ஜனவரி 16, 2016

உங்களுடைய அன்பினால் அறியப்படுங்கள்

Image result for Jn:3:16

“உங்களுடைய அன்பினால் அறியப்படுங்கள்”

அன்பு எப்போது வெளிப்படுகிறது?

“கொடுப்பதில்” அன்பு தன்னை வெளிப்படுத்துகிறது.

       “தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்” (யோவான்: 3:16). என்று வேதம் சொல்கிறது. பிதாவாகிய தேவன் தமது குமாரனை தந்தருளி உலகத்திற்கு தமது அன்பை வெளிப்படுத்தி காண்பித்தார்.

என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரன்” (கலாத்தியர்: 2:20) என்று அப்.பவுல் கூறுகிறார். அதாவது, நம் ஒவ்வொருவர் மேலும் தனித்தனியாக அன்புகூர்ந்து, தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவகுமாரன் என்கிறார்.

“அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து, தம்மைத்தாமே அதற்காக ஒப்புக் கொடுத்தார்” (எபேசியர்: 5:25).

பிதா – குமாரனை கொடுத்து அன்பை வெளிப்படுத்தினார்.

குமாரன் – ஒவ்வொருவர் மேலும் அன்புகூர்ந்தார்; சபையில் உள்ள அனைவர்மேலும் அன்புகூர்ந்து தம்மைதாமே அதற்கு ஒப்புக்கொடுத்து தமது அன்பை வெளிப்படுத்தினார் என இதன்மூலம் நாம் அறிந்து கொள்கிறோம்.

“வாங்குகிறதைப்பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம் என்று கர்த்தராகிய இயேசு சொன்னார்…” (அப்: 20:35). எனவே, கர்த்தராகிய இயேசுகிறிஸ்து எப்பொழுதும் பாக்கியமுள்ளவராக இருப்பதற்கு நம்மேலும் சபையின் மேலும் அன்பை கொடுத்து உரிமையை பெற்றுள்ளார்.

“கிறிஸ்தவர்கள்” என்பதற்குரிய அடையாளமாக, (முத்திரையாக) “அன்பு” விளங்குகிறது


“நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்து கொள்வார்கள்” (யோவான்: 13:35) என்கிறார் ஆண்டவர் இயேசு. அன்புகூரத்தக்கவர்களிடத்திலும், அன்புகூரத்தகாதவர்களிடத்திலும் இது போய்ச்சேரும். 

Image result for Jn:3:16

அழகற்றவர்களிடத்திலும், அழகுமிக்கவர்களிடத்திலும் இது காட்டப்படும். ஒவ்வொரு பண்பற்ற செயலுக்கும் இது தயவைத் திரும்ப செலுத்தும்.
அன்பற்ற கிறிஸ்தவ ஊழியங்கள் அனைத்தும் வீணாகிப்போய்விடும். மிகச் சிறப்பாக வெளிப்படுத்திக் காண்பிக்கப்படும் ஆவியின் வரங்களைக் காட்டிலும் “அன்பு” சிறந்தது. வரத்தைக் காட்டிலும் “கிருபை” மேன்மையானது.

நம்மை வெறுக்கிறவர்களிடத்திலும், எதிரிகளிடத்திலும் அன்பு போய்ச்சேரும். சபிக்கிறவர்களை அது ஆசீர்வதிக்கும். வேண்டுமென்றே நம்மைத் தாக்குகிறவர்களுக்காக ஜெபிக்கும். ஒரு கன்னத்தில் அடிக்கப்படும்போது, மறு கன்னத்தைக் காட்டும்.

நம்மிடத்தில் அன்பு செலுத்தாதவர்களிடம் அன்பு செலுத்துவது, நன்மை செய்யாதவர்களுக்கு நன்மை செய்வது போன்ற இயற்கைக்கு அப்பாற்பட்டவிதத்தில் செயல்புரியும். இவ்விதமாக செயல்படுவதால் உன்னதமானவருடைய குமாரர்களாக நீங்கள் மாறுவதில்லை. உன்னதமானவருடைய பிள்ளைகளாக இருப்பதால் மட்டுமே இப்படிப்பட்ட செயல்களை நீங்கள் வெளிப்படுத்திக் காட்டுகிறீர்கள்.

நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்து அன்புகூறுகிறவராக இருக்கிறார். அவர் அன்பின் திருவுருவாக வெளிப்பட்டார். அவரது அன்பு ஒன்றே நிலையானது. மாறாதது. அவருடைய அன்பை அளக்க முடியாது. அதனுடைய உயரம், ஆழம், நீளம், அகலம் யாவும் எல்லையில்லாதவை.

அவர் நம்மீது அன்புகூர்வதற்கு காரணமேதுமில்லை. இதற்காக அவரைத் தூண்டிவிடவுமில்லை. அன்புகூரத்தக்கதாக நம்மிடத்தில் எந்த ஒரு சிறப்பும் தகுதியும் இல்லை. என்றாலும் அவர் நம்மீது அன்பைச் செலுத்துகிறார். அவர் அவ்வித பண்பு உடையவராக இருக்கும் ஒரே காரணத்தால் அவ்வாறு அன்பு செலுத்துகிறார்.

மற்றவர்களிடம் நாம் செலுத்தும் அன்பு: 

பெரும்பாலும்அறியாமையை அடிப்படையாகக் கொண்டது. அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை அறியாத காரணத்தால் நாம் அவர்களிடத்தில் அன்பு செலுத்துகிறோம். அவர்களைக் குறித்து மேலும் அறிய அறிய, அவர்களுடைய தவறுகளையும் தோல்விகளையும் அதிகமாக அறிவோம். அதனால் அவர்கள் நேசிக்கப்படுவதற்குக் குறைவுடையவர்களாக தோன்றுவார்கள்.

என்றாலும், எத்தகைய தன்மை உடையவர்களாக நாம் இருக்கிறோம் என்பதையும், என்னென்ன தன்மை உடையவர்களாக நாம் இருக்கிறோம் என்பதையும், என்னென்ன செயல்களை செய்கிறோம் என்பதையும் அறிந்திருந்த போதிலும், நமதாண்டவர் இயேசுநாதர் நம்மிடத்தில் அன்பு கூறுகிறார். அவருடைய சர்வ ஞானம் அவருடைய அன்பை நம்மைவிட்டு அகற்றிவிடவில்லை. அவருக்கு முக்கியமற்றவர்கள் என்று எவருமில்லை. சிறப்பற்றவர்கள் என்று யாருமில்லை. இப்புவியில் உள்ள எல்லாரிடமும் அவருடைய அன்பு பாய்ந்து செல்கிறது.

Image result for Jn:3:16

அன்பு செலுத்தாமல் நாம் கிறிஸ்துவைப்போல ஆக முடியாது: 

நேசத்தின் வல்லமையோடும், உணர்ச்சிகளின் வல்லமையோடும், அறிவின் வல்லமையோடும், நாம் தேவனிடத்தில் அன்புகூர வேண்டுமென்று கட்டளை பெற்றிருக்கிறோம். கணவன் மனைவியினிடத்திலும், மனைவி கணவனிடத்திலும் அன்புகூர வேண்டும். விசுவாச குடும்பத்தாரிடத்திலும், இழந்துபோன மனுக்குலத்தினிடத்திலும், ஏன் பகைவர்களிடத்திலும்கூட நாம் அன்புகூர வேண்டும்.

பிறருக்காக நாம் சேவை செய்வதில் நம்மை ஒப்புவித்தால் நாம் அன்புகூருகிறவர்களாக காணப்படுவோம்: 

எப்படியென்றால்… உண்மையான நிலையில் தேவையுள்ளவர்களுக்கு நமது பணத்தைக் கொடுப்பதால் நமது அன்பு வெளிப்படுகிறது. நமது பணத்தைக் கொண்டு நாம் என்ன செய்கிறோம் என்பதினாலே யோவான் நமது அன்பை சோதிக்கிறார்.   “ஒருவன் இவ்வுலக ஆஸ்தி உடையவனாயிருந்தும், தன் இருதயத்தை அவனுக்கு அடைத்துக் கொண்டால், அவனுக்குள் தேவ அன்பு நிலைகொள்ளுகிறதெப்படி?” (1யோவான்: 3:17).

