சங்கீதம்:86:16 - "என்மேல் நோக்கமாகி, எனக்கு இரங்கும்"
தாவீது, தேவன் தன்மேல் இரக்கம் காட்டும்படியாக கதறுகிறான். இந்த சங்கீதம் "தாவீதின் விண்ணப்பம் (அ) ஜெபம்" என்று அழைக்கப்படுகிறது. தாவீது கர்த்தரின் கவனத்தை தன் பக்கமாக திருப்பும்படியாக வேண்டுகிறார். தேவன் தன்னுடைய விண்ணப்பத்துக்கு செவி கொடுக்கும்படியாக, தனக்கு இரங்கும்படியாக, தன்னை நோக்கி பார்க்கும்படியாக இந்த சங்கீதத்தை பாடுகிறார் தாவீது.
உலகம் யாரை நோக்கி கொண்டிருக்கிறது?
படித்தவரை, பணக்காரரை, அதிகாரிகளை நோக்கி பார்க்கிறது. எளியவனை, ஏழையை நோக்கி பார்ப்பதில்லை. ஆனால் நம் தேவன் பாரபட்சம் பார்க்காதவர்! நாம் யாராக இருந்தாலும் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும் நோக்கி பார்க்கிறார்.
நம் தேவன் - எளியவனையும், ஏழையையும், குருடனையும், செவிடனையும் அவர் நோக்கி பார்ப்பார்.

"எளிமையான என்னையுமே - என்றும் நினைப்பவரே"
ஏசாயா:66:2 - "ஆனாலும் சிறுமைப்பட்டு ஆவியில் நொறுங்குண்டு என் வசனத்துக்கு நடுங்குகிறவனையே நோக்கிப்பார்ப்பேன்."
அ) சிறுமைப்படுகிறவர்களை:
நமது தேவன் பெரியவராயிருக்கிறார். வானம் அவருக்கு சிங்காசனம், பூமி அவருக்கு பாதபடி.
நம் தேவன் தேவாலயத்திலும் பெரியவர். சாலமோனிலும் பெரியவர். இவ்வளவு பெரிய தேவன் சிறுமையானவர்களை நோக்கி பார்க்கிறார்.
நாம் உயர்ந்திருக்கும்போது, அநேகர் நம்மை நோக்கி பார்ப்பார்கள். நம்மிடம் பணம், பொருள், அந்தஸ்து இருக்கும்போது, நம்மை சுற்றி நிறைய பேர் இருப்பார்கள். ஆனால், தாழ்ந்திருக்கும்போது, சிறுமைப்படும்போது நம்மை பார்க்க, நம் துக்கத்தை அறிந்து ஆறுதல் சொல்ல ஒலுவரும் இருக்கமாட்டார்கள். இது தான் உலகம்!

கெட்ட குமாரன் தன் தகப்பனின் ஆஸ்திக்கு அதிபதியாக இருக்கும்வரை அவனை சுற்றி நண்பர்கள் இருந்தனர். ஆனால் பணத்தை இழந்த மறுகணமே அவனை விட்டு போய் விட்டார்கள். சிறுமைப்பட்டான். தாழ்மைப்பட்டான். தனிமைப்படுத்தப்பட்டான். இப்போது அவன் தகப்பனின் அன்பை உணர்ந்தான். தன்னை நோக்கி பார்க்கும் ஒருவரை விட்டு விலகி வந்ததை நினைத்து வருந்தினான்.
"நாம் சிறுமைப்படும்போது, நம்மை
நோக்கி பார்ப்பவர் நம் தேவன் ஒருவரே!"
சங்கீதம்:40:17 - "சிறுமையானவர்கள் மேல் நினைவாயிருக்கிறார்."
ஆம்! தேவன் சிறுமையானவர்கள் மேல் நினைவாயிருக்கிறார். சிறியவனையும் எளியவனையும் நினைவுகூர்ந்து குப்பையிலிருந்து எடுத்து ராஜாக்களோடும் பிரபுக்களோடும் அமர செய்கிறார்.
