எதிர்கால
ஆசீர்வாதங்களுக்கான ஏழுநாள் உபவாச கூடுகை விண்ணப்பம்
“நீ எனக்கு
முன்னே கில்காலுக்கு இறங்கிப்போ; சர்வாங்க
தகனபலிகளையும் சமாதான பலிகளையும் செலுத்தும்படிக்கு, நான் உன்னிடத்தில் வருவேன்;
நான் உன்னிடத்தில் வந்து, நீ செய்ய வேண்டியதை
உனக்கு அறிவிக்கு மட்டும், ஏழுநாள் காத்திரு என்றான்” (1சாமுவேல்: 10:8)
வருடத்தின் இறுதிப்பகுதியில் வந்திருக்கிற நாம் கர்த்தருடைய பாதத்தில் ஏழுநாட்கள் நம்மை நாம் ஆராய்ந்து பார்த்து, நமது ஆவி ஆத்துமா சரீரத்தை ஜீவபலியாக அர்ப்பணித்து ஜெபித்து, வசன அறிக்கை செய்து எதிர்கால நன்மைகளை சுதந்தரித்துக் கொள்வோம்.
உபவாசம்
எப்படி ஆசரிக்க வேண்டும்?
(ஏசாயா: 58 அதிகாரம் / மத்தேயு: 6:17)
நாம்
செலுத்த வேண்டிய சர்வாங்க தகனபலிகளும் சமாதான பலிகளும்:
a)
தலை:
1. தலையின்
மேல் உள்ள இரத்தப்பழிகள் நீங்க என்னை ஒப்புக் கொடுக்கிறேன்
2. தலையின்
மேல் உள்ள பொல்லாப்புகள் நீங்க என்னை ஒப்புக் கொடுக்கிறேன்
3. தலையின்மேல்
உள்ள தேவனுடைய மீறுதல்கள், சாபங்கள், தேவ கோபங்கள் நீங்க என்னை ஒப்புக் கொடுக்கிறேன்
4. அபிஷேகம்
பெற்றவர்களுக்கு விரோதமாக நடக்கும் சிந்தனை, நடக்கையை என் தலைமேலிருந்து என்னை விட்டு
அகற்ற ஒப்புக் கொடுக்கிறேன்
5. என் தலையின்மேல்
உள்ள இரத்தப்பழிக்கு என்னை நீங்கலாக்கி, என்னிமித்தமும், என் அக்கிரமங்கள், மீறுதல்களினிமித்தமும்
வந்த இரத்தபழிகளுக்கு என் சந்ததி ஆளாகாமல் காக்கப்பட கெஞ்சி மன்றாடுகிறேன்
6. அந்நிய
காரியங்களில் தலையிட்டு பாடுபடாதபடிக்கு காத்துக்கொள்ள ஒப்புக் கொடுக்கிறேன் (1பேதுரு:
4:15)
7. கர்த்தரின்
ஆணையை அசட்டை பண்ணினதையும், அவரது உடன்படிக்கையை முறித்துப்போட்டதையும் தலைமேலிருக்கும்
இம்மீறுதலை மன்னிக்கும்படி மன்றாடுகிறேன் (எசேக்: 17:19)
8. தலையின்மேல்
தேவையற்ற சிங்காரங்கள் வராதபடி காத்துக்கொள்ள ஒப்புக் கொடுக்கிறேன்
9. எண்ணிக்கைக்கு
அடங்காத தீமைகள் என் தலைமயிரிலும் அதிகமாக உள்ளது. அது என்னை விட்டு நீங்கும்படி என்னை
ஒப்புக் கொடுக்கிறேன் (சங்: 40:12)
10. நிமித்தமில்லாமல்
என்னை பகைக்கிறவர்கள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறார்கள். வீணாக எனக்கு சத்துருக்களாகி
என்னை சங்கரிக்க வேண்டுமென்றிருக்கிறவர்கள் பலத்திருக்கிறார்கள்; நான் எடுத்துக்கொள்ளாததை
நான் கொடுக்க வேண்டியதாயிற்று (சங்: 69:4) அதிலிருந்து நான் தப்பித்துக் கொள்ள கிருபை
தாரும்
11. எங்கள்
தலையின்மேல் உள்ள அபிஷேகத்தை இழந்து விடாதபடி காத்துக்கொள்ள கிருபை தாரும்
12. எங்கள்
தலையின்மேல் உள்ள மகிமையின் கிரீடத்தை இழந்து விடாதபடி காத்துக் கொள்ள கிருபை தாரும்
13. எங்கள்
தலையின்மேல் உள்ள மகிமையின் கிரீடத்தை வேறொருவன் எடுத்துக் கொள்ளாதபடி கிருபை தாரும்
14. நிந்திக்கிற
நிந்தை எங்கள் தலையின்மேல் வராதபடி கிருபை தாரும்
15. எங்களுக்கு
விரோதமாக ஏளனமாக ஒருவரும் தலையை துலுக்காதபடி கிருபை தாரும் (சங்: 44:14)
16. மனுஷர்
எங்கள் தலையின்மேல் ஏறிப்போகாதபடி கிருபை தாரும் (சங்: 66:12)
17. தலையின்மேல்
தோன்றும் தரிசனங்களால் கலங்கித் திகையாதபடி கிருபை தாரும் (தானி: 4:5)
18. தலையில்
வரும் வியாதிகள் நீங்க என்னை உம்மிடம் ஒப்புவிக்கிறேன். இயேசுவின் இரத்தம் தலைமேல்
ஊற்றப்படுவதாக. தலைவலி, தலைசுற்றல், தலை பாரம், மூளைக்காய்ச்சல், தலைசூடு, மூளைக்கட்டிகள்,
பொடுகு, தலைமுடி உதிர்தல், கொப்புளங்கள், கன்னக்கட்டிகள், இரத்தக் கொதிப்பு, நரம்புக்
குழாய்கள், சுவாசக் கோளாறுகள், மூச்சுத் திணறல்கள், ஞாபகமறதி, நினைவிழப்பு, குழப்பம்
நீங்க இயேசுவின் நாமத்தினால் குணமுண்டாவதாக.