நாமும் சகோதரர்களுக்காக ஜீவனைக் கொடுக்கக் கடனாளிகளாக இருக்கிறோம் என்றும் அவர் வலியுறுத்தி கூறியிருக்கிறார் (1யோவா: 3:16). இதைக்காட்டிலும் மேலான அன்பு வேறொன்றுமில்லை (யோவா: 15:13). இதுவே சிலுவைப்பாதையாக இருக்கிறது.

- Selected -

ஜனவரி 12, 2016

தமிழ் கிறிஸ்தவ கீதங்கள் - இசைகருவியின் பாடல் இசை கீதங்கள்



  Albums by Artist

Ambur Pr. Johnraj
Augustine Jebakkumar
Cruz Divakaran
David Stewart Jr
Dhinakaran
Emil Jebasingh
Esther Baby
Freddy Joseph
Gnanasegar (Innisai ...
Helen Sathya
Hema John
James Vasanthan
Jollee Abraham
Nadaraja Muthaliyar
Paul Thangiah
Sarah Navaroji
Sirkali Yesu Pragasa...
Vedanayagam Sastriar
Visuvasa Geetham (S....

  FMPB - யின் பாடல்கள் : mp3

01 Maghizhvom
02 Jebam Seithiduvom
03 Thooimayea Valima...
04 Marnthidaathea Ne...
05 Amutha Gaanam
06 Vizhiththirungal
07 Melanavaigalayea
08 Vilankodippom
09 Neengalea Yenakku...
10 Marana Pariyantha...
11 Archanaippookkal
12 Kangalai Yeredupp...
13 Aaviyilea Analaay...
14 Kizhakkilea Oru N...
15 Aayiram Kaikal
16 Yesuvea Yellam
17 Karthar Raajariga...
18 Saththiyap pookka...
19 Yesuvin Kudumbam
20 Kartharin Vairakk...
21 Jamakkaran
22 Vaa En Periyamay
23 Enaku Nee Vayendu...
24 Jeeva Vasanai
25 Meloga Asai
26 Parinami
27 Adharam
28 Munneru
29 Adhi
30 Sthiram
31 Theera
32 Yesuvea Melaanava...
33 Holy One
34 Puthumai
38 Ennilla Athisayam
39 Uyirppium
40 Riziya Vol.2
41 Perugu
42 Unnai Thedi

கேட்டு மகிழுங்கள் ... தரவிறக்கம் செய்து மகிழுங்கள்

நன்றி:   http://www.tamilchristian.net/


இசை கருவியின் இசை ஒலிகள் மட்டும் ...

Charles Edwin (Flute...
Chellappa Vol.1
God Melodies
Grace Anointing Inst...
Instrument (Karunya)
Instrument by Melvin
Isaiyaruvi
Praise in Veena
Sitar sing the Savio...
Thuthiyin Oli (Instr...
Tuning with Clement ...
Tuning with Clement ...
Tuning with Clement ...
Tuning with Clement ...
Tuning with Clement ...

"கருணாமூர்த்தி" // "JESUS" - திரைப்படங்கள்

1. கருணாமூர்த்தி - திரைப்படம்


<


2. JESUS  - திரைப்படம்





குறிப்பு:

நீங்கள் இணையதளமோ(Website)  அல்லது பிளாக்ஸ்பாட்டோ(Blogspot) வைத்திருந்தால் இப்படங்களை உங்கள் தளங்களில் பதிவேற்றம் செய்ய...

பதிவேற்றம் செய்ய விரும்பும் படத்தின் மவுசின் மேல் வலது பக்கம் ரைட் கிளிக் செய்தால்...

பல ஆப்சன்ஸ் வரும்.

அதில் "copy  embed code"  என்பதை தெரிந்தெடுத்து...

உங்கள் இணையதள பக்கத்தில்  வீடியோ படத்தை சொருகு அல்லது  இன்சர்ட் செய்யவும் என ஒரு ஆப்சன் இருக்கும்

அதை("copy  embed code")  அந்த இடத்தில் கர்சரை வைத்து  paste செய்தால் போதும். படம் உங்கள் இணைய தள பகுதியில் வந்து விடும்.


ஜனவரி 09, 2016

கிறிஸ்தவ பெற்றோர்களுக்குரிய ஆலோசனை

Image result for christian family

கிறிஸ்தவ பெற்றோர்களுக்குரிய ஆலோசனை 

குழந்தைகள் - உங்கள் வாழ்க்கையை மாற்றுவது எப்படி?