உங்களது பிரச்சனைகளை, உங்களது எதிர்காலத்தை, உங்களது பாரங்களை, உங்களது தேவைகளை குறித்து நினைப்பதற்கு யாருமில்லை. எல்லாவற்றையும் நீங்கள் மட்டுமே தாங்கி கொள்ள வேண்டியதாயிருக்கிறது என்று புலம்ப தேவையில்லை. ஏனென்றால், தேவன் உங்கள் மேல் நினைவாயிருக்கிறார்.
சங்கீதம்:9:18 - "எளியவன் என்றைக்கும் மறக்கப்படுவதில்லை; சிறுமைப்பட்டவர்களுடைய நம்பிக்கை ஒருபோதும் கெட்டுப்போவதில்லை."
ஏசாயா:44:21 - "இஸ்ரவேலே, நீ என்னால் மறக்கப்படுவதில்லை."
- சிறுமையான, சிறிய கோத்திரமாகிய பென்யமீன் கோத்திரத்தில் இருந்து, இஸ்ரவேலுக்கு ராஜாவாக இருக்கும்படி சவுல் தேர்ந்தெடுக்கப்பட்டான். (1சாமுவேல்:9:21)
- சிறுமைப்படுத்தப்பட்ட லேயாளை தேவன் கண்டார். அவள் குமாரர்களை பெற்று கோத்திரங்கள் உருவாக காரணமானாள். (ஆதியாகமம்:29:31,32)
- சிறியதாயிருந்த பெத்லகேமை தேவன் நினைவுகூர்ந்து, மீட்பராகிய மேசியா வருவார் என்று தீர்க்கதரிசனம் உரைக்க செய்தார். (மீகா:5:2)
சங்கீதம்:140:12 - "சிறுமையானவனின் வழக்கையும், எளியவர்களின் நியாயத்தையும் கர்த்தர் விசாரிப்பாரென்று அறிவேன்."
"உங்களுக்கு எதிராக இருக்கும் வழக்குகளை தேவனே விசாரித்து
உங்களுக்கு ஆதரவாக மாற்றுவார்"
சில சமயம் சிறுமைப்பட்டிருக்கும் போது, தேவன் நமக்கு மறைந்திருப்பது போல தோன்றும். ஆனால், நாம் நினைப்பது தவறு. தேவன் தக்க சமயத்திற்காக காத்திருந்து, நம்மை தகுதிப்படுத்தி கொண்டிருப்பார். ஏற்ற வேளை வரும் போது, எல்லா சூழ்நிலைகளையும் மாற்றி நம்மை உயர்த்துவார்.
யோசேப்பு சிறுமைப்படுத்தப்பட்டான். அவன் மேல் சுமத்தப்பட்ட அநீதியான வழக்கு அவனை பல வருடங்கள் சிறையில் இருக்கும்படி செய்தது. ஆனால் ஏற்ற வேளையில் வழக்கு விசாரிக்கப்படாமலேயே நீக்கப்பட்டு உயர்த்தப்பட்டான்.
ஆ) ஆவியிலே நொருங்குண்டவர்களை:
ஒருவன் தன் வாழ்க்கையில் சந்தோஷத்தை இழந்து, நம்பிக்கையை இழந்து, ஆசைகளை இழந்து, கனவுகளை இழந்து எல்லாம் முடிந்து போயிற்று என்ற நிலையில் இருந்தால் ஆவியில் நொருங்குண்டவன் என்று சொல்லலாம்.
சங்கீதம்:51:17 - "தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்."
இங்கே தாவீது பத்சேபாளிடம் பாவம் செய்த பிறகு தீர்க்கதரிசி பாவத்தை உணர்த்தினான். பின்னர், ஆவியில் நொருங்குண்டவனாக மனதில் பாரம் நிறைந்தவனாக தேவனிடத்தில் மன்றாடுகிறான். அவன் மனதில் குடும்பபாரம், இராஜ்ய பாரம் இருந்தது. காரணம், குழந்தை சாக கிடக்கிறது. ஆனால், தனக்கடுத்து அரசனாக தன் மகன்களில் யாரும் தகுதியானவன் இல்லை என்பது தாவீதுக்கு தெரியும். இவன் செய்த தவறு மக்களுக்கு தெரிந்தால் கிளர்ச்சி ஏற்படும். இராஜ்யம் பிரிந்து விடும். இராஜாவே இப்படி செய்வாரென்றால் நாமும் செய்யலாம் என்று சிலர் பாவத்தில் விழுந்து விடக்கூடும். ஆகவே பாரத்தோடு ஆவியில் நொருங்குண்டவனாக வேண்டுகிறான்.
