மார்ச் 18, 2013

மத்தேயு சுவிசேஷம்




ஆசிரியர்:    மத்தேயு

மத்தேயு வரி வசூலிக்கும் பிரிவைச் சார்ந்தவன்.
12 அப்போஸ்தலரில் ஒருவன் - மத்தேயு: 9:9-13.
நல்ல எழுத்தாளன் - மத்தேயு: 10:3

மத்தேயு இதை எழுதினான் என்று கி.பி.365 ல் வாழ்ந்த எசுபியஸ்; கி.பி. 100 ல் வாழ்ந்த பாப்பியஸ் மற்றும் 2 ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஐரேனியு போன்ற சபை பிதாக்கள் கூறுகின்றனர். இது முதலாவது அரமேயு பாஷையில் எழுதப்பட்டு பின்னர் கிரேக்க மொழியில் எழுதப்பட்டது.

எழுதப்பட்ட காலமும் இடமும்:

கிறிஸ்தவர்களின் முதலாம் சிதறடிப்புக்கு முன்பு (அப்: 8:4) இது எழுதப்பட்டிருக்க முடியாது. கி.பி. 70 ல் எருசலேம் அழிக்கப்பட்ட பின்பும் இது எழுதப்பட்டிருக்க முடியாது. ஏனென்றால், எருசலேமின் அழிவு பற்றி (மத்: 24:1-28) தீர்க்கதரிசனம் இதில் இருக்கிறது. 

எனவே, கி.பி.70 க்கும் இடையில் கி.பி.68 ல் இது எழுதப்பட்டிருக்க வேண்டும். அந்தியோகியாவில் வைத்து இது எழுதப்பட்டிருக்க வேண்டும்.

யாருக்கு எழுதப்பட்டது?:

 யூத மார்க்கத்தோடு இணைந்த ஒரு சபைக்கு எழுதப்பட்டது. முக்கியமாக சீரிய யூத சபைக்கு எழுதப்பட்டது எனலாம்.

எழுதப்பட்டதின் நோக்கம்:

நசரேயனாகிய இயேசு வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட மேசியா மற்றும் இஸ்ரவேலின் ராஜா என்பதை நிரூபிக்க இது எழுதப்பட்டது. பழைய ஏற்பாட்டு மேற்கோள்கள் சுமார் 60 இதில் உள்ளது.

கருப்பொருள்: 

மேசியாவாக, இஸ்ரவேலின் இராஜாவாக வந்த இயேசுவின் முதல் வருகையும் அவர் நிராகரிக்கப்படுதலும்.

திறவுகோல் வசனம்:

மத்தேயு: 1:1 - தாவீதின் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் வம்ச வரலாறு.
மத்தேயு: 23:37-39 - இயேசு கிறிஸ்து ஆபிரகாம் வம்சத்தில் வந்தார்.
"எருசலேமே! கோழி தன் குஞ்சுகளை சேர்த்துக் கொள்வதுபோல் உன்னை சேர்த்துக் கொள்ள நினைத்தேன்."

திறவுகோல் வார்த்தை:

நிறைவேறிற்று -  17 முறை வருகிறது.

தேவனுடைய இராஜ்யம் -  32 முறை வருகிறது.

பரலோக ராஜ்யம் - என்பது மத்தேயுவில் மட்டும் விசேஷித்தவிதமாக வருகிறது. ஏனெனில், யூதர் தேவனுடைய ராஜ்யம் பூமியில் அமைக்கப்படும் என்று எதிர்பார்த்தனர். அதாவது பரலோகம் பூமியில் இறங்கி வந்து ஆட்சி செய்யும் என்பது யூதரின் எதிர்பார்ப்பாகும்.

ஆனால், மேசியாவை புறக்கணித்தபோது தேவனுடைய இராஜ்யம் பின்னால் வரக்கூடிய ஒன்று என நினைத்தனர். அது தற்போது இயேசுவை ஏற்றுக்கொள்ளும் ஒவ்வொருவர் இதயத்திலும் இரகசியமாக உள்ளே இருக்கிறது என்ற கருத்து சொல்லப்பட்டது.