19. கர்த்தாவே
உமது தீபம் என் தலையின்மேல் பிரகாசிக்கட்டும் (யோபு: 29:3)
20. என் தலையை
எண்ணெயால் அபிஷேகம் பண்ணும் (சங்: 23:5)
21. என் தலையை
உயர்த்துகிறேன்; மகிமையின் ராஜாவே உட்பிரவேசியும் (சங்: 24:7)
22. வீடுகட்டுகிறவர்கள்
ஆகாதென்று தள்ளின கல்லே தலைக்கு மூலைக்கல்லாயிற்று (சங்: 118:22)
23. கர்த்தரால்
மீட்கப்பட்டவர்கள் திரும்பி, ஆனந்தக்களிப்புடன் பாடி, சீயோனுக்கு வருவார்கள்; நித்திய
மகிழ்ச்சி அவர்கள் தலையின் மேலிருக்கும்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைவார்கள்; சஞ்சலமும்
தவிப்பும் ஓடிப்போம் (ஏசா: 35:10)
24. ஒவ்வொரு
புருஷனுக்கும் கிறிஸ்து தலை; ஸ்திரீக்கு புருஷன் தலை; கிறிஸ்துவுக்கு தேவன் தலை.
(1கொரி: 11:3). சபைக்கு கிறிஸ்து தலை (எபே: 5:23). அன்புடன் சத்தியத்தைக் கைக்கொண்டு,
தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும், நாம் வளருகிறவர்களாயிருக்கும்படியாக ஒப்புக்
கொடுக்கிறேன் (எபே: 4:15)
b)
கண்:
1. கண்டும்
காணாமலும் இருக்கிற கண்சாடை பாவம் நீங்கும்படி என்னை ஒப்புவிக்கிறேன்
2. பரிதானம்
வாங்க எதிர்பார்க்கும் கண்களை, வாங்காதபடி ஒப்புவிக்கிறேன்
3. என் கண்களோடே
உடன்படிக்கை பண்ணின நான் ஒரு கன்னிகையின்மேல் நினைப்பாயிருப்பதெப்படி? (யோபு:
31:1). காத்துக்கொள்ள கிருபை தாரும்
4. என் கண்கள்
நேராய் நோக்கவும், என் கண்ணிமைகள் செவ்வையாய் பார்க்கவும் உம்மிடத்தில் ஒப்புவிக்கிறேன்
(நீதி: 4:25)
5. மேட்டிமையான
கண்கள் என்னை விட்டு நீங்குவதாக (நீதி: 6:17)
6. கண்களின்
இச்சை என்னை விட்டு நீங்கும்படி அர்ப்பணிக்கிறேன் (1யோவா: 2:16)
7. விபசார
மயக்கம் நிறைந்த கண்களையும், பாவத்தை விட்டோயாதவைகளுமாயிருக்கிற கண்களையும் என்னை விட்டு
நீங்கும்படி கெஞ்சுகிறேன் (2பேது: 2:14)
8. பாவங்களற
சுத்திகரிக்கப்பட்டதை மறந்து கண் சொருகிப்போன குருடனைப்போலிருக்கிற சுபாவத்தை என்னை
விட்டு அகற்றிப்போட வேண்டுகிறேன் (2பேது: 1:9)
9. தெய்வ
பயமற்ற கண்களை என்னை விட்டு அகற்றுகிறேன் (ரோம: 3:18)
10. சாத்தானுடைய
அதிகாரத்தில் சிக்கிய கண்கள் மீட்கப்பட, திறக்கப்பட கிருபை தாரும் (அப்: 26:18)
11. நான்
மரணநித்திரை அடையாதபடிக்கு என் கண்களைத் தெளிவாக்கும் (சங்: 13:3)
12. மாயையை
பாராதபடி நீர் என் கண்களை விலக்கி, உமது வழிகளில் என்னை உயிர்ப்பியும் (சங்:
119:37)
13. கண்ணின்
காட்சிகளில் நடவாதபடி என்னை காத்துக்கொள்ள கிருபை தாரும் (பிர: 11:9)
14. உமது
வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு என் கண்களைத் திறந்தருளும் (சங்:
119:18)
15. உமது
வசனத்தை தியானிக்கும்படி, குறித்த ஜாமங்களுக்கு முன்னே என் கண்கள் விழித்துக் கொள்ள
உதவி செய்யும் (சங்: 119:148)
16. ஜெப நேரத்தில்
தடையாக வரும் மிகுந்த நித்திரை மயக்கத்தை என்னை விட்டு அகற்றும் (மத்: 26:43)
17. கட்டளைகளையும்
போதகத்தையும் கண்ணின்மணிபோல் காத்துக் கொள்ள கிருபை தாரும் (நீதி: 7:2)
18. இல்லாமற்போகும்
பொருட்களின்மேல் கண்களை பறக்கவிடாதபடி கிருபை தாரும் (நீதி: 23:5)
19. கர்த்தருடைய
வழிகளை என் கண்கள் நோக்கும்படி அர்ப்பணிக்கிறேன் (நீதி: 23:26)
20. கர்த்தர்
வெளிப்படுத்துகிறதை என் கண்கள் காணாமலும் உணராமலும் இருப்பதை என்னை விட்டு அகற்றுகிறேன்
(கலா: 3:1)
21. கர்த்தரை
அறியாதபடி என் கண்கள் மறைக்கப்படாதபடி கிருபை தாரும் (லூக்: 24:16)
22. சமாதானத்துக்கு
ஏற்றவைகளை அறியும் கண்கள் எனக்கு மறைவாயிருக்காதபடி கிருபை தாரும் (லூக்: 19:42)