நாம் தேவனுடைய வார்த்தையால் நொறுக்கப்படவேண்டும். தேவனுக்கு விரோதமான காரியங்களை செய்திருந்தால் நொறுக்கப்பட வேண்டும். தீர்க்கதரிசியின் மூலம் தேவனின் வார்த்தை வந்த உடனே, தாவீது தன்னை தாழ்த்தினான். நொறுக்கப்பட்டான்.
லூக்கா:22:44 - "அவர் மிகவும் வியாகுலப்பட்டு, அதிக ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார். அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது."
ஒரு மனிதனுக்கு தான் மரிக்க போகும் நாள் முன்னரே தெரிந்தால், அவன் நிம்மதியாக இருக்க முடியுமா? யோசித்து பாருங்கள்.
ஆனால், இயேசுவுக்கு தான் பூமிக்கு வருவதற்கு முன்பே எல்லாம் தெரியும். அவர் வருவதற்கு முன்பே எல்லாம் ஆயத்தமாக்கப்பட்டிருந்தது. இப்படியிருக்கையில், தான் எப்படி மரிக்க போகிறோம் என்பதை நினைத்து வியாகுலப்பட்டார்.
விளைவு: இயேசுவின் வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாக விழுந்தது.
மத்தேயு:26:37,38 - "அப்பொழுது, அவர்: என் ஆத்துமா மரணத்துக்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது; நீங்கள் இங்கே தங்கி, என்னோடே கூட விழித்திருங்கள் என்று சொல்லி, சற்று அப்புறம்போய், முகங்குப்புற விழுந்து: என் பிதாவே, இந்தப்பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படிசெய்யும்; ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்."

இயேசு எதற்காக வியாகுலப்பட்டார்?
1. சிலுவையில் படப்போகும் பாடுகள்
2. ஆத்துமபாரம்
2. ஆத்துமபாரம்
- இயேசு, தான் சிலுவையில் ஏற்க போகும் வலிகள், வேதனைகள், பாடுகள் குறித்து நினைத்து மரணத்துக்கேதுவான துக்கமடைகிறார். ஆகவே, பாத்திரம் நீங்ககூடுமானால் நீங்கட்டும் என்று வேண்டுகிறார்.
- இயேசு சிலுவையில் அறையப்பட்டு மரித்தபின், 3 நாட்கள் உலகம் பிசாசின் கரத்திலே கொடுக்கப்பட்டது. ஆகவே, இந்த நேரத்தில் ஊழியம் செய்யவோ, மக்களுக்காக ஜெபிக்கவோ, சுவிசேஷம் அறிவிக்கவோ ஒருவருமில்லை. ஒருவன் மறுதலித்து விட்டான். மற்றொருவன் காட்டிக்கொடுத்து விட்டான். ஆகவே, சீஷர்கள் பயந்து போய் தங்களை ஒளித்து கொண்டார்கள். இப்போது ஊழியம் செய்ய யாருமில்லை. இதை முன்னரே இயேசு அறிந்ததினால், மரணத்துக்கேதுவான துக்கமடைந்து ஆத்துமபாரத்தினால் நிறைந்தவராய் ஜெபித்தார்.
மத்தேயு:12:40 - "யோனா இரவும் பகலும் மூன்றுநாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தது போல, மனுஷகுமாரனும் இரவும் பகலும் மூன்றுநாள் பூமியின் இருதயத்தில் இருப்பார்."
