது சேரும்”.

4.   கர்த்தருடைய கட்டளையை மீறி மனிதர் செய்யும் பாவங்களை செய்தால் செலுத்த வேண்டிய அபராதம்:
எண்ணாகமம்: 5:5-8 – “நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்ல வேண்டியது என்னவென்றால்: ஒரு புருஷனானாலும் ஸ்திரீயானாலும், கர்த்தருடைய கட்டளையை மீறி மனிதர் செய்யும் பாவங்களில் யாதொரு பாவத்தைச் செய்து குற்றவாளியானால், அவர்கள் தாங்கள் செய்த பாவத்தை அறிக்கையிடக்கடவர்கள்; அப்படிப்பட்டவன் தான் செய்த குற்றத்தினிமித்தம் அபராதத்தின் முதலோடே ஐந்தில் ஒரு பங்கை அதிகமாய்க்கூட்டி, தான் குற்றஞ’செய்தவனுக்குச் செலுத்தக்கடவன். அதைக் கேட்டு வாங்குகிறதற்கு இனத்தான் ஒருவனும் இல்லாதிருந்தால், அப்பொழுது அவனுக்காகப் பாவநிவர்த்தி செய்யும்படி ஆட்டுக்கடா செலுத்தப்படுவதுமல்லாமல், கர்த்தருக்கு அந்த அபராதம் செலுத்தப்பட்டு, அது ஆசாரியனைச் சேர வேண்டும்”.

5.   குற்றநிவாரணபலியான இயேசுகிறிஸ்து:
ஏசாயா: 53:10 – “கர்த்தரோ அவரை நொறுக்கச் சித்தமாகி, அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார்; அவருடைய ஆத்துமா தன்னைக் குற்றநிவாரணபலியாக ஒப்புக் கொடுக்கும்போது, அவர் தமது சந்ததியைக் கண்டு, நீடித்தநாளாயிருப்பார்; கர்த்தருக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும்”.
மேசியாவாகிய இயேசுகிறிஸ்துவின் ஆத்துமா குற்றநிவாரண பலியைச் செலுத்தும்போது, இயேசு இந்த வசனத்தை (ஏசாயா: 53:10,11 – “… அநேகர்…”) மனதிற் கொண்டிருந்தார் என கருத இடமுண்டு. ஏசாயா: 53:11 – “அவர் தமது ஆத்தும வருத்தத்தின் பலனைக் கண்டு திருப்தியாவார்; என் தாசனாகிய நீதிபரர் தம்மைப் பற்றும் அறிவினால் அநேகரை நீதிமான்களாக்குவார்; அவர்களுடைய   அக்கிரமங்களை தாமே சுமந்து கொள்வார்”. இந்த வசனத்தை இயேசு காணும்போது, தம்மை மற்றவரின் பாவத்திற்காக பாடுபடுகிறவராகப் புரிந்து கொண்டார் எனலாம். இப்படி பதிலாளாகப் பாடுபடுவது, அநேகருக்காக தம் தந்தையாகிய பிதாவுக்கு தன்னையே பலியாக படைப்பது என்பதை பழைய ஏற்பாட்டிலிருந்தல்ல … அவர் பாடுபட்ட வரலாற்றிலிருந்து புதிய ஏற்பாட்டிலிருந்து நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

மாற்கு: 14:36 – “அப்பா பிதாவே, எல்லாம் உம்மாலே கூடும்; இந்தப் பாத்திரத்தை என்னிடத்திலிருந்து எடுத்துப்போடும், ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்றார்”.
மாற்கு: 15:34 – “ஒன்பதாம் மணி நேரத்திலே, இயேசு: எலோயீ! எலோயீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு: என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்”.

ரோமர்: 5:15 – “… மீறுதலின் பலன் கிருபை வரத்தின் பலனுக்கு ஒப்பானதல்ல. எப்படியெனில், ஒருவனுடைய மீறுதலினாலே அநேகர் மரித்திருக்க, தேவனுடைய கிருபையும் இயேசுகிறிஸ்து என்னும் ஒரே மனுஷனுடைய கிருபையினாலே வரும் ஈவும் அநேகர்மேல் அதிகமாய் பெருகியிருக்கிறது”.

மத்தேயு: 20:28 – “அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ் செய்யவும், அநேகரை மீட்கும் பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் என்றார்”.

