பிப்ரவரி 03, 2016

தன் சிறப்பை மறந்தவர்கள்...

Image result for eagle and chicken

கழுகு முட்டை ஒன்றை கோழி முட்டைகளுடன் ஒருவன் கலந்து வைத்து விட்டான். கோழி முட்டைகள் பொரிந்து வெளியே வரும்நாள் வந்தபோது கழுகுகுஞ்சும் வெளியே வந்தது. கழுகு குஞ்சும் கோழி குஞ்சுகளுடன் சேர்ந்து வளர்ந்தது. கோழி குஞ்சுகளுடனேயே தானியங்களையும் புழுக்களையும் தின்று வளர்ந்தது. 

ஒருமுறை கோழிகுஞ்சுகளை தின்பதற்காக வட்டமிட்ட கழுகு ஒன்று, கழுகு குஞ்சை பார்த்து விட்டது. தன் இன குஞ்சு ஒன்று கோழிக் குஞ்சுகளுடன் உலா வருவதை பார்த்து ஆச்சரியப்பட்டது.

கழுகு நேர பறந்து வந்து கழுகு குஞ்சினை பார்த்து சொன்னது. "ஏய், நீ நம்ம இனம். வானத்தில் அரசனைப்போல உலா வருகிறவன். ஏன் இந்த குப்பை மேட்டை கிளறிக் கொண்டிருக்கிறாய்? நீ என்னோடு வந்து விடு. உன்னை வானத்தில் பறக்க வைக்கிறேன்" என அழைத்தது. 

அதற்கு கழுகு குஞ்சு, "நான் ஒரு கோழிக்குஞ்சு, நீ என்னை ஏமாற்றி சாப்பிட நினைக்கிறாய். உன் தந்திர பேச்சுக்களை நான் நம்ப மாட்டேன்" எனக்கூறி மற்ற கோழி குஞ்சுகளுடன் ஓடி ஒளிந்து கொண்டது.

* கிறிஸ்துவுக்குள் நாம் யார்? என்பதை அறிந்திராவிட்டால்... நாம் வெற்றி சிறக்க முடியாது

* உலகம் நம்மைப்பற்றி என்ன சொல்கிறது என்பதல்ல... தேவன் நம்மைப்பற்றி என்ன சொல்கிறார் என்பதே முக்கியம். அதுவே உண்மை

* தேவன் நம்மைக் குறித்து சொன்னவைகளை நம்புவதே விசுவாசம். ஜனங்களுடைய வார்த்தைகள் அவிசுவாசத்தை ஏற்படுத்தும்

* தன் சிறப்பை மறந்த எத்தனையோ தேவ பிள்ளைகள் இன்னும் பாவத்திலிருந்து விடுபடாமல் குப்பைகளில் தங்களது ஆசீர்வாதங்களை தேடிக் கொண்டிருக்கிறார்கள்

* தன் சிறப்பை மறந்தவர்கள்... வேதத்தில் நமக்கு திருஷ்டாந்தங்களாக வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களது பட்டியல் கொஞ்சம் நீளம்தான்...

1. யூதாஸ்காரியோத்து
2. லோத்து
3. லோத்தின் மனைவி
4. ஏசா
5. கேயாசி
6. சவுல்
7. கோராகு
8. தேமா
9. அனனியா, சப்பீராள்
10. வஸ்தி