மார்ச் 12, 2019

தேவனின் நாமங்கள்


*தேவனின் நாமங்கள்*


1.
எல்டெரெக்தமீம்உத்தமமான வழியையுடைய தேவன் (2சாமு 22:)

2.
எல்எஹாத்ஒரேதேவன் (மல் 2:10)

3.
எல்ஏலோஹேஇஸ்ரஏல்இஸ்ரவேலின்தேவன் – (ஆதி 33:20)

4.
எல்எமெத்சத்தியபரன் (சங்31:5)

5.
எல்கிப்போர்வல்லமையுள்ள. தேவன் (ஏசா 10:21)

6.
எல்ஹக்கவொத்மகிமையுள்ளதேவன் (சங் 29:3)

7.
எல்ஹக்கதொல்மகத்துவமுள்ளதேவன் (உபா 10:17)

8.
எல்ஹன்னஎமான்பரிசுத்தமுள்ளதேவன் (ஏசா 5:16)

9.
எல்ஹன்னோராபயங்கரமானதேவன் (நெகே 9:32)

10.
இம்மனுஎல்தேவன்நம்மோடு (ஏசா 7:14)

11.
எல்கன்னோஎரிச்சலுள்ளதேவன் (யாத் 20:5)

12.
எல்மஉஸ்என்அரணானதேவன் (2சாமு 22:33)

13.
எல்நாசாமன்னிக்கிறதேவன் (சங் 99:8)

14.
எல்ரஹீம்இரக்கமுள்ளதேவன் (உபா 4:31)

15.
எல்சேலாகன்மலையாகியதேவன்சங் 42:9)

16.
எல்ஷமாஎனக்குச் செவிகொடுக்கிற தேவன்( சங் 17:6)

17.
எல்ஷாமர்பெரித்உடன்படிக்கையை காக்கிற தேவன் (உபா 7:9)

18.
யேகோவாஏலியோன்உன்னதமானகர்த்தர் (சங் 7:17)

19.
யேகோவாஏல்கர்த்தர்என்தேவன் (சங் 18:2)

20.
யேகோவாஏலோஹிம்தேவனாகியகர்த்தர் (ஆதி 2:4)

21.
யேகோவாஏலோஹினுநம்முடையதேவனாகியகர்த்தர் (சங் 99:5)

22.
யேகோவாஏலோஹெக்காஉன்தேவனாகியகர்த்தர் (யாத் 20:2)

23.
யேகோவாஏலோஹாய்என்தேவனாகியகர்த்தர் (சக 14:5)

24.
யேகோவாஸிட்கேனுநமது நீதியாயிருக்கிற கர்த்தர் (எரே 23:6)

25.
யேகோவாமக்கதேஷ்உங்களைப் பரிசுத்தப்படுத்துகிற கர்த்தர் நான் (யாத் 31:13)

26.
யேகோவாரா-கர்த்தர்என்மேய்ப்பர் (சங் 23:1)

26.
யேகோவாராபாநானேஉன்பரிகாரியாகியகர்த்தர் (யாத் 15:23)

27.
யேகோவாஷாலோம்கர்த்தர்என்சமாதானக்காரணர் (நியா 6:24)

28.
ஏலாஷெமையாபரலோகத்தின்தேவன் (எஸ்றா 7:23)

29.
ஏலாயெருஷலேம்எருசலேமின்தேவன் (எஸ்றா 7:19)

30.
ஏலாயிஸ்ரஎல்இஸ்ரவேலின்தேவன் (எசே 5:1)

31.
ஏக்காத்ஒரேகர்த்தர் (சக 14:9)

32.
மஷியஹ்மேசியா (தானி 9:26)

33.
கெரென்யெஷுவாஇரட்சண்யக்கொம்பு (லூக் 1:69)

34.
யெஷுவாஇயேசு (மத் 1:21)

35.
ரூஆஹக்கதோஷ்பரிசுத்தஆவி (லூக் 3:16)

