ஏப்ரல் 16, 2015

பேசுகிற விதம்


பேசுகிற விதம்

1. சாரமானப் பேச்சு:  (சுவை தரும் பேச்சு)

மாற்கு: 9:50 - "... உப்பானது சாரமற்றுப் போனால்..."

அ)  வாழ்க்கைக்கு தொடர்புடையதாக இருக்க வேண்டும்:

பிறந்நாள், திருமணநாள், குழந்தைப் பிறப்பு, நினைவு நாள், ... 

ஆ)  தெரிந்த விஷயங்களிலிருந்து தெரியாதவைகளுக்கு ... நடத்த வேண்டும்:

அப்போஸ்தலர்: 17:23 - "... நான் சுற்றித் திரிந்து... கவனித்துப் பார்த்தபொழுது..."

தினசரி நாளிதழ்கள் - வரும் அன்றாட நிகழ்வுகள் - அனைவரும் அறிந்திருக்கக்கூடிய  முக்கிய தகவல்கள் - இரத்த தானம், உடலுறுப்புகள் தானம் செய்தவர்கள்... வீரதீர செயல்கள் செய்தவர்கள்...

2. சுவையானப் பேச்சு:

* தெளிவு - 1கொரிந்தியர்: 14:8,9

* அழுத்தம் - வலியுறுத்துதல்

* உயிரோட்டம் - சங்கீதம்: 23 அதிகாரம்.

* விருப்பத்தை தூண்டும் வகையில்

* உங்கள் படைப்பாற்றல் வெளிப்படும் வகையில்

* கவனத்தை திருப்ப வேண்டும்.

3. சிக்கனப் பேச்சு: (சுருக்கம்)

4. முகபாவம்:

* மாய்மாலம் வேண்டாம்

* முகத்தில் பிரகாசம்

* உள்ளான கரிசனையை வெளிப்படுத்தவதாக இருத்தல்

* கண்களை நோக்கி

5. தோற்றம்: 

* புத்துணர்ச்சி மற்றும் புதுப் பொலிவு

* சுத்தமாக

* சூழ்நிலைக்கு ஏற்ற விதமாய் (ஆடைகள்)

6. உட்காரும் நிலை:

* ஈடுபாடு

* கவனித்தல்

* கூடாதவை:  அசட்டை மற்றும் அவமரியாதை (கால் மேல் கால் போட்டு அமருதல்)

ஊடகம்:

- கடிதம்

- ஆடியோ

- கணிணி

- ஈ மெயில்

- செல் மற்றும் தொலை பேசி

இதெல்லாம் அக்கறை காட்டாது.

ஆலோசனை படிகள்:

தனி ஒரு மனிதரை சந்திக்கும்போது...

* வாழ்த்து நிலை

* தகவல் நிலை

* கருத்து நிலை

* உணர்வு நிலை

* முழுமையான / வெளிப்படையான நிலை - உணர்ச்சி வசம்

தனக்குத்தானே தன்னோடு செய்யும் பரிமாற்றம்:

* சிறப்பான தனிநபர் பரிமாற்றத்திற்கு, தன்னோடு செய்யும் பரிமாற்றம் சிறப்பானதாக இருக்க வேண்டும்

தன்னோடு செய்யும் பரிமாற்றம் சிறப்பானதாக இருக்க வேண்டுமானால்  ...

- தேவனோடு நெருங்கிய உறவு இருக்க வேண்டும்

உங்களை நீங்கள் எவ்விதமாய் பார்க்கிறீர்கள்?  - இதை வைத்துத்தான் உங்கள் ஊழியத்தில் வல்லமை வெளிப்பட உதவும்...

