மார்ச் 23, 2019

பலவீனப்பட்டவன் ஒருவனுமில்லை


பலவீனப்பட்டவன் ஒருவனுமில்லை
   (Not One  Feeble Person Among Them)

திறவுகோல்வசனம்: சங்: 105:37 – “அவர்கள் கோத்திரங்களில் பலவீனப்பட்டவன் ஒருவனும் இருந்ததில்லை.”

எபிரெய சொல்: Amelal – எம்மீலால் – பலவீனன்; பலவீனப்பட்டவன்

கிரேக்க சொல்: astheneó ஆஸ்த்தினியோ - பலவீனன்; பலவீனப்பட்டவன்

வாழ்க்கை பயணத்தில் நமது பலம் நம் நாளுக்கு சமமாக இருக்கும். எகிப்திலும் இஸ்ரவேலிலும் உள்ள வித்தியாசத்தை பாருங்கள் - எகிப்தில் ஒவ்வொரு வீட்டிலும் இறந்த ஒருவர், இஸ்ரவேல் புத்திரரில் ஒவ்வொருவரும் உயிருடன்.

மற்றொன்று, மருத்துவச்சிகள் போவதற்கு முன்னமே, இஸ்ரேலிய பெண்கள் பிரசவித்தனர். ஏனெனில், அவர்கள் பலமுள்ளவர்கள்.

யாத்: 15:26 – “நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், நான் எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்ணேன்; நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் என்றார்.”

சத்தியம் நம்மை பலவீனத்திலிருந்து விடுதலையாக்கும்.

ப.ஏ.ல் வந்த நோய்கள் அனைத்தும் பாவிகளுக்கும், துன்மார்க்கருக்கும் வரவேண்டிய வியாதிகள். (குஷ்டம், கூன், குருடு, முடம், கழலை). அடிமையாய் இருந்தபோதும், கர்த்தரைப் பின்பற்றி வனாந்திரத்தில் வந்தபோதும் இப்படிப்பட்ட வியாதிகளினால் ஒருவனும் பலவீனப்பட்டுப் போகவில்லை.

வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறபோதுதான் இதெல்லாம் வந்தது. காரணம்? கர்த்தருடைய கட்டளைகளை மீறி நடந்ததே.

எகிப்தில் வந்த 10 வாதைகளும் அவர்கள் வழிபட்டு வந்த 10 தெய்வங்கள். பார்வோன் விக்கிரக ஆராதனைக்காரன். எனவே அந்த விக்கிரகவழிபாடு செய்யும் ஜனங்களிடமிருந்து விடுதலையடைந்து வந்த இஸ்ரவேல் ஜனங்களுக்கு கர்த்தர் இந்த வார்த்தைகளை கொடுக்கிறார்.

1. கர்த்தருடைய வார்த்தையை கவனமாக கேள்
2. பார்வைக்கு செம்மையானவைகளை செய்
3. கட்டளைகளுக்கு செவிகொடு
4. நியமங்கள் யாவையும் கைக்கொள்

இந்த காரியங்களை கடைப்பிடித்து வாழ்ந்தால் எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றும் நம்மை அணுகாது.

ஏசா: 53:4 – “மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்;”
மத்: 8:17 – “அவர் தாமே நம்முடைய பெலவீனங்களை ஏற்றுக்கொண்டு, நம்முடைய நோய்களைச் சுமந்தார் என்று, ஏசாயா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது”

பரிதபிக்கும் பிரதான ஆசாரியனும் பாவமில்லாத பிரதான ஆசாரியனும்


எபி: 5:1-3 – “அன்றியும், மனுஷரால் தெரிந்துகொள்ளப்பட்ட எந்தப் பிரதான ஆசாரியனும் பாவங்களுக்காகக் காணிக்கைகளையும் பலிகளையும் செலுத்தும்படி, மனுஷருக்காக தேவகாரியங்களைப்பற்றி நியமிக்கப்படுகிறான். தானும் பலவீனமுள்ளவனான படியினாலே அறியாதவர்களுக்கும் நெறிதப்பிப்போனவர்களுக்கும் இரங்கத்தக்கவனாயிருக்கிறான். அதினிமித்தம் அவன் ஜனங்களுடைய பாவங்களுக்காகப் பலியிடவேண்டியதுபோல, தன்னுடைய பாவங்களுக்காகவும் பலியிட வேண்டியதாயி ருக்கிறது”

"அவர் பரிதபிக்கிற பிரதான ஆசாரியரல்ல; பாவங்களை நிவர்த்தி செய்கிற பிரதான ஆசாரியர்."

எபி: 4:15 – “நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்.”