36.
யாயேகோவாஓலாம்கர்த்தராகிய யேகோவா நித்திய கன்மலை (ஏசா 26:4)

37.
யேகோவாகாதோஷ்பரிசுத்தராகியகர்த்தர் (ஏசா 43:15)

38.
பாராஇஸ்ரஏல்இஸ்ரவேலின்சிருஷ்டிகர் (ஏசா 43:15)

39.
யேகோவாகாதோஷ்இஸ்ரஏல்இஸ்ரவேலின் பரிசுத்தர் (ஏசா 45:11)

40.
யேகோவாஹ்மெத்கர்த்தர் மெய்யான தெய்வம் (எரே 10:10)

41.
யேகோவாகாதீஏலோஹிம்கர்த்தர் ஜீவனுள்ள தேவன் (எரே 10:10)

42.
யேகோவாஓலாம்மெலேக்கர்த்தராகிய நித்திய ராஜா (எரே 10:10)

43.
யேகோவாட்ஸூர்கர்த்தர் என் துருகம் (18:2)

44.
யேகோவாசேலாகர்த்தர் என் கன்மலை (சங் 18:2)

45.
யேகோவாஷாபாத்கர்த்தர் நம்முடைய நியாயாதிபதி (ஏசா 33:22)

46.
யேகோவாஷாமார்கர்த்தர் என்னைக் காக்கிறவர் (சங் 121:5)

47.
யேகோவாயாஷாகர்த்தர் உன் இரட்சகர் (ஏசா 49:26)

48.
யேகோவாயாஷார்கர்த்தர்உத்தமர் (சங் 92:14)

49.
யேகோவாஸிம்ராத்கர்த்தர்என்கீதம் (யாத் 15::2)

50.
யேகோவாமாஓஸ்கர்த்தர்என்கோட்டை (சங் 18:2)

51.
யேகோவாமாட்ஸூத்கர்த்தர்என்கோட்டை (சங் 18:2)

52.
யேகோவாமிஸ்காப்கர்த்தர்என்உயர்ந்தஅடைக்கலம் (சங் 18:2)

53.
யேகோவாமில்க்கிமாயுத்தத்தில்வல்லவராகியகர்த்தர் (யாத் 15:3)

54.
யேகோவீமிப்தாக்என்நம்பிக்கையாகியகர்த்தராகியஆண்டவர் (சங் 71:5)

55.
யேகோவாநக்காகர்த்தர்என்வெளிச்சம் (சங் 27:1)

56.
யேகோவாஓஸ்கர்த்தர்என்பெலன் (யாத் 15:2)

57.
யேகோவாகெரென்யெஷாகர்த்தர்என்இரட்சண்யக்கொம்பு (சங் 18:2)

58.
யேகோவாமாகேன்கர்த்தர்என்கேடகமுமாயிருக்கிறார் (சங் 28:7)

59.
யேகோவாமானோஸ்என்அடைக்கலமுமாகியகர்த்தாவே (எரே 16:19)

60.
யேகோவாஹமெலெக்கர்த்தராகியராஜா (சங் 98:6)

61.
யேகோவாமெலெக்ஓலாம்அத்கர்த்தர்சதாகாலங்களுக்கும்ராஜாவாயிருக்கிறார் (சங் 10:16)

62.
யேகோவாமெபாலத்விடுவிக்கிறகர்த்தர் (சங்18:2)

63.
யேகோவாகெமுலாசரிக்கட்டுகிறகர்த்தர் (எரே 51:56)

64.
யேகோவாஆசாநம்மைஉண்டாக்கியகர்த்தர் (சங் 95:6)

65.
யேகோவாஇஸ்ஸூம்வல்லமையும்பராக்கிரமுமுள்ளகர்த்தர் (சங் 24:8)

66.
யேகோவாஇம்மெக்குஉன்னோடுஇருக்கும்கர்த்தர் (நியா 6:12)

