மே 01, 2019

நேசரின் தோட்டம் ஏஜி சபையின் போதகர். சார்லஸ் அவர்கள் எழுதிய பாடல்



அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே
அன்பை தவிர ஒன்றும் என்னில் இல்லையே

சிதறுண்டு அலைகின்ற ஆட்டை போலானேன்
சீக்கிரமாய் மேய்ப்பனவர் மீட்டுக்கொண்டாரே

பாவச்சேற்றில் வீழ்ந்து நான் மூழ்கிப்போனேனே
நாதன் இயேசு ஓடி வந்து தூக்கிவிட்டாரே

என்னை மீட்ட இயேசுவுக்கு என்ன கொடுப்பேன்
என்ன செய்வேன் ஒன்றுமில்லை என்னையே தந்தேன்

துக்கத்திலே கண்ணீரே என் உணவாயிற்று
கலங்காதே என்று என்னை ஆற்றித்தேற்றினார்

பள்ளத்தாக்கில் நடந்தாலும் பங்கம் இல்லையே
பரமன் என்னோடிருக்க பயமில்லையே

ஆறுகளை கடந்தாலும் அழிவில்லையே
அருள்நாதர் அங்கிருக்க அல்லல் இல்லையே

என்னை ஆளும் நேசத்துக்கு என்ன ஈடுண்டோ
என்ன செய்வேன் ஒன்றுமில்லை என்னையே தந்தேன்



 01.03.1996 அன்று வெள்ளி கிழமை மாலை 3 மணிக்கு தேவ சமூகத்தில் காத்திருந்த போது,  இப்பாடலை தேவன் இவருக்கு தந்தார். இப்பாடலை கேட்டு மகிழுங்கள். தேவனின் அன்பை ருசியுங்கள். ஆமென்!

https://youtu.be/SjCpZ9TtVWw

மே மாத வாக்குத்தத்த வசனம் 2019


இந்த  வசனத்தின்படி இந்த மாத முழுவதும் தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்!