23. வானத்துக்கு
ஏறெடுக்கத் துணியாத தாழ்மையுள்ள கண்களை எனக்குத் தாரும் (லூக்: 18:13)
24. சரீரமுழுவதும்
வெளிச்சமாயிருக்கத்தக்க தெளிவுள்ள கண்களைத் தாரும் (லூக்: 11:34)
25. என் கண்ணிலிருக்கிற
உத்திரத்தை உணருகின்ற கண்களை எனக்குத் தாரும் (லூக்: 6:42)
26. உமது
இரட்சண்யத்தைக் காணும் கண்களை எனக்குத் தாரும் (லூக்: 2:32)
27. கண்களில்
வருகிற வியாதிகளை குணமாக்கியருளும்: கண்வலி, கண்புரை, பூ விழுதல்,
நீர் வடிதல், கண்வீக்கம், பார்வைக் கோளாறு, கண்எரிச்சல், கண்கட்டி, கூச்சப்பார்வை,
கண் மங்குதல், மாலைக்கண், கண் ஊறல், தூர, கிட்டப் பார்வை, இரத்த அழுத்தம், சர்க்கரை,
பார்வையிழப்பு, மாறுகண், கண் நரம்பு கோளாறு, விழித்திரை கோளாறு, மெட்ராஸ் ஐ, கண் தொற்று
நோய் போன்றவைகள் குண்மாக வேண்டுகிறேன்
c)
செவி:
1. வீண்
வார்த்தைகளுக்கு செவிகொடாதிருக்க கிருபை தாரும் (யாத்: 5:9)
2. நாங்களோ
எங்கள் தேவனாகிய கர்த்தரின் வார்த்தைக்கு செவிகொடாதே போனோம் என்கிற பாவத்தை கிருபையாய்
மன்னித்தருளும் (தானி: 9:14)
3. என் போதகரின்
சொல்லை கேளாமலும், உபதேசம் பண்ணினவர்களுக்கு செவி கொடாமலும் போகிற செவியை என்னை விட்டு
அகற்ற கிருபை தாரும் (நீதி: 5:13)
4. முதுகை
காட்டுவதும், உபதேசித்து சொன்ன புத்திமதிக்கு செவி கொடாமல் போனதையும் மன்னித்தருளும்
(எரே: 32:33)
5. ஆலோசனைக்கு
செவிக்கொடுக்கிறவனாக மாற்றும் (நீதி: 12:15)
6. அனுப்பப்பட்ட
ஊழியக்காரனுக்கு கீழ்படியவும், செவியை சாய்த்து கீழ்படியவும், வழியை சீர்படுத்தவும்
அர்ப்பணிக்கிறோம் (எரே: 35:15)
7. கடிந்து
கொள்ளுதலுக்கு செவிசாய்க்க கிருபை தாரும் (நீதி: 13:1)
8. அக்கிரம
உதடுகளுக்கும் பொய்யான கேடுள்ள நாவுகளுக்கும் செவி கொடாதபடி என் செவியைக் காத்துக்
கொள்ள கிருபை தாரும் (நீதி: 17:4)
9. அவதூறு,
புறங்கூறுதல், நிந்தித்தல், தூஷணங்களை கேளாத செவியாக மாற கிருபைதாரும்
10. தேவனாகிய
கர்த்தருக்கு விரோதமாய்த் துரோகம் பண்ணி, அந்நியரோடே சோரமார்க்கமாய் நடந்த என் அக்கிரமத்தையும்,
தேவனுடைய சத்தத்துக்கு செவி கொடாமற்போனதையும் ஒத்துக் கொண்டு மன்னித்தருளும்படி மனதார
வேண்டுகிறேன் (எரே: 3:13)
11. அந்நிய
தேவர்களுக்கு தூபங்காட்டாதபடிக்கு அவரின் சொல்லைக் கேளாமலும், பொல்லாப்பை விட்டு திரும்புவதற்கு
செவியை கேளாமலும் இராதபடி செய்தருளும் (எரே: 44:5)
12. ஏழையின்
கூக்குரலுக்கு செவியை அடைக்காதபடி கிருபை தாரும் (நீதி: 21:13)
13. வேதத்தை
கேளாதபடி செவியை விலக்காதபடிக்கு கிருபை தாரும் (நீதி: 28:9)
14. அதிபதியானவனின்
பொய்களுக்கு செவி கொடாதபடி காத்தருளும் (நீதி: 29:12)
15. மூடர்
பலியிடுவதைப் பார்க்கிலும் செவி கொடுக்கச் சேர்வதே நலம் என்றறிய கிருபை தாரும் (பிர:
5:1)
16. கர்த்தருடைய
வார்த்தையைக் கேட்கவும், தேவனுடைய வேதத்துக்கு செவி கொடுக்கவும் கிருபை தாரும் (ஏசா:
1:10)
17. கர்த்தருடைய
வசனத்தை நிந்தையாக கருதாதபடி, வசனத்தின்மேல் விருப்பமில்லாமல் போகாதபடி என் செவியை
விருத்தசேதனம் பண்ண ஒப்புவிக்கிறேன் (எரே: 6:10)
18. இரத்தஞ்
சிந்துவதற்கான யோசனைகளை கேளாதபடி, செவியை அடைத்துக் கொள்ள கிருபை தாரும் (ஏசா:
33:15)
19. துர்
உபதேசங்களுக்கும், கள்ளத்தீர்க்கதரிசிகளின் சத்தத்திற்கும் செவி கொடாதபடி எங்களை காத்துக்
கொள்ள கிருபை தாரும் (ஏசா: 36:18)
20. செவிகள்
திறந்திருந்தும் கர்த்தரின் வார்த்தையை கேளாதே போகிற நிர்விசாரமான செவியை என்னிலிருந்து