67.
யேகோவாகன்னாகர்த்தர்எரிச்சலுள்ளவர் (யாத் 34:14)

68.
யேகோவாகாபோத்கர்த்தர்என்மகிமை (சங் 3:3)

69.
யேகோவாசசெஸெக்என்பெலனாகியகர்த்தர் (சங் 18:1)

70.
யேகோவாஏலோஹிம்இப்ரீஎபிரெயருடையதேவனாகியகர்த்தர் (யாத் 3:18)

71.
யேகோவாஏலோஹூம்இஸ்ரஏல்இஸ்ரவேலின்தேவனாகியகர்த்தர் (நியா 5:3)

72.
யேகோவாஅய்ஸர்கர்த்தரேநமக்குத்துணை (சங் 33:20)

73.
யேகோவாஎஸ்ஸாமி (கர்த்தர்என்பெலன் (சங் 28:7)

74.
யேகோவாகவால்கர்த்தர்உன்மீட்பர் (ஏசா 49:26)

75.
யேகோவாகிபோர்பராக்கிரமமுள்ளகர்த்தர் (சங் 24:8)

76.
யேகோவாகிப்போர்மில்க்காமாயுத்தத்தில்பராக்கிரமமுள்ளகர்த்தராமே (சங் 24:8)

77.
யேகோவாஅதோன்கல்ஹஎரெட்ஸ்சர்வபூமிக்கும்ஆண்டவராகியகர்த்தர் (யோசு 3:13)

78.
யேகோவாஅவினுஎங்கள்பிதாவாகியகர்த்தர் (ஏசா 64:8)

79.
யேகோவாபாராசிருஷ்டிகராகியகர்த்தர் (ஏசா 40:28)

80.
யேகோவாபாராகாட்ஸாஎரெட்ஸ்பூமியின்கடையாந்தரங்களைசிருஷ்டித்தகர்த்தர் (ஏசா 40:28)

81.
யேகோவாகாகக்கர்த்தர்நம்நியாயப்பிரமாணிக்கர் (ஏசா 33:22)

82.
யேகோவாகேரேப்மகிமைபொருந்தியபட்டயமும்அவரே (உபா 33:29).

உங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்


“உங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்”

திறவுகோல்வசனம்: அப்: 2:3 – “அல்லாமலும் அக்கினிமயமான நாவுகள் போலப்  பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு அவர்கள் ஒவ்வொருவர்மேலும் வந்து அமர்ந்தது”

அக்கினிமயமான நாவுகள் காணப்பட்டது; பிரிந்திருக்கும் நாவுகள் வந்தமர்ந்தது

பழைய ஏற்பாட்டு காலங்களில் …  1. முட்செடியில் எரிந்தது  2. குத்துவிளக்கில் எரிந்தது  3. பலிபீடத்தில் எரிந்தது

புதிய ஏற்பாட்டு காலத்தில் …     நம் இதயங்களில் பரிசுத்த ஆவியானவர் எரிய வேண்டும்.

அப்: 19:19 – எபேசு பட்டணத்தில் காணப்பட்ட அக்கினி அசுத்த புத்தகங்களை எரித்தது பரிசுத்த அக்கினி.
மாயவித்தைக்காரராயிருந்தவர்களில் அநேகர் தங்கள் புஸ்தகங்களைக் கொண்டுவந்து, எல்லாருக்கு முன்பாகச் சுட்டெரித்தார்கள்; அவைகளின் கிரயத்தைத் தொகைபார்த்து, ஐம்பதினாயிரம் வெள்ளிக்காசாகக் கண்டார்கள்.”

    அக்கினி பற்றி எரிந்தால் வேண்டாதது எரிந்துவிடும்
    இன்று நம் இருதயங்களில் பரிசுத்த அக்கினி பற்றி எரிவதாக

அப்: 19:11 – “பவுலின் கைகளினாலே தேவன் விசேஷித்த அற்புதங்களைச் செய்தருளினார்.” – அதுபோல இன்று உங்கள் கைகளினாலே தேவன் விசேஷித்த அற்புதங்களைச் செய்வாராக! ஆமென்! அல்லேலூயா!