‘பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம்’ (சங்கீதம் 127:3)

உங்கள் குழந்தை பிறக்கும்போது நீங்கள் இருவரும் சந்தோஷத்தில் மிதப்பீர்கள். இருந்தாலும், இந்தப் புது வரவு உங்கள் வாழ்க்கையைத் தலைகீழாக மாற்றிவிடலாம். குழந்தையைக் கவனிப்பதிலேயே நேரமும் சக்தியும் செலவாவதை நினைத்து நீங்கள் ஆச்சரியப்படலாம். குழந்தையைப் பார்த்துக்கொள்ள இரவில் கண் விழிப்பதாலும் மனதளவில் நிறைய மாற்றங்கள் ஏற்படுவதாலும் உங்கள் திருமண வாழ்க்கை பாதிக்கப்படலாம். ஆனால், நீங்கள் இருவரும் சந்தோஷமாக இருக்க, சில மாற்றங்கள் செய்ய வேண்டியிருக்கும். இதற்கு  பரிசுத்த வேதாகமம் எப்படி உதவுகிறது என்று பாருங்கள்!

1.  மழலை எப்படி மணவாழ்வை மாற்றுகிறது?

பரிசுத்த வேதாகமம் என்ன சொல்கிறது? “அன்பு நீடிய பொறுமையும் கருணையும் உள்ளது . . . சொந்த விருப்பங்களை நாடாது, எரிச்சல் அடையாது.” (1 கொரிந்தியர் 13:4, 5). சகோதரிகளே!  நீங்கள் தாயாகும்போது உங்கள் குழந்தைமீதே எப்போதும் கண்ணாக இருப்பீர்கள்; அது லேசாகச் சிணுங்கினால்கூட பதறுவீர்கள். அதுபோன்ற சமயங்களில், தான் ஒதுக்கப்பட்டதுபோல் உங்கள் கணவர் உணரலாம். எனவே, கணவருக்கும் கவனம் செலுத்த வேண்டும் என்பதை மறந்துவிடாதீர்கள். உங்கள் கணவரின் அன்பும் அரவணைப்பும் இல்லாமல் குழந்தையைக் கவனித்துக்கொள்ள முடியாது என்பதை அவருக்கு அன்பாகப் புரியவையுங்கள்.

“கணவர்களே, . . . மனைவியை நன்கு புரிந்துகொண்டு அவளுடன் வாழுங்கள்.” (1 பேதுரு 3:7) மனைவி உங்கள் குழந்தைக்கே தன் சக்தியையெல்லாம் செலவிடுகிறாள் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். இதனால் உங்கள் மனைவி சோர்ந்துபோகலாம், மன உளைச்சலடையலாம், ஏன் மன அழுத்தத்திற்குக்கூட ஆளாகலாம். சில நேரங்களில், அவள் உங்கள்மேல் எரிச்சலடையலாம். ஆனால், “வலிமை உடையவரைவிடப் பொறுமை உடையவரே மேலானவர்” என்பதால் பொறுமையாக இருங்கள். (நீதிமொழிகள் 16:32,பொ.மொ.) மனைவியின் உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ளுங்கள்; அவளுக்கு ஆதரவாக இருங்கள் (நீதிமொழிகள் 14:29)

நீங்கள் என்ன செய்யலாம்?

அப்பாக்களே, குழந்தையைக் கவனித்துக்கொள்ள உங்கள் மனைவிக்கு உதவுங்கள். தேவைப்பட்டால், உங்கள் தூக்கத்தையும் தியாகம் செய்யுங்கள். மற்ற வேலைகளையெல்லாம் கொஞ்சம் தள்ளிவைத்துவிட்டு குழந்தையோடும் மனைவியோடும் அதிக நேரம் செலவிடுங்கள்

அம்மாக்களே, குழந்தையைப் பார்த்துக்கொள்ள கணவர் உதவ வரும்போது, ‘வேண்டாம்’ என்று சொல்லாதீர்கள். ஒருவேளை, அவர் எதையாவது தவறாகச் செய்துவிட்டால் குறை சொல்லாதீர்கள், அதை எப்படிச் செய்வதென்று அன்பாகச் சொல்லிக்கொடுங்கள்