மெல்கிசெதேக்கின்படி இயேசு பிரதான ஆசாரியர் ஆனது எப்படி?


எபி: 7:11-20 – “அல்லாமலும், இஸ்ரவேல் ஜனங்கள் லேவிகோத்திர ஆசாரிய முறைமைக்குட்பட்டிருந்தல்லவோ நியாயப்பிரமாணத்தைப் பெற்றார்கள்; அந்த ஆசாரிய முறைமையினாலே பூரணப்படுதல் உண்டாயிருக்குமானால், ஆரோனுடைய முறைமையின்படி அழைக்கப்படாமல், மெல்கிசேதேக்கினுடைய முறைமையின்படி அழைக்கப்பட்ட வேறொரு ஆசாரியர் எழும்பவேண்டுவதென்ன? ஆசாரியத்துவம் மாற்றப்பட்டிருக்குமேயானால், நியாயப்பிரமாணமும் மாற்றப்படவேண்டியதாகும். இவைகள் எவரைக்குறித்துச் சொல்லப்பட்டிருக்கிறதோ, அவர் வேறொரு கோத்திரத்துக்குள்ளானவராயிருக்கிறாரே; அந்தக் கோத்திரத்தில் ஒருவனாகிலும் பலிபீடத்து ஊழியம் செய்ததில்லையே. நம்முடைய கர்த்தர் யூதாகோத்திரத்தில் தோன்றினாரென்பது பிரசித்தமாயிருக்கிறது; அந்தக் கோத்திரத்தாரைக்குறித்து மோசே ஆசாரியத்துவத்தைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லையே. அல்லாமலும், மெல்கிசேதேக்குக்கு ஒப்பாய் வேறொரு ஆசாரியர் எழும்புகிறாரென்று சொல்லியிருப்பதினால், மேற்சொல்லியது மிகவும் பிரசித்தமாய் விளங்குகிறது. அவர் மாம்ச சம்பந்தமான கட்டளையாகிய நியாயப்பிரமாணத்தின்படி ஆசாரியராகாமல், நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர் என்று சொல்லிய சாட்சிக்குத்தக்கதாக அழியாத ஜீவனுக்குரிய வல்லமையின்படியே ஆசாரியரானார். முந்தின கட்டளை பெலவீனமுள்ளதும் பயனற்றதுமாயிருந்ததினிமித்தம் மாற்றப்பட்டது. நியாயப்பிரமாணமானது ஒன்றையும் பூரணப்படுத்தவில்லை, அதிக நன்மையான நம்பிக்கையை வருவிப்பதோ பூரணப்படுத்துகிறது; அந்த நம்பிக்கையினாலே தேவனிடத்தில் சேருகிறோம். அன்றியும், அவர்கள் ஆணையில்லாமல் ஆசாரியராக்கப்படுகிறார்கள்; இவரோ: நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர் என்று கர்த்தர் ஆணையிட்டார், மனம்மாறாமலும் இருப்பார் என்று தம்முடனே சொன்னவராலே ஆணையோடே ஆசாரியரானார்.”

எபி: 7:24-28 – “இவரோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறபடியினாலே, மாறிப்போகாத ஆசாரியத்துவமுள்ளவராயிருக்கிறார். மேலும், தமது மூலமாய் தேவனிடத்தில் சேருகிறவர்களுக்காக வேண்டுதல்செய்யும்படிக்கு அவர் எப்பொழுதும் உயிரோடிருக்கிறவராகையால் அவர்களை முற்றுமுடிய இரட்சிக்க வல்லவராயுமிருக்கிறார். பரிசுத்தரும், குற்றமற்றவரும், மாசில்லாதவரும், பாவிகளுக்கு விலகினவரும், வானங்களிலும் உயர்ந்தவருமாயிருக்கிற இவ்விதமான பிரதான ஆசாரியர் நமக்கு ஏற்றவராயிருக்கிறார். அவர் பிரதான ஆசாரியர்களைப்போல முன்பு சொந்தப் பாவங்களுக்காகவும், பின்பு ஜனங்களுடைய பாவங்களுக்காகவும் நாடோறும் பலியிடவேண்டுவதில்லை; ஏனெனில் தம்மைத்தாமே பலியிட்டதினாலே ஒரேதரம் செய்து முடித்தார். நியாயப்பிரமாணமானது பெலவீனமுள்ள மனுஷர்களைப் பிரதான ஆசாரியராக ஏற்படுத்துகிறது; நியாயப்பிரமாணத்திற்குப்பின்பு உண்டான ஆணையோடே விளங்கிய வசனமோ என்றென்றைக்கும் பூரணரான குமாரனை ஏற்படுத்துகிறது.”