கிருபையாய் விலக்கியருளும் (ஏசா: 42:20)
21. எக்காள
சத்தத்திற்கு செவி கொடுக்கிற செவிகளாக மாற்றியருளும் (எரே: 6:17)
22. குறிகாரருக்கும்,
சொப்பனக்காரருக்கும், நாட் பார்க்கிறவருக்கும், சூனியக்காரருக்கும், கள்ள தீர்க்கதரிசிகளுக்கும்
செவிகொடாதிருக்க அர்ப்பணிக்கிறேன் (எரே: 27:9)
23. மிலாற்றிற்கும்
அதை நேமித்தவருக்கும் செவி கொடுக்க எங்களை தரை மட்டும் தாழ்த்துகிறோம் (மீகா: 6:9)
24. மனசாட்சியில்
சூடுண்ட பொய்யருடைய மாயத்திற்கும், வஞ்சிக்கிற ஆவிகளுக்கும், பிசாசின் உபதேசங்களுக்கும்
செவி கொடுத்து விசுவாசத்தை விட்டு விலகிப் போகாதபடிக்கு காத்துக் கொள்ளும் (1தீமோ:
4:1)
25. குற்றத்தை
உணர்த்துகிற சகோதரனுக்கு செவிகொடுக்க கிருபை தாரும் (மத்: 18:15)
26. தேவனால்
உண்டானவன் தேவனுடைய வசனங்களுக்கு செவி கொடுக்கிறான் (யோவா: 8:47)
27. தேவபக்தியுள்ளவனாயிருந்து
அவருக்கு சித்தமானதை செய்கிறவனுக்கு அவர் செவி கொடுப்பார் (யோவா: 9:31)
28. நான்
கர்த்தருடைய ஆடு; நான் அவரது சத்தத்துக்கு செவி கொடுப்பேன்; அவர் என்னை அறிந்திருக்கிறார்;
நான் அவரின் பின் செல்லுவேன் (யோவா: 10:27)
29. தேவனுக்கு
செவி கொடுப்பதைப்பார்க்கிலும் மனிதனுக்கு செவி கொடுப்பது தேவனுக்கு முன்பாக நியாயமாயிருக்காது
என்பதினால் நான் மனிதனுக்கு செவி சாய்க்காதபடி என்னை காத்தருளம் (அப்: 4:19)
30. சத்தியத்திற்கு
விலகி கட்டுக்கதைகளுக்கு விலகிப்போகாதபடி காத்தருளும் (2தீமோ: 4:4)
31. செவியில்
வரும் வியாதிகள் நீங்க மன்றாடுகிறோம்: காது வலி, சீழ் வடிதல், செவிட்டுத் தன்மை, காதடைப்பு,
செவி புண்கள், செவி கட்டிகள் போன்றவை குணமாக ஜெபிக்கிறோம்.
d)
வாய்:
1. ஆகாமிய
உதடுகளை என்னை விட்டு அகற்றுகிறேன் (நீதி: 8:7)
2. விவாதிக்கிற
உதடுகளை என்னை விட்டு அகற்றுகிறேன் (நீதி: 18:6)
3. பொய்
பேசாதிருக்கிற வாயாக மாற்ற ஒப்புவிக்கிறேன் (சங்: 63:11)
4. பரஸ்திரீகளின்
வாயில் விழாதபடிக்கு என்னை தப்புவியும் (நீதி: 22:14)
5. தற்புகழ்ச்சியை
பேசாத வாயாக மாற்றும்படி ஒப்புவிக்கிறேன் (நீதி: 27:2)
6. என் மாம்சத்தை
பாவத்திற்குள்ளாக்க என் வாய்க்கு இடங்கொடாதிருக்க கிருபை தாரும் (பிர: 5:6)
7. தீட்டும்
அசுத்தமாயிருக்கிறதொன்றும் என் வாய்க்குள் போகாதபடி என் வாயை காத்துக் கொள்ள கிருபை
தாரும் (அப்: 11:8)
8. வாய்க்கு
கடிவாளம் போட்டு முழு சரீரத்தையும் கர்த்தருக்குள் கட்டுப்படுத்த கிருபை தாரும் (யாக்:
3:3)
9. இறுமாப்பானவைகளை
பேசாதிருக்கவும், தற்பொழிவுக்காக முகஸ்துதி செய்யாதிருக்கவும் என் வாய்க்கு காவல் வைப்பீராக
(யூதா: 1:16)
10. சபித்தலும்
கசப்பும் வாயிலிருந்து புறப்படாதிருக்க கிருபை தாரும் (ரோம: 3:14)
11. வாய்ச்சாலகனாய்
இராதபடி உதவி செய்யும் (யோபு: 11:2)
12. பொல்லாப்பை
வாய்க்குள்ளே பதனம்பண்ணி வைத்திராதபடி காப்பீராக (யோபு: 20:12,13)
13. இயற்கையை
தொழுதுகொள்ள என் மனம் இரகசியமாய் மயக்கப்பட்டு, என் வாய் என் கையை முத்தி செய்யாதிருக்க
தேவ பயத்தை தாரும் (யோபு: 31:26,27)
14. தீர்மானத்தை
மீறாதிருக்கிற வாயை தாரும் (சங்: 17:3)
15. என் வாய்
கர்த்தரின் துதிகளைச் சொல்வதாக (சங்: 145:21)
16. வாயில்
வரும் நோய்களிலிருந்து விடுதலை தாரும்: வாய்ப்புண்,
பல்வலி, வாய்புற்று, ஈறு வீக்கம், இரத்தம் வடிதல், வாய் நாற்றம், தொண்டை கட்டு, டான்சில்
கட்டிகள், தைராய்டு பிரச்சினை, பற்கடிப்பு, சிறுநாக்கு வளருதல், வாய் குளறுதலிலிருந்து
சுகம் தாரும்.