1. உபா: 9:1-3 – அவர் பட்சிக்கிற அக்கினி:
    இது தீரிக்கதரிசன வார்த்தை.; அக்கினி செய்கிற யாவையும் அவர் செய்கிறார்.
இஸ்ரவேலே, கேள்: நீ இப்பொழுது யோர்தானைக் கடந்து, உன்னிலும் ஜனம் பெருத்ததும் பலத்ததுமான ஜாதிகளைத் துரத்தி, வானத்தையளாவிய மதில் சூழ்ந்த பெரிய பட்டணங்களைப் பிடித்து, ஏனாக்கின் புத்திரராகிய பெரியவர்களும் நெடியவர்களுமான ஜனங்களைத் துரத்திவிடப்போகிறாய்; இவர்கள் செய்தியை நீ அறிந்து, ஏனாக் புத்திரருக்கு முன்பாக நிற்பவன் யார் என்று சொல்லப்படுவதை நீ கேட்டிருக்கிறாய். உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு முன்பாகக் கடந்துபோகிறவர் என்பதை இன்று அறியக்கடவாய்; அவர் பட்சிக்கிற அக்கினியைப்போல அவர்களை அழிப்பார்; அவர்களை உனக்கு முன்பாக விழப்பண்ணுவார்; இவ்விதமாய்க் கர்த்தர் உனக்குச் சொன்னபடியே, நீ அவர்களைச் சீக்கிரமாய்த் துரத்தி, அவர்களை அழிப்பாய்.”

2. ஏசா: 6:1-4 – அவர் சுட்டெரிக்கிற அக்கினி:

    புகை எழும்புகிற இடத்தில் அக்கினி இருக்கும். ஆலயத்தில் புகை எழும்பிற்று. அப்படியானால், ஆலயத்தில் அக்கினி இருந்தது என பொருள்.

“உசியா ராஜா மரணமடைந்த வருஷத்தில், ஆண்டவர் உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கக்கண்டேன்; அவருடைய வஸ்திரத்தொங்கலால் தேவாலயம் நிறைந்திருந்தது. சேராபீன்கள் அவருக்கு மேலாக நின்றார்கள்; அவர்களில் ஒவ்வொருவனுக்கும் அவ்வாறு செட்டைகளிருந்தன; அவனவன் இரண்டு செட்டைகளால் தன் தன் முகத்தை மூடி, இரண்டு செட்டைகளால் தன் தன் கால்களை மூடி, இரண்டு செட்டைகளால் பறந்து; ஒருவரையொருவர் நோக்கி: சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது என்று கூப்பிட்டுச் சொன்னார்கள். கூப்பிடுகிறவர்களின் சத்தத்தால் வாசல்களின் நிலைகள் அசைந்து, ஆலயம் புகையினால் நிறைந்தது.”

3. ஏசா: 6:6,7 – பரிசுத்தாவியானவர் அக்கினிமயமாக இருக்கிறார்:

அப்பொழுது சேராபீன்களில் ஒருவன் பலிபீடத்திலிருந்து, தன் கையிலே பிடித்த குறட்டால் ஒரு நெருப்புத் தழலை எடுத்து, என்னிடத்தில் பறந்து வந்து, அதினால் என் வாயைத் தொட்டு: இதோ, இது உன் உதடுகளைத் தொட்டதினால் உன் அக்கிரமம் நீங்கி, உன் பாவம் நிவிர்த்தியானது என்றான்.”

ஆவியானவர் அக்கினிமயமாக இருக்கிறார்; அவர் நமக்குள் இராவிட்டால் … நாம் அசுத்தமுள்ளவர்களாக இருப்போம்.