2.  உங்கள் பந்தத்தைப் பலப்படுத்துங்கள்:

பரிசுத்த வேதாகமம் என்ன சொல்கிறது? கணவனும் மனைவியும் “ஒரே மாம்சமாயிருப்பார்கள்.” (ஆதியாகமம் 2:24) குழந்தை பிறந்த பிறகும்கூட நீங்களும் உங்கள் துணையும் ‘ஒரே மாம்சமாய்,’ அதாவது ஒரே உடலாய், இருக்கிறீர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். உங்கள் திருமண பந்தத்தைப் பலப்படுத்த உங்களாலான எல்லா முயற்சிகளையும் எடுங்கள்.

மனைவிகளே, உங்கள் கணவருடைய உதவிக்கும் ஆதரவுக்கும் நன்றி சொல்லுங்கள், அவரைப் பாராட்டுங்கள். அது அவருக்கு ரொம்ப உற்சாகமாக இருக்கும்! (நீதிமொழிகள் 12:18) கணவர்களே, உங்கள் மனைவியை எந்தளவு நேசிக்கிறீர்கள் என்பதையும் எந்தளவு உயர்வாகக் நினைக்கிறீர்கள் என்பதையும் அவளிடம் சொல்லுங்கள். குடும்பத்தைக் கவனித்துக்கொள்ள பாடுபடும் உங்கள் மனைவியைப் பாராட்டுங்கள் (நீதிமொழிகள் 31:10, 28)

“ஒவ்வொருவனும் தனக்குப் பிரயோஜனமானதை நாடாமல், மற்றவர்களுக்குப் பிரயோஜனமானதையே நாட வேண்டும்.” (1 கொரிந்தியர் 10:24) உங்கள் துணைக்கு எது சிறந்ததோ அதையே செய்யுங்கள்.

ஒருவருக்கொருவர் பேச, பாராட்ட, கவனித்துக் கேட்க நேரம் ஒதுக்குங்கள். தாம்பத்திய உறவில் சுயநலமில்லாமல் நடந்துகொள்ளுங்கள். உங்கள் கணவருடைய (அல்லது மனைவியுடைய) தேவைகளைப் புரிந்து கொள்ளுங்கள். “ஒருவருக்கொருவர் செலுத்த வேண்டிய கடனைச் செலுத்தாமல் இருந்துவிடாதீர்கள்; . . . இருவரும் ஒத்துக்கொண்டால் மட்டுமே குறிப்பிட்ட காலத்திற்கு இணையாதிருக்கலாம்” என்று பரிசுத்த வேதாகமம் சொல்கிறது. (1 கொரிந்தியர் 7:3-5) இந்த விஷயத்தைப் பற்றி இருவரும் வெளிப்படையாகப் பேசுங்கள். பொறுமையாக இருந்தால்... புரிந்துகொண்டு நடந்தால்... உங்கள் மணவாழ்வு இனிக்கும்.

நீங்கள் என்ன செய்யலாம்?

கணவன் மனைவியாக உங்கள் இருவருக்கென்று நேரம் செலவிடுங்கள்

ஒருவரையொருவர் நேசிக்கிறீர்கள் என்பதைச் சின்னச் சின்ன விஷயங்களில்கூட காட்டுங்கள். உதாரணத்திற்கு, ஒரு சிறிய பரிசை அல்லது க்ரீட்டிங் கார்டை கொடுங்கள்

3.  பிஞ்சு பருவத்திலேயே சொல்லிக்கொடுங்கள்:

பரிசுத்த வேதாகமம் என்ன சொல்கிறது? “பரிசுத்த வேத எழுத்துக்களை நீ சிறுவயது முதல் அறிந்திருக்கிறாய்;” அவை உனக்கு ஞானத்தைத் தந்து . . . உன்னை மீட்புக்கு வழிநடத்துபவையாக இருக்கின்றன.” (2 தீமோத்தேயு 3:15)

உங்கள் குழந்தைக்கு என்ன சொல்லிக்கொடுக்கப் போகிறீர்கள் என்பதை முன்கூட்டியே திட்டமிடுங்கள். கருவில் இருக்கும்போதே நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ளும் திறமை குழந்தைகளுக்கு இருக்கிறது. வயிற்றிலிருக்கும் சிசுவால் உங்கள் குரலை கண்டுபிடிக்கவும் உங்கள் உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ளவும் முடியும்.