e) உதடு:
1. விருத்தசேதனமில்லாத உதடுகளை என்னை விட்டு விலக்குகிறேன் (யாத்: 6:12)
2. என் மனம் பதறி என் உதடுகளால் ஆணையிடாதபடி காத்தருளும் (லேவி: 5:4)
3. உதடுகளினால் செய்த பொருத்தனைகளை மீறாதபடி நிறைவேற்ற கிருபை தாரும் (எண்: 30:6)
4. உதடுகளினால் பாவஞ் செய்யாதபடிக்கு காத்தருளும் (யோபு: 2:10)
5. உதடுகளின் மாறுபாட்டை தூரப்படுத்துகிறேன் (நீதி: 4:24)
6. ஆகாமிய உதடுகளை என்னை விட்டு அகற்றுகிறேன் (நீதி: 8:7)
7. அசுத்த உதடுகளை என்னை விட்டு அகற்றுகிறேன் (ஏசா: 6:5)
8. பரியாச உதடுகளை என்னை விட்டு விலக்குகிறேன் (ஏசா: 28:11)
9. நியாயக்கேடுகளை என் உதடுகள் வசனிக்காதபடி என்னை விட்டு விலக்குகிறேன் (ஏசா: 59:3)
10. அநிநியாயத்தை என் உதடுகளை விட்டு விலக்குகிறேன் (மல்: 2:6)
11. தீமை சொல்லாதிருக்கிற உதடுகளை எனக்குத்தாரும் (யோபு: 27:3)
12. இச்சக உதடுகளால் இருமனதாய் பேசாதபடிக்கு உதவியருளும் (சங்: 12:2)
13. அந்நிய தேவர்களின் நாமங்களை என் உதடுகளால் உச்சரிக்காதபடிக்கு கிருபைதாரும் (சங்:16:4)
14. கபடமில்லாத உதடுகளால் விண்ணப்பிக்க உதவி செய்யும் (சங்: 17:1)
15. உம்முடைய உதடுகளின் வாக்கினாலே துஷ்டனுடைய பாதைகளுக்கு விலக கிருபை தாரும் (சங்: 17:4)
16. நீதிமானுக்கு விரோதமாய் பெருமையோடும் இகழ்ச்சியோடும் கடினமாய்ப் பேசுகிற பொய் உதடுகள் என்னை விட்டு நீங்குவதாக (சங்: 31:18)
17. உமது புகழை அறிவிக்க என் உதடுகளை திறந்தருளும் (சங்: 51:15)
18. என் இக்கட்டில் நான் என் உதடுகளை திறந்து என் வாயினால் சொல்லிய என் பொருத்தனைகளை உமக்கு செலுத்த கிருபை தாரும் (சங்: 66:14)
19. என் உடன்படிக்கையை மீறாமலும் என் உதடுகள் விளம்பினதை மாற்றாமலும் இருக்க கிருபை தாரும் (சங்: 89:34)
20. உதடுகளை விரிவாய் திறவாதபடிக்கு, என் உதடுகளின் வாசலை காத்துக் கொள்ளும் (நீதி: 13:3 ; சங்: 141:3)
21. செவ்வையானவைகளை பேசுகிற உதடுகளாக மாற கிருபை தாரும் (எரே: 17:16)
22. அறிவைக் காக்கவும், உத்தம காரியங்களை வசனிக்கவும் என் உதடுகளுக்கு உதவியருளும் (நீதி: 5:2 ; 8:6)
23. உதடுகளில் ஞானம் வெளிப்பட, உதடுகளை அடக்க உதவியருளும் (நீதி: 10:13 ; 19)
24. திவ்விய வாக்கு பிறக்கும் உதடுகளை தந்தருளும் (நீதி: 16:10)
25. அறிவைக்காக்கும் உதடுகளைத் தாரும் (மல்: 2:7)
26. உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை எப்போதும் உமக்கு செலுத்த அர்ப்பணிக்கிறேன் (எபி: 13:15)
27. உதடுகளில் வரும் பெலவீனங்களை மாற்றும்: பனி வெடிப்பு, உதட்டு புண், கொப்புளங்கள், வீக்கம், எச்சில் புண் இவைகளை குணமாக்கும்
f) நாவு:
1. நாவிலுள்ள அக்கிரமம், பொல்லாப்பை என்னைவிட்டு அகற்றுகிறேன் (யோபு: 6:30; 20:12)
2. இச்சகம் பேசும் நாவை என்னை விட்டு விலக்குகிறேன் (சங்: 5:9)
3. நாவிலுள்ள தீவினையை என்னை விட்டு அகற்றுகிறேன் (சங்: 10:7)
4. புறங்கூறும் நாவை என்னை விட்டு அகற்றுகிறேன் (சங்: 15:3)
5. மாறுபாடுள்ள நாவை என்னை விட்டு அகற்றுகிறேன் (நீதி: 15:4)
6. கேடுள்ள நாவு, புரட்டு நாவை என்னை விட்டு அகற்றுகிறேன் (நீதி: 17:4; 17:20)
7. மரணநாவின் அதிகாரத்தை என்னை விட்டு அகற்றுகிறேன் (நீதி: 18:21)
8. முகஸ்துதி பேசுகிற நாவை என்னை விட்டு அகற்றுகிறேன் (நீதி: 28:23)
9. வஞ்சனை நாவை என்னை விட்டு அகற்றுகிறேன் (ரோம: 3:13)
10. பெருமை பேசும் நாவை என்னை விட்டு அகற்றுகிறேன் (யாக்: 3:5)
11. சற்ப்பணையை பிணைக்கும் நாவை என்னை விட்டு அகற்றுகிறேன் (சங்: 50:19)
12. என் நாவு பாவஞ்செய்யாதபடிக்கு கடிவாளத்தினால் அடக்கி வைக்கிறேன் (சங்: 39:1)
13. கபடு செய்ய தீட்டப்பட்ட சவரகன் கத்தியைப்போல உள்ள நாவை என்னை விட்டு அகற்றுகிறேன் (சங்: 52:2)
14. இருநாக்கு என்னை விட்டு விலகுவதாக (1தீமோ: 3:8)