1தீமோத்தேயு: 2:6 – “எல்லாரையும் மீட்கும்பொருளாகத் தம்மை ஒப்புக் கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே; இதற்குரிய சாட்சி ஏற்ற காலங்களில் விளங்கி வருகிறது”.

மீட்பின் விலையும் – மீட்பின் பொருளும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவே என்பதை இந்த ஆய்வின்மூலம் அறிகிறோம்.




வேதாகம வாய்ப்பாடு

வேதாகம வாய்ப்பாடு 

"வேதாகம வாய்ப்பாடு" என்ற புத்தகத்தின் ஆசிரியர் - பாஸ்டர்.சார்லஸ்.



- வேதத்தை எப்படி தியானிப்பது? வேதத்தில் உள்ள புத்தகங்கள், கணக்கீடுகள், எண்கள், தேசத்தின் வரைபடங்கள், நாட்கள்,ஆசரிப்பு கூடாரம், தரிசனங்கள் போன்ற வேதாகமத்தில் உள்ள பல காரியங்கள் குறித்து என் தந்தை மிகுந்த பாரத்தோடு தேவ சமூகத்தில் உட்கார்ந்து தியானித்து சேகரித்து புத்தகமாக தயாரித்துள்ளார்.

ஏற்கனவே இப்புத்தகம் PDF format ல் பல இடங்களுக்கு போய் சேர்ந்தது. "தயவுசெய்து இப்புத்தகத்தின் பிரதியை யாரும் எடுக்கவேண்டாம்."

ஏனென்றால் இப்புத்தகம் என் தந்தை பல நாட்கள் தேவனுடைய பாதத்தில் அமர்ந்து இதை ஆராய்ந்து சேகரித்து தயாரித்துள்ளார்.

இந்த புத்தகத்தை என் தகப்பனின் முதலாம் ஆண்டு நினைவு நாள் அன்று வெளியிடலாம் என்று திட்டமிட்டிருக்கிறோம். ஆகவே தேவைகள் சந்திக்கப்படும்படியாக ஜெபித்துக்கொள்ளுங்கள்.

இப்புத்தகம் வேண்டும் என்று விரும்புகிறவர்கள் கீழ்க்காணும் எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள்: 8300707701

எங்களுக்காகவும், எங்கள் ஊழியங்களுக்காகவும் ஜெபித்துக்கொள்ளுங்கள். நன்றி!

- இப்படிக்கு மகள் லிடியா சார்லஸ்

மார்ச் 12, 2019

முழு வேதாகமம் பற்றிய ஒரு புள்ளி விபரம்


முழு வேதாகமம் பற்றிய ஒரு புள்ளி விபரம்

பைபிளில் உள்ள மொத்த புஸ்தகங்கள்  -  66; பழைய ஏற்பாட்டில் - 39; புதிய ஏற்பாட்டில் - 27                                                                                    
பழைய ஏற்பாடு எபிரேய மொழியிலும், புதிய ஏற்பாடு கிரேக்க மொழியிலும் எழுதப்பட்டது. முதல் புஸ்தகம் மோசேயினால் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன் கி.மு.1500 ஆண்டில் எழுதப்பட்டது. கடைசி புத்தகம் அப்.யோவான் கி.பி.96 ல் அதாவது சுமார் 1920 வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்டது. பைபிளில் 8,674 வித்தியாசமான எபிரேயு வார்த்தைகளும் 5,624 வித்தியாசமான கிரேக்க வார்த்தைகளும் உள்ளன. பழையஏற்பாட்டில் 17 வரலாற்று புஸ்தகங்களும், 5 கவிநடை செய்யுள் புஸ்தகங்களும், 17 தீர்க்கதரிசன புஸ்தகங்களும் உள்ளன.  புதிய ஏற்பாட்டில் 4 சுவிசேஷ புஸ்தகங்களும், 1 நடபடிகள், 21 நிரூபங்கள் மற்றும் ஒரு வெளிப்படுத்தல் புஸ்தகமும் உள்ளன. ஏறக்குறைய 2930 வேதாகம பாத்திரங்கள் உள்ளனர்.
ஜெர்மனியிலிருந்து வந்த மிஷினரியான சீகன் பால்கு தான் தமிழ் மொழியில் வேதத்தை மொழிப்பெயர்த்தவர். வேதாகமத்தில் சேர்க்கப்படாத 1 எஸ்றா, 2 எஸ்றா, தோபித், யூடித், எஸ்தரின் ஓய்வு, சாலமோனின் ஞானங்கள், பிரசங்கிகள், பாரூக், மூன்று எபிரேய குழந்தைகளின் பாடல்கள், சூசன்னாவின் வரலாறு, பாகாலும் வலு சர்ப்பமும், மனாசாவின் ஜெபம், 1 மக்கபேயர்கள், 2 மக்கபேயர்கள் மற்றும் எரேமியாவின் கடிதம் 14  புத்தகங்கள் தள்ளுபடி ஆகமங்கள் (APOCRYPHAL BOOKS) என்று அழைக்கப்படுகின்றன. இந்த பதினான்கு புத்தகங்களும் கத்தோலிக்கர்களின் வேதாகமத்தில் இணைக்கப்பட்டுள்ளன. பொதுவாக பைபிளை 70 மணிநேரத்தில் ஒருவர் படித்து முடிக்கலாம். அதாவது, இரவும் பகலும் இடைவிடாமல் தொடர்ந்து வாசித்தால் முடிக்கலாம்.
எழுதியவர்கள்                                                                               40 பேர்      எழுதப்பட்ட காலங்கள்                         சுமார்   1600 வருடங்கள்
மொழிபெயர்க்கப்பட்டுள்ள மொழிகள்                                2000 – க்கும்                                            மேல். இன்னும் தொடருகிறது…                                                
அதிகாரங்கள்                                                                                            1,189