கைக்குழந்தையாக இருக்கும்போதே புத்தகங்களை வாசித்துக் காட்டுங்கள். உங்கள் குழந்தை பெரியவனான பிறகும், வாசிக்கும் பழக்கத்தை விடாமலிருக்க இது உதவும்.

பிஞ்சு பருவத்திலிருந்தே கர்த்தரைப் பற்றியும் அவரது மகத்துவத்தைப் பற்றியும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து செய்த அற்புதங்களைப்பற்றியும் கதையாகப் பேசுங்கள், குழந்தை கேட்கும்படி ஜெபம் செய்யுங்கள். (உபாகமம் 11:19) குழந்தையோடு விளையாடும்போதும், கர்த்தருடைய படைப்பைப் பற்றி பேசுங்கள். (சங்கீதம் 78:3, 4) பிள்ளை வளர வளர, இயேசு மீது உங்களுக்கு இருக்கும் அன்பை புரிந்துகொள்வான். உங்களைபோல் அவனும் இயேசு மீது அன்பு காட்டுவான்.

நீங்கள் என்ன செய்யலாம்?

குழந்தையை நல்ல விதத்தில் வளர்க்க ஞானத்தைத் தரும்படி கர்த்தர் இயேசுவிடம் கேளுங்கள்

முக்கியமான வார்த்தைகளையும் விஷயங்களையும் திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டே இருங்கள், குழந்தை அவற்றை சீக்கிரத்தில் கற்றுக்கொள்ளும்

மழலை மணவாழ்வை மகிழ்விக்க முடியும்

நாட்கள் செல்லச் செல்ல, நல்ல பெற்றோராக இருக்க முடியும் என்ற நம்பிக்கை உங்களுக்குள் வரும். பிள்ளை வளர்ப்பு உங்களை அன்பானவர்களாக, கனிவானவர்களாக, பொறுமையுள்ளவர்களாக மாற்றும். உங்கள் குழந்தையைக் கவனிப்பதில் இருவரும் சேர்ந்து உழைக்கும்போது... ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்கும்போது... மணவாழ்வு மணம்வீசும்.

“கர்ப்பத்தின் கனி கர்த்தரால் வரும்   பலன்” என்ற வார்த்தைகள் உண்மை என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் (சங்கீதம் 127:4)

உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்...

குடும்பத்தைக் கவனிக்கும் என் கணவருக்கு (அல்லது மனைவிக்கு) நன்றி காட்டும் விதமாகக் கடந்த வாரத்தில் நான் என்ன செய்தேன்?

குழந்தையைப் பற்றி மட்டுமே பேசாமல் எங்களைப் பற்றி எப்போது கடைசியாகப் பேசினோம்?

- Selected -

பிள்ளைகளை கர்த்தருக்குள் பயிற்றுவிப்பது எப்படி?

Image result for christian family

பிள்ளைகளை கர்த்தருக்குள் பயிற்றுவிப்பது எப்படி?

“இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகள் உன் இருதயத்தில் இருக்கக்கடவது. நீ அவைகளை உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதி....” (உபாகமம் 6:6, 7)

குடும்ப வாழ்வை ஆரம்பித்து வைத்த இயேசுதான் பிள்ளைகளைக் கவனிக்க வேண்டிய பொறுப்பையும் பெற்றோருக்குத் தந்திருக்கிறார். (கொலோசெயர் 3:20) ஆகவே, பிள்ளைகள் இயேசுவை நேசிக்கவும் பொறுப்புள்ளவர்களாக வளரவும் நீங்கள்தான் உதவ வேண்டும். (2 தீமோத்தேயு 1:5; 3:15)

பிள்ளைகளுடைய மனதில் என்ன இருக்கிறது என்பதையும் நீங்கள் தெரிந்துகொள்ளுங்கள். நீங்கள் சொல்வதைவிட செய்வதைத்தான் பிள்ளைகள் கூர்ந்து கவனிப்பார்கள். அதனால், அவர்களுக்கு நல்ல முன்மாதிரியாக இருங்கள். இயேசுவின் வார்த்தைகள் முதலில் உங்களுடைய இருதயத்தில் பதிந்திருந்தால்தான் பிள்ளைகளுடைய இருதயத்தில் அதை உங்களால் பதிய வைக்க முடியும். (சங்கீதம் 40:8)