4. 1தீமோ: 2:21,22 – பெந்தேகொஸ்தே அக்கினி – சுத்திகரிக்கிற அக்கினி:

ஆகையால் ஒருவன் இவைகளைவிட்டு, தன்னைச் சுத்திகரித்துக்கொண்டால், அவன் பரிசுத்தமாக்கப்பட்டதும் எஜமானுக்கு உபயோகமானதும், எந்த நற்கிரியைக்கும் ஆயத்தமாக்கப்பட்டதுமான கனத்துக்குரிய பாத்திரமாயிருப்பான். அன்றியும், பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு நீ விலகியோடி, சுத்த இருதயத்தோடே கர்த்தரைத் தொழுதுகொள்ளுகிறவர்களுடனே, நீதியையும் விசுவாசத்தையும் அன்பையும் சமாதானத்தையும் அடையும்படி நாடு.”

5. வெளி: 1:14 – அவரது கண்கள் அக்கினி ஜுவாலை:

அவருடைய சிரசும் மயிரும் வெண்பஞ்சைப்போலவும் உறைந்த மழையைப்போலவும் வெண்மையாயிருந்தது; அவருடைய கண்கள் அக்கினிஜுவாலையைப் போலிருந்தது;”

தேவனுடைய அக்கினியினால் தேவாலயங்கள் இணைக்கப்படுகின்றன; தேவனுடைய அக்கினியினால் தேவனுடையவர்கள் இணைக்கப்படுகிறார்கள். (வெளி: 1:4,11,13 – ஏழுசபைகள், நிலையங்கி தரித்தவர் ஒருங்கிணைக்கிறார்)

6. லூக்: 24:32 – கொளுந்து விட்டு எரியும் அக்கினி:

அப்பொழுது அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி: வழியிலே அவர் நம்முடனே பேசி, வேதவாக்கியங்களை நமக்கு விளங்கக்காட்டினபொழுது, நம்முடைய இருதயம் நமக்குள்ளே கொழுந்துவிட்டு எரியவில்லையா

7. அப்: 2:42-44 – ஐக்கியத்தை தருகிற அக்கினி:

“அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள். எல்லாருக்கும் பயமுண்டாயிற்று. அப்போஸ்தலர்களாலே அநேக அற்புதங்களும் அடையாளங்களும் செய்யப்பட்டது. விசுவாசிகளெல்லாரும் ஒருமித்திருந்து, சகலத்தையும் பொதுவாய் வைத்து அநுபவித்தார்கள்.”

ஐக்கியத்தை மட்டுமல்ல அற்புத அடையாளங்களை கொண்டு வந்த அக்கினி.

அப்: 3:11 – “குணமாக்கப்பட்ட சப்பாணி பேதுருவையும் யோவானையும் பற்றிக்கொண்டிருக்கையில், ஜனங்களெல்லாரும் பிரமித்து, சாலொமோன் மண்டபம் என்னப்பட்ட மண்டபத்திலே அவர்களிடத்திற்கு ஓடிவந்தார்கள்.”

பரிசுத்த ஆவியானவரின் வல்லமை, அவரது நிறைவு, அவரிடத்தில் இணைப்பை, பிணைப்பை கொண்டு வந்தது. ஜனங்களை ஒருங்கிணைக்கிறது.

இரண்டு வகை சபை உண்டு.

1.   பரிசுத்த ஆவியானவரின் அக்கினி சபையை ஒருங்கிணைக்கலாம்
2.   பனிபோல உறைந்து கிடந்து ஒருங்கிணைக்கலாம்

இதில் எவ்வகை சிறந்தது என நீங்களே தீர்மானியுங்கள்.

ஒருவனுக்குள் பரிசுத்த அக்கினி எரிந்தால் – சாதாரண மனிதன் அசாதாரண மனிதனாக மாறுவான்.
ஒரு சபைக்குள் பரிசுத்த அக்கினி எரிந்தால் – சாதாரண சபை அசாதாரண சபையாக மாறும்
நாம் என்ன செய்யப் போகிறோம்?