15. அநீதி நிறைந்த உலகமாக என் நாவு மாறிவிடாமலும், என் முழு சரீரத்தையும் கறைபடுத்திவிடாமலும், என் ஆயுள் சக்கரத்தை கொளுத்தி விடாமலும் இருக்க என் நாவை நான் கட்டுப்படுத்த எனக்கு தயவாய் கிருபை தாரும் (யாக்: 3:6)
16. என் நாவை கடிக்காதபடிக்கு காத்துக் கொள்ள கிருபைதாரும் (வெளி: 16:10)
17. நாவில் வரும் வியாதிகளை சுகமாக்கும்: புண், கொப்புளம், மந்தநாவு, தடித்தநாவு சுகம் தாரும்
g) கழுத்து:
1. வணங்கா கழுத்துள்ளவனாயிராதபடி காத்துக்கொள்ள கிருபை தாரும் (யாத்: 33:3)
2. விசுவாசியாமற்போகும் கடின கழுத்தை என்னை விட்டு அகற்றுகிறேன் (2ராஜா: 17:14)
3. இறுமாப்புள்ள கழுத்தை என்னை விட்டு அகற்றுகிறேன் (சங்: 75:5)
4. கிருபையும் சத்தியத்தையும் கழுத்திலே பூட்டிக் கொள்ள அர்ப்பணிக்கிறேன் (நீதி: 3:3)
5. கழுத்திலுள்ள கட்டுகளை கட்டவிழ்கிறேன் (ஏசா: 52:2)
6. சுமக்ககூடாதிருந்த நுகத்தடியை பிறர்மேல் சுமத்தாதபடி கிருபை தாரும் (அப்: 15:10)
7. கழுத்தில் வரும் பிரச்சினைகளை சுகமாக்கும்: கழுத்து வலி, கழுத்து கட்டி, கழுத்து சுளுக்கு, …
h) நெஞ்சு:
1. நெஞ்சில் உள்ள மதியீனத்தை என்னை விட்டு அகற்றுகிறேன் (நீதி: 22:15)
2. நெஞ்சில் கோபம் குடியேறாதபடி என்னைக் காத்துக் கொள்ள கிருபை தாரும் (பிர: 7:9)
3. கண்ணிகளும் வலைகளுமாகிய நெஞ்சம் என்னை விட்டு விலகுவதாக (பிர: 7:26)
4. பெருமையான நெஞ்சின் வினையை என்னை விட்டு அகற்றுகிறேன் (ஏசா: 10:12)
5. புத்தியற்ற பெருநெஞ்சை என்னை விட்டு அகற்றுகிறேன் (யோபு: 11:12)
6. பிறனை இரகசியமாய் அவதூறு பண்ணுகிற பெருநெஞ்சை அகற்றுகிறேன் (சங்: 101:5)
7. மேட்டிமையான பெருநெஞ்சை என்னை விட்டு அகற்றுகிறேன் (சங்: 101:5)
8. நெஞ்சில் வரும் பெலவீனங்களை நீங்க வேண்டுகிறேன்: நெஞ்சுவலி, நெஞ்சு எரிச்சல், …
i) இருதயம்:
1. கடின இருதயத்தை என்னை விட்டு அகற்றுகிறேன் (யாத்: 7:14)
2. மேட்டிமையான இருதயத்தை என்னை விட்டு அகற்றுகிறேன் (உபா: 8:14)
3. இறுமாப்புள்ள இருதயத்தை என்னை விட்டு அகற்றுகிறேன் (சங்: 131:1)
4. கர்வமுள்ள இருதயத்தை என்னை விட்டு அகற்றுகிறேன் (2ராஜா: 14:10)
5. மாறுபாடான இருதயத்தை என்னை விட்டு அகற்றுகிறேன் (சங்: 101:4)
6. கொடுமையை யோசிக்கும் இருதயத்தை என்னை விட்டு அகற்றுகிறேன் (நீதி: 24:2)
7. துராலோசனையை பிணைக்கும் இருதயத்தை என்னை விட்டு அகற்றுகிறேன் (நீதி: 6:18)
8. துணிகரமான இருதயத்தை என்னை விட்டு அகற்றுகிறேன் (பிர: 8:11)
9. மிருக இருதயத்தை என்னைவிட்டு அகற்றிப்போடுகிறேன் (தானி: 4:16)
10. திருக்குள்ளதும் மகாகேடுள்ளதுமான இருதயத்தை என்னைவிட்டு அகற்றுகிறேன் (எரே: 17:9)
11. மூடத்தனமாய்பேசும் இருதயத்தை என்னை விட்டு அகற்றுகிறேன் (ஏசா:32:26)
12. உணர்வற்ற இருதயத்தை என்னைவிட்டு அகற்றுகிறேன் (ரோம: 1:21)
13. சகோதரர்மேல் மேட்டிமை கொள்ளும் இருதயத்தை என்னைவிட்டு அகற்றுகிறேன் (உபா: 17:18)
14. கற்பனையைவிட்டு வலதுஇடது புறம் சாயாதிருக்கிற இருதயத்தை தந்தருளும் (உபா: 17:18)
15. வேசியின் வழியில் சாயாத இருதயத்தை எனக்குத் தாரும் (நீதி: 7:25)
16. பின்வாங்கிப்போகாத இருதயத்தை தந்தருளும் (உபா: 17:17)
17. ஜீவனுள்ள தேவனைவிட்டு விலகுவதற்கேதுவான அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயத்தை என்னைவிட்டு அகற்றுகிறேன் (எபி: 3:12)
18. வஞ்சிக்கப்படாத இருதயத்தை தந்தருளும் (உபா: 11:16)
19. நரகலான விக்கிரகங்களை என் இருதயம் பின்பற்றாதபடிக்கு ஒப்புக்கொடுக்கிறேன் (எசே: 20:15)
20. என் இருதயம் செல்வத்தினால் மேட்டிமையாகாதபடிக்கு ஒப்புவிக்கிறேன் (எசே: 28:5)
21. என் அழகினால் என் இருதயம் மேட்டிமையாகாதபடிக்கு ஒப்புவிக்கிறேன் (எசே: 28:17)
22. என் வளர்த்தியில் என் இருதயம் மேட்டிமையாகாதபடிக்கு ஒப்புவிக்கிறேன் (எசே: 31:10)
23. காலத்தையும் நியாயத்தையும் அறிகிற இருதயத்தை தாரும் (பிர: 8:5)