1.  பிள்ளைகள் உங்களிடம் மனந்திறந்து பேச உதவுங்கள்:

பைபிள் என்ன சொல்கிறது? “கேட்பதற்குத் தீவிரமாகவும், பேசுவதற்கு நிதானமாகவும் . . . இருக்க வேண்டும்.” (யாக்கோபு 1:19) பிள்ளைகள் உங்களிடம் தயக்கமில்லாமல் பேசவே நீங்கள் ஆசைப்படுவீர்கள்.

‘நான் எப்போ வேணும்னாலும் அப்பா அம்மாகிட்ட பேசலாம்’ என்று பிள்ளைகள் நினைக்கும்படி நடந்துகொள்ளுங்கள். பிள்ளைகள் மனந்திறந்து பேச நல்ல சூழ்நிலையை ஏற்படுத்துங்கள். (யாக்கோபு 3:18)

நீங்கள் கடுகடுப்பாக நடந்துகொண்டாலோ விஷயத்தை முழுமையாகக் கேட்பதற்கு முன்பே, ‘நீ எப்போவும் இப்படித்தான்’ என்று சொன்னாலோ பிள்ளைகள் உங்களிடம் எதையும் சொல்லமாட்டார்கள். பிள்ளைகளிடம் பொறுமையாக இருங்கள்; அவர்களை உயிராக நேசிப்பதைச் சொல்லிலும் செயலிலும் காட்டுங்கள். (மத்தேயு 3:17; 1 கொரிந்தியர் 8:1)

நீங்கள் என்ன செய்யலாம்?

நீங்கள் ‘பிஸியாக’ இருந்தாலும் பிள்ளைகள் பேச வரும்போது அவர்கள் சொல்வதை கேளுங்கள்
பிரச்சினைகள் வரும்போது மட்டுமல்ல, எப்போதும் பிள்ளைகளிடம் பேசுங்கள்

2.  பிள்ளைகள் சொல்ல நினைப்பதைப் புரிந்துகொள்ளுங்கள்:

பைபிள் என்ன சொல்கிறது? “விவேகத்துடன் காரியத்தை நடப்பிக்கிறவன் நன்மைபெறுவான்.” (நீதிமொழிகள் 16:20) உங்கள் பிள்ளைகள் என்ன சொல்கிறார்கள் என்பதை மட்டுமல்லாமல் அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதையும் புரிந்துகொள்ளுங்கள். பிள்ளைகள் சில விஷயங்களை வேண்டுமென்றே சொல்லியிருக்க மாட்டார்கள், கோபத்தில்தான் சொல்லியிருப்பார்கள். அதேசமயத்தில் ஒன்றுமில்லாத விஷயங்களைக்கூட பெரிதுபடுத்தி சொல்வார்கள். ‘காரியத்தைக் கேட்குமுன் உத்தரம் [அதாவது, பதில்] சொல்லுகிறவனுக்கு, அது புத்தியீனம்.’ (நீதிமொழிகள் 18:13) அதனால், நீங்கள் சட்டெனக் கோபப்படாதீர்கள் (நீதிமொழிகள் 19:11)

நீங்கள் என்ன செய்யலாம்?

உங்கள் பிள்ளை என்ன பேசினாலும் குறுக்கிடாதீர்கள், உணர்ச்சிவசப்படாதீர்கள்
நீங்கள் அவர்களுடைய வயதில் இருந்தபோது எப்படி உணர்ந்தீர்கள், எது உங்களுக்கு முக்கியமாக இருந்தது என்பதை யோசித்துப் பாருங்கள்

3. கணவன் மனைவியாக ஒன்றுபட்டு செயல்படுங்கள்:

பைபிள் என்ன சொல்கிறது? “என் மகனே, உன் தகப்பன் புத்தியைக் கேள், உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே.” (நீதிமொழிகள் 1:8) பிள்ளைகளைக் கண்டித்து வளர்க்கும் பொறுப்பை அப்பா அம்மா இருவருக்குமே இயேசுவே கொடுத்திருக்கிறார். உங்களுக்கு மரியாதை காட்டவும் கீழ்ப்படியவும் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுங்கள். (எபேசியர் 6:1-3)