வசனங்கள்
                                                                                     31,101

வாக்குத்தத்தங்கள்
                                                                  1,260

கட்டளைகள்
                                                                               6,468

மொத்த தீர்க்கதரிசனங்கள்                               8,000
நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள்  வசனங்கள்                         3,268 


நிறைவேறாத தீர்க்கதரிசனங்கள்                         3,140  
      
மொத்த கேள்விகள்                                                                       3,294

நீளமான பெயர்     -      மகர்-சாலால்-ஆஸ்- பாஸ்      (ஏசாயா 8:1)

நீளமான வசனம்
                                                                        எஸ்தர் 8:9

சிறிய வசனம்
                                                                                 யோவான்11:35

நடுவான புஸ்தகம்                                                               மீகா, சங்கீதம்  117 

சிறிய அதிகாரம்                                                                           சங்கீதம் 117

பெரிய அதிகாரம்                                    சங்கீதம்  119         (176 வசனங்கள்) 

பெரிய புஸ்தகம்                                        சங்கீதம்            (150 அதிகாரங்கள்)

சிறிய புஸ்தகம்                                                                             3 யோவான் 

பழைய ஏற்பாடு  புள்ளி விபரம்: (எபிரேய மொழி)

மொத்த புஸ்தகங்கள்:                     39 
அதிகாரங்கள்
:                                929 
வசனங்கள்:                                23,114 

நடுவான புஸ்தகம்:     நீதிமொழிகள் 
                 
நடுவான அதிகாரம்:    யோபு 20 

நடுவான வசனம்:      சங்கீதம்: 103:1,2

சிறிய புஸ்தகம்:       ஒபதியா 

நீளமான வசனம்:      எஸ்தர் 5:23

பெரிய அதிகாரம்:      சங்கீதம் 119 

பெரிய புஸ்தகம்:      சங்கீதம்

சிறிய வசனம் :        யோபு: 36:1 

புதிய ஏற்பாடு புள்ளி விபரம்: (கிரேக்க மொழி)

மொத்த புஸ்தகங்கள்:                          
27 
அதிகாரங்கள்:                                 260 
வசனங்கள்:                                  7,957 

நடுவான புஸ்தகம்:   2 தெசலோனிக்கேயர்
 
நடுவான அதிகாரம்:    ரோமர் 8, 9
 
நடுவான வசனம்:      அப்போஸ்தலரின் நடபடிகள் 27:17
 
சிறிய புஸ்தகம்:     3  யோவான்
 
சிறிய வசனம்:         யோவான் 11:35
 
நீளமான வசனம்:      வெளிப்படுத்தின விஷேசம் 20:4
 
பெரிய அதிகாரம்:      லூக்கா 1
 
பெரிய புஸ்தகம்:      லூக்கா