24. பலவிதமான அந்நியபோதனைகளால் அலைப்புண்டு திரியாதிருக்கிற இருதயத்தை எனக்கு கிருபையாய் தந்தருளும். போஜனபதார்த்தங்களினாலல்ல, கிருபையினால் இருதயம் ஸ்திரப்பட உதவி செய்தருளும் (எபி:13:9)
25. சத்துருக்களை கண்டு துவளாமலும், பயப்படாமலும், கலங்காமலும் தத்தளிக்காமலும் இருக்கிற இருதயத்தை தாரும் (உபா: 20:3)
26. பலட்சயமான இருதயம் என்னைவிட்டு நீங்கக்கடவது (புல: 1:22)
27. என் இருதயமே என்னை குற்றவாளியாக தீர்க்காதபடிக்கு சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும் (1யோவா: 3:21)
28. போதகத்தை மறவாமலும், கட்டளைகளை காக்கவும் தக்க இருதயத்தை தாரும் (நீதி: 3:1)
29. ஞான எழுப்புதல் அடையும் இருதயமாக மாற்றியருளும் (யாத்: 35:26)
30. அனல் உள்ள இருதயத்தைத் தாரும் (சங்: 39:3)
31. கொழுந்துவிட்டு எரிகிற இருதயத்தை உனக்குத்தாரும் (லூக்: 24:32)
32. என் இருதயம் நல் விசேஷத்தினால் பொங்கும்படி செய்தருளும் (சங்: 45:1)
33. உமது கற்பனைகளை கைக்கொள்ளும் இருதயமாக மாற்றியருளும் (உபா:5:29)
34. மனப்பூர்வமாய் கர்த்தருக்கு ஒப்புக்கொடுக்கிற இருதயத்தை தாரும் (நியா: 5:9)
35. பொருளாசையை சாராத இருதயத்தை எனக்குத் தந்தருளும் (சங்: 119:36)
36. என் இருதயம் நிணந்துன்னிக் கொழுக்காதபடிக்கு கிருபை தாரும் (சங்: 119:70)
37. உமது வசனத்திற்கு பயப்படுகிற இருதயத்தை எனக்குத் தாரும் (சங்: 119:161)
38. கர்த்தருடைய வழிகளில் உற்சாகமடைகிற இருதயமாக மாற்றியருளும் (2நாளா: 17:6)
39. என் இருதயம் என் கண்களை பின்தொடராதபடி கிருபை தாரும் (யோபு: 31:7)
40. இருதயத்தில் வரும் வியாதிகளை குணமாக்கும்: இருதய வியாதி, மாரடைப்பு, இருதய விரிசல், இரத்த அழுத்தம், இருதய ஓட்டை, அதிவேகமான துடிப்பு, வால்வு பிரச்சினை, இருதய கோளாறுகளை குணமாக்கும்
j) கைகள்:
1. அக்கிரம கைகளை என்னைவிட்டு அகற்றுகிறேன் (யோபு: 11:14)
2. என் கைகளிலுள்ள நியாக்கேடுகளை என்னைவிட்டு அகற்றிபோடுகிறேன் (சங்: 7:3)
3. தீவினையுள்ள கைகளையும், பரிதானம் நிறைந்த கைகளையும் என்னை விட்டு அகற்றுகிறேன் (சங்: 26:10)
4. கொடுமை என் கைகளில் இராதபடிக்கு ஒப்புவிக்கிறேன் (யோபு: 16:17)
5. கைகள் இரத்தத்தத்தாலும், விரல்கள் அக்கிரமத்தாலும் கறைபடாதபடிக்கு ஒப்புவிக்கிறேன் (ஏசா: 59:3)
6. ஏதாகிலும் ஒரு மாசு என் கைகளில் ஒட்டிக்கொள்ளாதபடி எனக்கு கிருபை தாரும் (யோபு: 31:7)
7. குற்றமில்லாமையிலே என் கைகளை கழுவ எனக்கு கிருபை தாரும் (சங்: 26:7)
8. திக்கற்றவனுக்கு விரோதமாக என் கையை நீட்டாதபடிக்கு கிருபை தாரும் (யோபு: 31:21)
9. என் சகோதரனுடைய இரத்தத்தை என் சிந்தாதபடிக்கு ஒப்புவிக்கிறேன் (ஆதி: 4:11)
10. இளைத்துப்போன என் கைகளை திடப்படுத்தும் (யோபு: 4:3)
11. பெலவானின் கைக்கும், வாயிலிருக்கும் பட்டயத்திற்கும் தப்புவியும் (யோபு: 5:15)
12. சத்துருக்களின் கைக்கும் என்னை துன்பப்படுத்துகிறவர்களின் கைக்கும் என்னை தப்புவியும் (சங்: 31:15)
13. துன்மார்க்கனுடைய கைக்கும் நியாயக்கேடும் கொடுமையுமுள்ளவனுடைய கைக்கும் தப்புவியும் (சங்: 71:4)
14. முதிர்ந்த வயதில் என்னை தள்ளிவிடாமலும், என் பெலன் ஒடுங்கும்போது என்னைக் கைவிடாமலும் இரும் (சங்: 71:9)
15. எங்கள் கைகளின் கிரியைகளை எங்களிடத்தில் உறுதிப்படுத்தியருளும் (சங்: 90:17)
16. என் கைகளின் பிரயாசத்தை நான் சாப்பிட கிருபை தாரும் (சங்: 128:2)
17. ஓசையுள்ள கைத்தாளங்களோடும், பேரோசையுள்ள கைத்தாளங்களோடும் உம்மை நான் துதிப்பேன் (சங்: 150:5)
18. குற்றமற்றவர்களுடைய இரத்தம் சிந்துங்கை என்னை விட்டு அகற்றுகிறேன் (நீதி: 6:17)
19. வேத பிரமாணத்தை கைக்கொள்ளுகிறவனாக மாற்றும் (நீதி: 28:7)
20. சிறுமையானவர்களுக்கு கையை திறக்கவும், ஏழைகளுக்கு கரங்களை நீட்டவும் கிருபை தாரும் (நீதி: 31:20)
21. இடறல் உண்டாக்காத கைகளை தந்தருளும் (மத்: 18:8)
22. எங்ககைகளினாலே அநேக அற்புதங்களும் அடையாளங்களும் செய்ய கிருபை தாரும் (அப்: 5:12)