அப்பா அம்மா இருவரும் ‘ஒரே மனதுடன் ஒன்றுபட்டு’ செயல்படுகிறார்களா என்பதைப் பிள்ளைகளால் எளிதில் புரிந்துகொள்ள முடியும். (1 கொரிந்தியர் 1:10) கண்டிக்கும் விஷயத்தில் நீங்கள் இருவரும் ஒத்துப்போகவில்லை என்றால் பிள்ளைகள்முன் அதைக் காட்டாதீர்கள். ஏனென்றால், பெற்றோராக உங்கள் மீதுள்ள மதிப்பை அது குறைத்துவிடும்.

நீங்கள் என்ன செய்யலாம்?

பிள்ளைகளை எப்படிக் கண்டிப்பது என்று இருவரும் பேசி முடிவெடுங்கள்
பிள்ளை வளர்ப்பில் உங்கள் இருவருக்கும் வித்தியாசமான கருத்துகள் இருந்தால், கணவருடைய (அல்லது மனைவியுடைய) கருத்தைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்

4.  நன்கு திட்டமிடுங்கள்:

பைபிள் என்ன சொல்கிறது? “பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து.” (நீதிமொழிகள் 22:6) பிள்ளைகள் பொறுப்பானவர்களாக வளர்வது உங்கள் கையில்தான் இருக்கிறது. அவர்களைப் பயிற்றுவிக்க, கண்டித்துத் திருத்த முன்னதாகவே திட்டமிடுங்கள். (சங்கீதம் 127:5; நீதிமொழிகள் 29:17)

கண்டிப்பது என்பது தண்டிப்பதை மட்டுமே குறிப்பதில்லை, கண்டிப்பதற்கான காரணத்தைச் சொல்லி புரியவைப்பதையும் குறிக்கிறது. (நீதிமொழிகள் 28:7) இயேசுவின் வார்த்தையை நேசிக்கவும் அதிலுள்ள ஆலோசனைகளைப் புரிந்து நடக்கவும் அவர்களுக்கு உதவுங்கள். (சங்கீதம் 1:2) இப்படிச் செய்வது அவர்கள் நல்ல மனசாட்சியோடு இருப்பதற்கு உதவும் (எபிரெயர் 5:14.)

நீங்கள் என்ன செய்யலாம்?

கடவுளை ஒரு நிஜமான நபராக... நம்பகமானவராக... பார்க்க பிள்ளைகளுக்கு உதவுங்கள்
இன்டர்நெட்டிலும் சோஷியல் நெட்வர்க்கிலும் உள்ள ஒழுக்க ரீதியிலான ஆபத்துகளைப் புரிந்துகொள்ளவும் அவற்றைத் தவிர்க்கவும் பிள்ளைகளுக்கு உதவுங்கள். காம வெறியர்களிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ளவும் கற்றுக்கொடுங்கள்

“பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து”

ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து உங்கள் முயற்சிகளை ஆசீர்வதிப்பார்
பிள்ளைகள் இயேசுவைபோல் யோசிக்க நீங்கள் உதவ வேண்டும். இது ஆண்டவர் இயேசு உங்களுக்குக் கொடுத்திருக்கும் விசேஷ பொறுப்பு. (எபேசியர் 6:4) இந்தப் பொறுப்பை நிறைவேற்றுவது சுலபமல்ல என்பது அவருக்குத் தெரியும். ஆனால் இதற்கு, நீங்கள் கடினமாக முயற்சி செய்தால் அது இயேசுவுக்குப் புகழ் சேர்க்கும், உங்களுக்கும் சந்தோஷத்தை அள்ளித் தரும் (நீதிமொழிகள் 23:24)

உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்...

பிள்ளை என்னிடம் எதையும் தயக்கமில்லாமல் பேச நான் என்ன செய்ய வேண்டும்?
பிள்ளை வளர்ப்பைப் பற்றி மற்ற பெற்றோரிடமிருந்து நான் என்ன கற்றுக்கொள்ள வேண்டும்?

- Selected -