கர்த்தருடைய பிள்ளைகள் பலவீனருக்கு எப்படி இருக்க வேண்டும்?


பலவீனருக்காக எரியும் மனம்:

ரோம: 15:1-3 – “அன்றியும், பலமுள்ளவர்களாகிய நாம் நமக்கே பிரியமாய் நடவாமல், பலவீனருடைய பலவீனங்களைத் தாங்க வேண்டும். நம்மில் ஒவ்வொருவனும் பிறனுடைய பக்திவிருத்திக்கேதுவான நன்மையுண்டாகும்படி அவனுக்குப் பிரியமாய் நடக்கக்கடவன். கிறிஸ்துவும் தமக்கே பிரியமாய் நடவாமல்: உம்மை நிந்திக்கிறவர்களுடைய நிந்தைகள் என்மேல் விழுந்தது என்று எழுதியிருக்கிறபடியே நடந்தார்.”

- பலவீனமாயிருக்கிற சத்தியமறியாதவர்கள், படிப்பறிவில்லாதவர்கள், விசுவாசமில்லாதவர்கள் போன்றவர்களை தாங்க வேண்டும்.

"நம்முடைய விசுவாசம் மற்றவர்களை பலவீனப்படுத்தாமல் பலப்படுத்தப்படுகிறவைகளாக இருக்க வேண்டும்."

2கொரி: 11:29 – “ஒருவன் பலவீனனானால் நானும் பலவீனனாகிறதில்லையோ? ஒருவன் இடறினால் என் மனம் எரியாதிருக்குமோ?” 

– நமக்கு ஒரு பொறுப்புணர்வு, உக்கிராணத்துவம் உண்டு.

பலவீனத்திற்கான காரணங்களும் பரிகாரங்களும்


1.   வியாதி பெலவீனம்:


காரணம்:

1கொரி: 11:30 – “இதினிமித்தம், உங்களில் அநேகர் பலவீனரும் வியாதியுள்ளவர்களுமாயிருக்கிறார்கள்; அநேகர் நித்திரையும் அடைந்திருக்கிறார்கள்.”

கர்த்தருடைய கட்டளைகளை மீறி நடப்பதினால், வியாதி பலவீனம் வருகிறது.

1கொரி: 11:29 – “என்னத்தினாலெனில், அபாத்திரமாய்ப் போஜனபானம்பண்ணுகிறவன், கர்த்தருடைய சரீரம் இன்னதென்று நிதானித்து அறியாததினால், தனக்கு ஆக்கினைத்தீர்ப்பு வரும்படி போஜனபானம் பண்ணுகிறான்.”

- திருவிருந்தை பயத்துடனும் பக்தியுடனும் ஆசரிக்க வேண்டும். பரிசுத்தமாய் வாழ வேண்டும்.

பரிகாரம்:

தவறு செய்து விட்டால், தாவீதை போல் உபவாசமிருந்து ஜெபிக்க வேண்டும். நாம் உபவாசமிருந்து ஜெபிக்கும் போது நம்மை நாமே நிதானிக்க செய்வார்.

"நம் நல்மனசாட்சிக்கு உயிர் கொடுப்பது உபவாசம்."

1கொரி: 11:31,32 – “நம்மை நாமே நிதானித்து அறிந்தால் நாம் நியாயந்தீர்க்கப்படோம். நாம் நியாயந்தீர்க்கப்படும்போது உலகத்தோடே ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதபடிக்கு,   கர்த்தராலே  சிட்சிக்கப்படுகிறோம்.”

"உபவாசம் என்பது நம்மை நாமே பார்க்கும் கண்ணாடி."

நாம் நியாயத்தீர்ப்பில் இடப்பக்கம் நிற்காமல் இருப்பதற்கு பூமியிலிருக்கும் போதே, உபவாசமிருந்து கர்த்தராலே சிட்சிக்கப்படவேண்டும். 

2.   விசுவாச பெலவீனம்:

ரோம: 4:19 – “அவன் விசுவாசத்திலே பலவீனமாயிருக்கவில்லை; அவன் ஏறக்குறைய நூறு வயதுள்ளவனாயிருக்கும்போது, தன் சரீரம் செத்துப்போனதையும், சாராளுடைய கர்ப்பம் செத்துப்போனதையும் எண்ணாதிருந்தான்.”

வாழ்வில் பிரச்சனைகள் வந்தாலும் விசுவாசம் பலவீனப்படக்கூடாது. ஆபிரகாம் 100 வயது வரையிலும் பிள்ளையில்லாதிருந்தும் அவன் விசுவாசம் குறையவில்லை.