23. என் கைகளை சுத்தகரிக்கிறேன் (யாக்: 4:8)
24. உம்முடைய பலத்த கரத்திற்குள் அடங்கியிருக்க ஒப்புவிக்கிறேன் (1பேது: 5:6)
25. கைகளில் வரும் பிரச்சினைகளை குணமாக்கும்:
k) கால்கள்:
1. என் கால்கள் வழுவாதபடிக்கு கிருபை தாரும் (2சாமு: 22:37)
2. என் கால்கள் உமது நெறியை பின்பற்ற ஒப்புவிக்கிறேன் (யோபு: 23:11)
3. என் கால்கள் தள்ளாடுதலுக்கும், என் அடிகள் சறுக்குதலுக்கும் தப்புவியும் (சங்: 73:2)
4. என் கால்கள் தீங்கு செய்ய ஓடாமலும், இரத்தஞ்சிந்த தீவிரிக்காமலும் காத்துக்கொள்ள கிருபை தாரும் (நீதி: 1:16)
5. என் கால்கள் என் வீட்டிலே தங்கி தரித்திருக்க கிருபை தாரும் (நீதி: 7:11)
6. என் கால்கள் சமாதான பாதையில் நடக்க கிருபை தாரும் (ஏசா: 41:3)
7. பொல்லாப்புக்கு என் கால்களை தப்புவியும் (ஏசா: 59:7)
8. மேய்ச்சல்களில் மீதியானதை கால்களால் குழப்பி விடாதபடிக்கு கிருபைதாரும் (எசே: 34:18)
9. கால் ஊனமானதை செலுத்தாதபடிக்கு கிருபைதாரும் (மல்: 1:3)
10. என் கால் எனக்கு இடறலாயிராதபடிக்கு கிருபை தாரும் (மாற்: 9:45)
11. சுவிசேஷகனுடைய பாதங்களை எனக்கு தந்தருளும் (ஏசா: 52:7)
12. கால்களில் வரும் பிரச்சினைகள் தீர உதவி செய்யும்: சேத்து புண், கால் வெடிப்பு, கால் சுளுக்கு, கால் ஆணி, குதிகால் வலி, முழங்கால் வலி, நகசுத்தி, பாத எரிச்சல்,
தானியேல் ஜெபம்
“என் தேவனாகிய கர்த்தரை நோக்கி ஜெபம் பண்ணி, பாவ அறிக்கை செய்து: ஆ ஆண்டவரே, உம்மில் அன்புகூர்ந்து, உம்முடைய கற்பனைகளைக் கைக் கொள்ளுகிறவர்களுக்கு உடன்படிக்கையையும், கிருபையையும் காக்கிற மகத்துவமும் பயங்கரமுமான தேவனே, நாங்கள் பாஞ்செய்து, அக்கிரமக்காரராயிருந்து, துன்மார்க்கமாய் நடந்து, கலகம் பண்ணி, உம்முடைய கற்பனைகளையும் உம்முடைய நியாயங்களையும் விட்டு அகன்றுபோனோம். உமது நாமத்தினாலே … சகல ஜனங்களோடும் பேசின தீர்க்கதரிசிகளாகிய உம்முடைய ஊழியக்காரருக்குச் செவிகொடாமற் போனோம். ஆண்டவரே, நீதி உமக்கே உரியது; உமக்கு விரோதமாகச் செய்த துரோகத்தினிமித்தம் … இந்நாட்களில் இருக்கிறபடியே, வெட்கம் எங்களுக்கே உரியது. ஆண்டவரே, உமக்கு விரோதமாகப் பாவஞ் செய்தபடியால், நாங்களும் … எங்கள் பிதாக்களும் வெட்கத்துக்குரியவர்களானோம். வெருக்கு விரோதமாக நாங்கள் கலகம் பண்ணி, அவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரரைக் கொண்டு எங்களுக்கு முன்பாக வைத்த நியாயப்பிரமாணங்களின்படி நடக்கத்தக்கதாக நாங்கள் அவருடைய சத்தத்துக்குச் செவிகொடாமற் போனோம். ஆனாலும் எங்கள் தேவனாகிய ஆண்டவரிடத்தில் இரக்கங்களும் மன்னிப்புகளும் உண்டு. ஆண்டவரே உமது சர்வ நீதியின்படியே, உமது கோபமும் உமது உக்கிரமும் உம்முடைய பரிசுத்த பர்வதமுமாகிய எருசலேம் என்னும் உம்முடைய நகரத்தை விட்டுத் திரும்பும்படி செய்யும்; எங்கள் பாவங்களினாலும், எங்கள் பிதாக்களின் அக்கிரமங்களினாலும் எருசலேமும் உம்முடைய ஜனமாகிய நாங்களும் எங்கள் சுற்றுப்புறத்தார் யாவருக்கும் நிந்தையானோம். இப்போதும் எங்கள் தேவனே, நீர் உமது அடியானுடைய விண்ணப்பத்தையும் அவனுடைய கெஞ்சுதலையும் கேட்டு, பாழாய்க் கிடக்கிற உம்முடைய பரிசுத்த ஸ்தலத்தின்மேல் ஆண்டவரினிமித்தம் உமது முகத்தைப் பிரகாசிக்கப் பண்ணும். என் தேவனே, உம்முடைய செவியைச் சாய்த்துக் கேட்டருளும்; உம்முடைய கண்களைத்திறந்து, எங்கள் பாழிடங்களையும், உமது நாமம் தரிக்கப்பட்டிருக்கிற நகரத்தையும் பார்த்தருளும்; நாங்கள் எங்கள் நீதிகளை அல்ல, உம்முடைய மிகுந்த இரக்கங்களையே நம்பி, எங்கள் விண்ணப்பங்களை உமக்கு முன்பாகச் செலுத்துகிறோம். ஆண்டவரே கேளும், ஆண்டவரே மன்னியும், ஆண்டவரே கவனியும்; என் தேவனே, உம்முடைய நிமித்தமாக அதைத் தாமதியாமல் செய்யும்; உம்முடைய நகரத்துக்கும் உம்முடைய ஜனத்துக்கும் உம்முடைய நாமம் தரிக்கப்பட்டிருக்கிறதே” (தானி: 9:4-10; 16-19).