1பேதுரு:3:18-20 - "ஏனெனில், கிறிஸ்துவும் நம்மைத் தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்; அவர் மாம்சத்திலே கொலையுண்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார். அந்த ஆவியிலே அவர் போய்க் காவலிலுள்ள ஆவிகளுக்குப் பிரசங்கித்தார். அந்த ஆவிகள், பூர்வத்திலே நோவா பேழையை ஆயத்தம்பண்ணும் நாட்களிலே, தேவன் நீடிய பொறுமையோடே காத்திருந்தபோது, கீழ்ப்படியாமற் போனவைகள்; அந்தப் பேழையிலே சிலராகிய எட்டுப்பேர்மாத்திரம் பிரவேசித்து ஜலத்தினாலே காக்கப்பட்டார்கள்."
- இயேசு சிலுவையில் அறையப்பட்டு மரித்த பின், காவலிலுள்ள ஆவிகளுக்கு பிரசங்கித்தார். நமக்கு ஆத்துமபாரம் வேண்டும். அழிந்து போகும் மக்களை குறித்த பாரம் ஏற்பட வேண்டும்.
- தேவ வசனத்துக்கு நடுங்க வேண்டும். ஏனென்றால், வசனமே நியாயந்தீர்க்கும். (யோவான்:12:48)
- வேத வசனத்தில் பிரியமாயிருக்க வேண்டும். தியானிக்க வேண்டும். (சங்கீதம்:1:2)
- வசனத்தின்படி செய்கிறவன் பாக்கியவான். (வெளி:1:3)
2. தேவன் நம்மை நோக்கி பார்;க்கும் போது என்ன நடைபெறும்?
லூக்கா:22:61>62 - "அப்பொழுது கர்த்தர் திரும்பி, பேதுருவை நோக்கிப்பார்த்தார். சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை மூன்றுதரம் மறுதலிப்பாய் என்று கர்த்தர் தன்னிடத்தில் சொன்ன வசனத்தை உடனே பேதுரு நினைவுகூர்ந்து, வெளியே போய், மனங்கசந்து அழுதான்."இயேசு பேதுருவை நோக்கி பார்த்தார். மனங்கசந்து அழுது மனந்திரும்பினான்.
இயேசுவின் மனஉருக்கமான பார்வை பேதுருவை மாற்றியது!!!
மனந்திரும்புதலின் 2 பக்கங்கள்:
- மாம்சத்தின் கிரியைகளை விலக்குதல்
- ஆவியின் கனிகளை விளைவித்தல்
பேதுரு தன்னுடைய மாம்ச கிரியையான மறுதலிப்பதை விலக்கி ஆவியின் கனிகளை விளைவித்தான். ஆதி திருச்சபையின் போதகரானான். மனந்திரும்புதல் என்பது தேவனோடு மட்டுமல்ல. மனிதரோடும் காரியங்களை சரி செய்தலாகும்.
சிலுவையின் இரண்டு கட்டைகள்:
நெடுக்கு கட்டை - கர்த்தரோடு ஒப்புரவாகுதல்
குறுக்கு கட்டை - மனிதனோடு ஒப்புரவாகுதல்
யோவான்:5;:6 - "முப்பத்தெட்டு வருஷம் வியாதிகொண்டிருந்த ஒரு மனுஷன் அங்கே இருந்தான்.படுத்திருந்த அவனை இயேசு கண்டு, அவன் வெகுகாலமாய் வியாதிஸ்தனென்று அறிந்து, அவனை நோக்கி: சொஸ்தமாகவேண்டுமென்று விரும்புகிறாயா என்று கேட்டார்."
38 வரு~ம் வியாதியுள்ள மனிதனை இயேசு நோக்கி பார்த்தார். அற்புதம் நடந்தது.
முடிவாக, நமது தேவன் சிறுமைப்பட்டவர்களை, ஆவியில் நொருங்குண்டவர்களை, வசனத்துக்கு நடுங்குகிறவனை நோக்கி பார்ப்பார். நாம் அவரை நோக்கி பார்க்கும்போது, அவர் நம்மை நோக்கி பார்ப்பார். மனந்திரும்புதலும் அற்புதமும் வரும்.

ஆமென்!