"தேவன் உனக்கு கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் அவர் மேல் விசுவாசம் வை; நீ விரும்பும் யாவும் திரும்ப கொடுக்கப்படும்"

சாராளின் கர்ப்பம் செத்து போனது. இருந்தாலும் அவர்களின் விசுவாசம் குறையவில்லை. வாக்களித்த தேவனை மேலும் விசுவாசித்தார்கள்.

        "செத்து போனவைகளை பார்க்காதே;              
உயிருள்ள இயேசுவை நோக்கி பார்!"

ரோம: 14:1 – “விசுவாசத்தில் பலவீனமுள்ளவனைச் சேர்த்துக் கொள்ளுங்கள்; ஆனாலும் அவனுடைய மன ஐயங்களைக் குற்றமாய் நிர்ணயிக்காமலிருங்கள்.”

எபி: 11:34 – “அக்கினியின் உக்கிரத்தை அவித்தார்கள், பட்டயக்கருக்குக்குத் தப்பினார்கள், பலவீனத்தில் பலன்கொண்டார்கள், யுத்தத்தில் வல்லவர்களானார்கள், அந்நியருடைய சேனைகளை முறியடித்தார்கள்.” – விசுவாசத்தினாலே – அதிகாரம் முழுவதும்

3.   மாம்ச பெலவீனம்:

மத்: 26:41 – “நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்; ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார்.”

ரோம: 6:19 – “உங்கள் மாம்ச பலவீனத்தினிமித்தம் மனுஷர் பேசுகிற பிரகாரமாய்ப் பேசுகிறேன். அக்கிரமத்தை நடப்பிக்கும்படி முன்னே நீங்கள் உங்கள் அவயவங்களை அசுத்தத்திற்கும் அக்கிரமத்திற்கும் அடிமைகளாக ஒப்புக்கொடுத்ததுபோல, இப்பொழுது பரிசுத்தமானதை நடப்பிக்கும்படி உங்கள் அவயவங்களை நீதிக்கு அடிமைகளாக ஒப்புக்கொடுங்கள்.”

ரோம: 8:2,3 – “கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே. அதெப்படியெனில், மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததை தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்.”

4.   ஜெபத்தில் பெலவீனம்:

ரோம: 8:26 – “அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல் செய்கிறார்.”

5.   தேவனுடைய பலவீனம்:


1கொரி: 1:27 – “…பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார்”

- பலவீனமான நம்மை பலமுள்ளவர்களாக மாற்றவும், பலமுள்ளவர்களை அவமாக்கவும் நம்மை தேவன் தெரிந்து கொண்டார். 

"கோலியாத்தை வீழ்த்த பலமுள்ள ஆயுதத்தை அல்ல; பலவீனமான
 கல்லைக் கொண்டு, பலவீனமான தாவீது மூலமாக பலமுள்ள கோலியாத்தை தேவன் ஜெயித்தார்."

1கொரி: 1:29 – “மாம்சமான எவனும் தேவனுக்கு 0முன்பாகப் பெருமை பாராட்டாதபடிக்கு அப்படிச் செய்தார்.”

2கொரி: 13:3 – “கிறிஸ்து எனக்குள்ளே பேசுகிறாரென்பதற்கு அத்தாட்சி தேடுகிறீர்களே; அவர் உங்களிடமாய்ப் பலவீனரல்ல, உங்களிடத்தில் வல்லவராயிருக்கிறார்.”

2கொரி: 13:4 – “ஏனெனில் அவர் பலவீனத்தால் சிலுவையில் அறையப்பட்டிருந்தும், தேவனுடைய வல்லமையினால் பிழைத்திருக்கிறார்; அப்படி நாங்களும் அவருக்குள் பலவீனராயிருந்தும், உங்களிடமாய் விளங்கிய தேவனுடைய வல்லமையினால் அவருடனேகூடப் பிழைத்திருப்போம்.”

முடிவுரை:

பலவீனம் பற்றிய அப்.பவுலின் சாட்சி …

2கொரி: 12:9 – “அதற்கு அவர்: என் கிருபை உனக்குப்போதும்; 
பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார். ஆகையால், கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக் குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன்”

2கொரி: 12:10 – “அந்தப்படி நான் பலவீனனாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன்; ஆகையால் கிறிஸ்துவினிமித்தம் எனக்குவரும் பலவீனங்களிலும், நிந்தைகளிலும், நெருக்கங்களிலும், துன்பங்களிலும், இடுக்கண்களிலும் நான் பிரியப்படுகிறேன்.”                          
பிலி: 4:13 – “என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு.”

 ஆமென்!