உதாரணம்: 1.  நேர்மறை சிந்தை:

 - லூக்கா: 15:17 - கெட்ட குமாரனின் நேர்மறை சிந்தை

- உதிரப்போக்குள்ள ஸ்திரியின் நேர்மறை சிந்தை

உதாரணம்: 2. எதிர்மறை சிந்தை:

- 2இராஜாக்கள்: 5:11-12 - நாகமானின் எதிர்மறை சிந்தை

- 2இராஜாக்கள்: 7:2 - ராஜாவுக்கு கைலாகு கொடுக்கிற பிரதானியின் எதிர்மறை சிந்தை

*** நாம் தேவ அனபினால் நிலைத்திருந்தால் மட்டுமே உலகத்திற்கு அதனைக் கொடுக்க முடியும்.

  • பரிசுத்தாவியின் வல்லமை
  • வசனத்தில் வல்லமை
  • துதியில் வல்லமை
  • ஐக்கியத்தில் வல்லமை
இவைகளில் வளரனும். வளர்ந்திருக்கனும்.

நாம் செய்து கொண்டிருக்கும் காரியத்தில் இனி நாம் ஒரு மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும்.

ஒன்றையே நாம் மாற்றமே இல்லாமல் செய்து கொண்டிருப்போமானால்... எந்தவிதமான வளர்ச்சியும் இல்லை.


அந்தரங்க வாழ்வில் உத்தமம்


அந்தரங்க வாழ்வில் உத்தமம்

தேவ திட்டத்தில் பாலினம்: (ஆதியாகமம்: 2:24,25)

"இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள். ஆதாமும் அவன் மனைவியுமாகிய இருவரும் நிர்வாணிகளாயிருந்தும், வெட்கப்படாதிருந்தார்கள்"

பாலினம் சிருஷ்டிப்பின் திட்டம்: (ஆதியாகமம்: 2:24)

"இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்."

மத்தேயு: 19:4-6 - "... ஆதியிலே மனுஷரை உண்டாக்கினவர் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார் என்பதையும், இதினிமித்தம் புருஷனானவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டுத் தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள் என்று அவர் சொன்னதையும், நீங்கள் வாசிக்கவில்லையா? இப்படி இருக்கிறபடியினால், அவர்கள் இருவராயிராமல், ஒரே மாம்சமாயிருக்கிறார்கள்; ஆகையால், தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன் என்றார்."

மல்கியா: 2:15 - "அவர் ஒருவனையல்லவா படைத்தார்? ஆவி அவரிடத்தில் பரிபூரணமாயிருந்ததே, பின்னை ஏன் ஒருவனைப் படைத்தார்? தேவபக்தியுள்ள சந்ததியைப் பெறும்படிதானே. ஆகையால், ஒருவனும் தன் இளவயதின் மனைவிக்குத் துரோகம் பண்ணாதபடிக்கு, உங்கள் ஆவியைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்".

திருமணத்திற்கு வெளியே பாலுறவு - பாவமானது: (1கொரிந்தியர்: 6:18-20)

"வேசித்தனத்திற்கு விலகியோடுங்கள், மனுஷன் செய்கிற எந்தப் பாவமும் சரீரத்திற்குப் புறம்பாயிருக்கும்; வேசித்தனஞ் செய்கிறவனோ தன் சுய சரீரத்திற்கு விரோதமாய்ப் பாவஞ் செய்கிறான். உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா? கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே; ஆகையால், தேவனுக்கு உடையவைகளாகிய உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள்".

திருமணத்திற்கு வெளியே பாலுறவு பாவமானது. அது சரீரத்தை தீட்டுப்படுத்துவதோடு, ஆவி ஆத்மாவையும் கறைப்படுத்துகிறது.

ஒவ்வொருவரும் கற்பிலே வெற்றியோடு வாழ வேண்டும்:

1. பார்வையும் மனத்திட்டமும்:

உதாரணம்: 2சாமுவேல்: 11 அதிகாரம் - தாவீது - பத்சேபா - பார்வையில் பாவம் உருவாகுதல்

Image result for david and bathsheba cartoon



2. தொடுதலும் உணர்ச்சியும்: 

உதாரணம்: ஆதியாகமம்: 39 அதிகாரம் - யோசேப்பு - போத்திபார் மனைவி

Image result for Integrity in the private life

(நரி - போத்திபார் மனைவி //  திராட்சை - யோசேப்பு)

யோசேப்பு கிடைக்கவில்லையென்பதால் வீண் பழி குற்றச்சாட்டை சுமத்துவது இப்படிப்பட்ட வேசித்தன ஆவியின் வேலையாக இருக்கும்.